11 மே 2020

இல்லற வாழ்வை இன்புற வாழ மறக்கக்‌ கூடாத விதிகள்‌ - Tantra Book Page - 494

Illara valvai inbuttru vaazha vidhigal, Thantra vazhiyil thambathiya valkkai book, podhi pravesh author

 இல்லற வாழ்வை இன்புற வாழ மறக்கக்‌ கூடாத விதிகள்‌.

Illara valvai inbuttru vaazha vidhigal, Thantra vazhiyil thambathiya valkkai book, podhi pravesh author

  •  இல்லற வாழ்வில்‌ நிலவும்‌ சண்டைகள்‌ அனைத்திற்கும் மூல காரணம்‌.
  • கணவனின்‌ மீது வெறுப்பு மூல காரணம்‌.

1) மூளை தான்‌ உண்மையான பாலுறுப்பு.
2) மூளையை மயக்காத வரை பெண்ணின்‌ உடலில்‌ இன்பம்‌ நிகழாது.
3) மனைவிக்கு எது பிடித்திருக்கிறது என்பதைக்‌ கேட்டுத்‌ தெரிந்து கொண்டு செயலாற்றவும்‌.
4) மனைவிக்குப்‌ பிடிக்காத எந்த வழி முறையிலும்‌, உச்ச கட்ட இன்பத்தை நிகழ்த்த முடியாது.
5) கணவனின்‌ செயல்‌ மனைவிக்குப்‌ பிடிக்கவில்லையென்றால்‌, முன்‌ விளையாட்டுக்கள்‌ போதவில்லை என்று பொருள்‌.
6) இங்கே சொல்லியுள்ள படி, தந்த்ரா பூஜைகளைச்‌ செய்தால்‌ எப்படிப்‌ பட்ட பெண்ணின்‌ மனமும்‌ இக்கணத்திற்கு வந்து விடும்‌.
7) ஆகவே, தந்த்ரா பூஜைகளைச்‌ செய்ய சிக்கனம்‌ கூடாது.
8) மனைவியின்‌ உடல்‌ எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறது என்பதை விழிப்புடன்‌ கவனித்த படியே செயலாற்றவும்‌.
9) குறிப்பாக மனைவியின்‌ சுவாசத்தைக்‌ கவனித்த படியே செயல்‌ படவும்‌.
10) செயல்படும்‌ விதத்தை மாற்றிக்‌ கொண்டேயிருக்கக்‌ கூடாது.
11) வேகம்‌ என்பது வியாதி. எனினும்‌, உச்ச கட்ட இன்பம்‌ நெருங்கும்‌ வேளையில்‌ வேகத்தைச்‌ சற்றே அதிகரிக்கலாம்‌.
12) வேக மாற்றத்தை மனைவியின்‌ மூளை அறிந்து விடக்‌ கூடாது.
13) மனைவிக்குரிய இன்பம்‌ நிகழும்‌ முன்பாக கணவன்‌ தன்னுடைய இன்பத்தைப்‌ பற்றி எண்ணிக்‌ கூடப்‌ பார்க்கக்‌ கூடாது.
14) பகலிலேயே ஒரு குறிப்புச்‌ செயலின்‌ மூலம்‌ தெரிவித்து, மனைவியின்‌ மூளையில்‌ ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி விட வேண்டும்‌.
15) இன்பத்துய்ப்பு ஒரு தவம்‌. ஆகவே, நேர அளவுகளை நிர்ணயித்துச்‌ செயல்‌ படக்‌ கூடாது.
16) எடுத்தவுடன்‌ முக்கிய பகுதிகளைத்‌ தொடக்‌ கூடாது. அதே போல, எடுத்தவுடன்‌ லிங்கத்தைப்‌ பயன்படுத்தக்‌ கூடாது. தனியொரு லிங்கத்தால்‌, மனைவிக்குரிய எந்த இன்பத்தையும்‌ வழங்க முடியாது.
17) மனைவியை வற்புறுத்தி இன்பம்‌ துய்க்கக்‌ கூடாது.
18) நாவையும்‌, விரலையும்‌ பயன்படுத்த ஒரு போதும்‌ தயங்கக்‌ கூடாது.
19) இன்பத்‌ துய்ப்பின்‌ போது, ஆணாதிக்கவாதியாகச்‌ செயல்‌ படக்‌ கூடாது.
20) துய்ப்பு முடிந்தவுடனே கழிவறை நோக்கி ஒட்டம்‌ பிடிக்கக்‌ கூடாது.
21) மாதாமாதம்‌ ஈடுபடும்‌ முறைகளை மாற்றிக்‌ கொண்டே இருக்கவும்‌.
22) படுக்கையறையில்‌ ஐந்து வயதிற்கு மேலான குழந்தை இருக்கக்‌ கூடாது.
23) அரவம்‌ கேட்டால்‌ ஆணுக்கு இன்பம்‌ நிகழ்ந்து விடும்‌. மனைவியின்‌ இன்பம்‌ நழுவிப்‌ போய்‌ விடும்‌.
24) நல்லுறவு இல்லாத போது தான்‌, பாலுறவு முக்கியம்‌.
25) உச்ச கட்டப்‌ பாலின்பம்‌ உருவாக்கும்‌ அன்பையும்‌, அதிசயத்தையும்‌ வேறெந்த மந்திரத்தாலும்‌ இல்லற வாழ்வில்‌ ஏற்படுத்த முடியாது.
26) அன்பை உருவாக்குவதில்‌ இன்பத்‌ துய்ப்பிற்கு இணை எதுவுமே இல்லை.
27) வறண்ட பாலுறவு பகையை உருவாக்கும்‌, உயவுப்‌ பசையோடு நடை பெறும்‌ பாலுறவே அன்பை உருவாக்கும்‌.
28) வாய்‌ துர்நாற்றம்‌ ஆகவே ஆகாது.
29) படுக்கையறை பூஜையறையைப்‌ போலச்‌ சுத்தமாக இருக்க வேண்டும்‌.
30) முன்‌ தூங்கிப்‌ பின்னெழுவதை வழக்கமாக்கிக்‌ கொள்ளக்‌ கூடாது.

32) கணவனால்‌ எந்த வயதிலும்‌ தன்‌ மனைவியைப்‌ பால்‌ ரீதியாகத்‌ திருப்திப்‌ படுத்த முடியும்‌.
33) தன்னம்பிக்கை உள்ள வரை லிங்கம்‌ சாயாது. லிங்கம்‌ சாயாத வரை ஆண்‌ எடுத்த காரியத்தில்‌ தோற்க மாட்டான்‌.
34) காதற்‌ தசை நார்ப்‌ பயிற்சியை இருவரும்‌ தினம்‌ தவறாமல்‌ செய்யவும்‌.
35) ஆழமான, நீண்ட, ஆசுவாசமான சுவாசம்‌ மிகவும்‌ முக்கியம்‌.
36) துரித ஸ்கலிதம்‌, விந்து முந்துதல்‌ ஆகிய இரண்டின்‌ விரோதி ஆழ்ந்த சுவாசம்‌.
36) மந்திரச்‌ சொல்லைப்‌ பயன்படுத்திய படியே இயங்கப்‌ பழகவும்‌.
37) ஒன்றுக்கு இரண்டு முறை நுணுக்கங்களைப்‌ படித்துக்‌ கொள்ளவும்‌.
38) பெண்ணின்‌ பால்‌ மண்டல படங்களை மனதில்‌ பதித்துக்‌ கொள்ளவும்‌.
39) மது, புகையிலை போன்ற போதைப்‌ பழக்கங்களை விட்டு விட வேண்டும்‌.
40) அதற்குச்‌ செலவளிக்கும்‌ பணத்தை, ஊட்டச்சத்து மிக்க உணவை உட்கொள்ளப்‌ பயன்‌ படுத்த வேண்டும்‌. அதன்‌ மூலம்‌ பாலாற்றலை வளர்த்துக்‌ கொள்வதோடு, கொலைகார நோய்களிருந்தும்‌ தப்பிக்கலாம்‌. ஆயுளையும்‌ அதிகரித்துக்‌ கொள்ளலாம்‌.
41) இன்பத்‌ துய்ப்பு என்பதை ஒரு மணி நேரத்திற்கும்‌ குறைவாக முடித்துக்‌ கொள்ளக்‌ கூடாது.
42) பாலுறவைப்‌ பற்றிக்‌ கீழ்த்தரமாகக்‌ கருதக்‌ கூடாது.
43) பூஜைகளின்‌ போது, வாக்குவாதங்களுக்கு இடமளிக்கக்‌ கூடாது.
44) வயிற்றைக்‌ காலி செய்தபின்‌ பூஜையைத்‌ துவக்குவதே நல்லது,
45) தொடர்ந்து ஐந்தாறு முறை மனைவிக்குரிய உச்சகட்ட இன்பம்‌ நிகழா விட்டால்‌, உரிய அறிஞரைச்‌ சந்தித்து ஆலோசனை பெறத்‌ தயங்கக்‌ கூடாது.
46) மோசமான பாலுறவை விட பாலுறவு இல்லாமல்‌ இருப்பதே மேல்‌.
47) மனைவிக்குரிய முதல்‌ இன்பம்‌ நிகழ்ந்து முடியும்‌ வரை, லிங்கத்தைப்‌ பயன்படுத்த கணவன்‌ ஒருபோதும்‌ முயற்சிக்கக்‌ கூடாது.
48) கணவன்‌ மனைவிக்கிடையே சண்டை, குழந்தையை வதைத்தல்‌, மாமியார்‌ மருமகள்‌ சண்டை, தேவையற்ற அழுகை, பாலுறவில்‌ ஈடுபட மறுத்தல்‌, சந்தேகம்‌, கள்ளக்‌ காதல்‌ போன்றவை எந்தக்‌ குடும்பத்தில்‌ நடந்து கொண்டிருக்கிறதோ, அங்கே வாழும்‌ பெண்‌ போகப்‌ பொருளாக நடத்தப்‌ படுகிறாள்‌ என்று பொருள்‌.
49) பெண்ணின்‌ உடலில்‌ ஏற்படும்‌ பாலின்ப ஏக்கம்‌ தணிக்கப்‌ படாத போது ஏமாற்றம்‌ உருவாகிறது. தொடர்‌ ஏமாற்றத்தால்‌, எவ்வளவு இருந்து என்ன பயன். இந்த இன்பம்‌ இல்லையே என்கிற விரக்தி ஏற்படுகிறது. விரக்தி நிலையே தொடரும்‌ போது, கணவனின்‌ மீது வெறுப்பு ஏற்படுகிறது. அந்த வெறுப்புணர்ச்சி தான்‌ கணவனின்‌ ஒவ்வொரு செயலிலும்‌ குறை காண வைக்கிறது. மேலும்‌, முன்காபமாக, சிடுசிடுப்பாக, அந்த வெறுப்புணர்ச்சி கசிந்து வெளியேறுகிறது. அது தான்‌ இல்லற வாழ்வில்‌ நிலவும்‌ சண்டைகள்‌ அனைத்திற்கும்‌ மூல காரணம்‌.
அல்லது இப்படியும்‌ சொல்லலாம்‌. பெண்ணின்‌ உடலில்‌ ஏற்படும்‌ பாலின்ப ஏக்கம்‌ தணிக்கப்‌ படாத போது ஒரு வகைப்‌ பால்‌ அழுத்தம்‌ உடலில்‌ ஏற்படுகிறது. அந்த அழுத்தம்‌ தான்‌ கிடைக்கிற வாய்ப்பைத்‌ தவற விடாமல்‌ பயன்படுத்திக்‌ கொண்டு, ஒரு சீற்றச்‌ செயலாக வெளியேறு கிறது. அது தான்‌ இல்லற வாழ்வில்‌ நிலவும்‌ சண்டைகள்‌ அனைத்‌ இற்கும்‌ மூல காரணம்‌.
50) மனைவிக்குரிய உச்ச கட்ட இன்பங்களை வழங்காத கணவனுக்கு மனைவியோடு பாலுறவு கொள்ளும்‌ உரிமை இல்லை.
மேற்கண்ட விதிகளை மறந்து விடாதீர்கள்‌. இவற்றை மறக்காமல்‌ வாழக்‌ கற்றுக்‌ கொண்டால்‌, வாழக்கிடைத்த இல்லற வாழ்வை இன்புற வாழலாம்‌. மேற்கொண்டுள்ள பணி மற்றும்‌ தொழில்‌ வாழ்க்கையிலும்‌ கவனமுடன்‌ செயலாற்றலாம்‌, அதன்மூலம்‌ புற வெளியிலும்‌ வெற்றிகரமான மனிதராகத்‌ திகழலாம்‌, அதோடு நீண்ட காலம்‌ நோய்‌ நொடியின்றி வாழ்ந்து கொண்டிருக்கலாம்‌, இவை காரணமாய்‌, குழந்தைகளும்‌ சிறந்த குடிமக்களாக உருவாகி, வெற்றிகரமானவர்களாக நீண்டகாலம்‌ வாழ்ந்து கொண்டிருப்பார்கள்‌.

Tantra Book Page - 494எனதருமை நேயர்களே இந்த ' இல்லற வாழ்வை இன்புற வாழ மறக்கக்‌ கூடாத விதிகள்‌ - Tantra Book Page - 494' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News