03 மார்ச் 2019

, , ,

எந்த நேரத்திற்கு என்ன புடவையை உடுத்துவது என தெரியுமா?

Pengal Selai Aniya Tips, Eppadi saree select seidhu kattuvadhu?, Cotton saree, pattu saree, how to wear saree to look slim - புடவை அணியும் இளம்பெண்களுக்கான அழகியல் குறிப்புகள்

புடவை அணியும் இளம்பெண்களுக்கான அழகியல் குறிப்பு


Pengal Selai Aniya Tips, Eppadi saree select seidhu kattuvadhu?, Cotton saree, pattu saree, how to wear saree to look slim - புடவை அணியும் இளம்பெண்களுக்கான அழகியல் குறிப்புகள்
நாகரீகத்தின் உச்சத்தில் இருந்து  இன்னும் ஆயிரமாயிரம் பேஷன் ஆடைகள் வந்தாலும்

பெண்களின் அழகை அதிகரித்துக் காட்டுவது புடவைதான் என்று இன்றைய இளைய தலைமுறையினர் பலரும் புடவைக்கு வாக்களித்துள்ளனர். அந்த புடவையை தேர்ந்தெடுத்து உடுத்துவதே ஒரு கலைதான். எந்த நேரத்திற்கு என்ன புடவையை உடுத்துவது என்று தெரிந்துகொண்டாலே போதும் நீங்கள்தான் அழகுராணி என்கின்றனர் அழகியல் வல்லுநர்கள்.

இந்தியப்பெண்களின் தேசிய உடையாக புடவை இருந்தாலும், குஜராத்தி, பெங்காலி, மராத்தி, பார்ஸி, மார்வாடி, மடிசார் என்று பல வகைகளாக அணியப்படுகிறது.

சீசனுக்கு ஏற்ற புடவை 


புடவையின் தேர்வு, தங்கள் நிறம், காலம், மற்றும் நேரத்துக்கு ஏற்ப செய்ய வேண்டும்.

கோடையில் ஷிபான், காட்டன் அல்லது கிரேப் அணியலாம்.
குளிர்காலத்தில் சில்க், கிரேப் போன்றவற்றை அணியலாம்.
மழை நேரத்தில் சிந்தடிக் புடவைகள் அணியலாம்.

அலுவலகத்திற்கு, பார்ட்டி அல்லது விழாவிற்கு செல்லும் போது எந்த மாதிரி புடவையை அணிவது? 

 அலுவலகத்திற்கு செல்லும் போது புடவை தலைப்பைத் மடித்து தோளில் ‘பின்’ செய்து கொண்டால் பாந்தமாக இருக்கும். வேலை செய்யவும் எளிதாக இருக்கும். அதேசமயம் பார்ட்டி அல்லது விழாவிற்கு செல்வதானால் புடவைத் தலைப்பை மடிக்காமல் ஒரு பக்கத்தில் மட்டும் தோளில் ‘பின்’ செய்து கொண்டால் ஒரு ரிச் லுக் வரும். அழகையும் அதிகரித்து காட்டும்.

சுற்றிப் பார்க்கச் செல்லும் போது

சுற்றிப் பார்க்கச் செல்லும் போது, விலை உயர்ந்த புடவை அணியாதீ ர்கள்.

பெரிய நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது


அதே போல் பெரிய நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது சாதாரண புடவைகளை அணியாதீர்கள்.
சிந்தித்து புடவைகளை தேர்வு செய்து அணிந்தால் நீங்கள் கவர்ச்சியாகத் தோற்றம் அளிப்பீர்கள்...

குள்ளமான பெண்கள் அணிய வேண்டிய சேலை  


குள்ளமான பெண்கள் மெல்லிய பிரின்ட், சிறிய பார்டர் போட்ட புடவைகளை அணியவும். பெரிய பெரிய பிரின்ட்கள், பெரிய பார்டர் உள்ள புடவைகளில் அவர்கள் மேலும் குள்ளமாகத் தோன்றுவார்கள்.

மெலிந்த பெண்கள் அணிய வேண்டிய சேலை 


மெலிந்த பெண்கள் ஆர்கன்ஸா, காட்டன், டிஸ்ஸு, டசர் போன்ற புடவைகளை அணிந்தால் அவர்கள் சற்று பூசினாற்போல தோற்றம் அளிப்பார்கள். பருமனான பெண்கள் ஜார்ஜெட், சிஃபான் அணிந்தால் பொருத்தமாக இருக்கும். ஆர்கன்ஸா புடவை அவர்கள் தவிர்க்கவேண்டும். ஏனெனில் அதில் மேலும் பருமனாகத் தோன்றலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

சிவந்த நிறப் பெண்கள் அணிய வேண்டிய சேலை 


சிவந்த நிறமுடைய பெண்களுக்கு எல்லா கலரும் ஏற்றது. ஆனால் செல்லுமிடத்தை நினைவில் கொண்டு தேர்வு செய்யவும். மாநிறமான பெண்கள் மிக லைட் நிறங்களை தேர்வு செய்யக்கூடாது. அவர்கள் நிறத்திற்கு அது நேர் மாறாகத் தோற்றமளிக்கும். ப்ரைட் நிற  புடவை அவர்களுக்கு ஏற்றது.

புடவை அணியுமுன் அது சரியாக இஸ்திரி செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். கஞ்சி போட வேண்டியிருந்தால், போடப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும் அது ரொம்ப முக்கியம். இல்லையெனின் புடவையின் அழகையே கெடுத்துவிடும் ஜாக்கிரதை.எனதருமை நேயர்களே இந்த 'எந்த நேரத்திற்கு என்ன புடவையை உடுத்துவது என தெரியுமா?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News