13 பிப்ரவரி 2019

,

உங்கள் வீட்டிலேயே ஆப்பிள் சீடர் வினிகர் செய்யலாம், இதை பாருங்க

ஆப்பிள் சீடர் வினிகர், Steps and Ingredients to make Natural Apple cider Vinegar at home, Iyarkai thayarippu murai, homemade,

ஆப்பிள் சீடர் வினிகர் - How to Make Natural Apple cider Vinegar at Home?


தேவையானவை 
ஆப்பிள் - 10 nos
பனங்கற்கண்டு - 10 ஸ்பூன்
மண்பானை தண்ணீ - 1 லி

செய்முறை 
ஆப்பிள் சீடர் வினிகர், Steps and Ingredients to make Natural Apple cider Vinegar at home, Iyarkai thayarippu murai, homemade,
* முழு ஆப்பிளை (தோல், காம்பு, விதையுடன்) நன்றாக கழுவி தண்ணீ போக துடைக்கவும்.

* பிறகு துண்டகள் (தோல், காம்பு,விதையுடன்) போட்டு கண்ணாடி ஜாடியில் போட்டு, சர்க்கரையை தண்ணீல கலந்து ஜாடியில் ஊற்றவும் ஆப்பிளுக்கு மேல் 2-3 இன்ச் தண்ணீ இருக்கனும்ங்க.

* காடா துணி கொண்டு இறுக்கமாக கட்டி மூடி போட்டு இருட்டான இடத்தில் வைக்கவும்ங்க. அவ்வப்போது ஜாடியை திறந்து கலந்து விடவும்ங்க.

* மூன்று வாரங்கள் கழித்து காடா துணியில் வடித்து மேலும் ஒரு மாதம் இருட்டான இடத்தில் மூடி வைக்கவும்ங்க.

* ஒரு மாதம் கழித்து ஆப்பிள் சீடர் வீனிகர் உபயோகிக்கலாம்ங்க.

* பனங்கற்கண்டுக்கு பதில் பனஞ்சர்க்கரை (அ) தென்ன சர்க்கரை உபயோகிக்கலாம்ங்க.

* விருப்பப்பட்டால் அப்பிளுடன் லவங்கபட்டையும் சேர்க்கலாம்ங்க.

* தினமும் ஒரு கிளாஸ் சுடு தண்ணீல ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து குடிக்கலாம்ங்க.

* யாரெல்லாம் ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிட வேண்டாம்?

குறிப்பா அல்சர், குழந்தை வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள், ஏதாவது நோய் காரணமாக மருந்து எடுப்பவர்கள், கர்பிணிகள் அருந்தக் கூடாதுங்க.

* இதை கட்டாயம் தண்ணீரில் கலந்து குடிக்கனும்ங்க அப்படியே எடுக்க கூடாதுங்க.

* உபயோகிக்கிர பொருட்கள் அனைத்தும் சுத்தமா துளி கூட ஈரமில்லாமல் இருக்கனும்ங்க.

* ஆப்பிள் சிறிது காய் வெட்டாக இருந்தால் நல்லதுங்க.

Author: Jamuna Rajesh



எனதருமை நேயர்களே இந்த 'உங்கள் வீட்டிலேயே ஆப்பிள் சீடர் வினிகர் செய்யலாம், இதை பாருங்க ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News