22 நவம்பர் 2018

,

கடவுள் இருக்கிறாரா? கோவில்களுக்குச் செல்வது நல்லதா? - ஓஷோவின் தெளிவான பதில்

கடவுள் உண்மையிலே இருக்கிறாரா? கோவில்களுக்குச் செல்வது நல்லதா, கெட்டதா ? - ஓஷோவின் தெளிவான பதில். Aanmeegam, Aanmigam, kadavul irukkirara, kovil povadhu nalladha, Know about god by Osho. Truth about existence of god

கடவுள் உண்மையிலே இருக்கிறாரா? கோவில்களுக்குச் செல்வது நல்லதா, கெட்டதா ? - ஓஷோவின் தெளிவான பதில் 


#கேள்வி: - கடவுள் உண்மையிலே இருக்கிறாரா ? தயவுசெய்து விளக்கமாகக் கூறவும் ?


#ஓஷோ பதில்: - இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லி அலுத்துப் போய்விட்டது!

மின்சாரம் என்றால் என்ன, உயிர் என்றால் என்ன, மறுபிறப்பு எப்படி ஏற்படுகிறது, இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதற்கு யாராவது' இதுதான்' என்று முடிவாக நிரூபிக்க முடிந்தால், கடவுள் உண்டா, இல்லையா என்பதையும் நிரூபிக்க முடியும்!

மேற்சொல்லியவற்றை சற்று ஆழ்ந்து பாருங்கள். எல்லாமே இயக்கம்தான் ( Process )!
கடவுள் உண்மையிலே இருக்கிறாரா? கோவில்களுக்குச் செல்வது நல்லதா, கெட்டதா ? - ஓஷோவின் தெளிவான பதில். Aanmeegam, Aanmigam, kadavul irukkirara, kovil povadhu nalladha, Know about god by Osho. Truth about existence of god in tamil

எதுவுமே ஒரு பொருளாகக் ( Objcet ) கிடையாது.

ஆகவே கடவுள் என்பதும் ஒரு இயக்கம்தான்.

அது உயிரற்ற பொருள்களில் ( Inanimate Objects ) உறக்கமாக இருக்கிறது.

உயிர்ப் பொருள்களில் ( Animate Objects ) உயிராக - பிரக்ஞையாக - உணர்வாக - சக்தியாக இருக்கிறது.

இயக்கம் என்று வரும்பொழுது, மேடு, பள்ளம்; இன்பம், துன்பம்; பகல், இருட்டு; ஆண் - பெண்....... என்று மாறுபட்டு இயங்குகிறது.

அப்பொழுதுதான் அது ஒரு இயக்கமாக இருக்க முடியும்.

ஆகவேதான் நான் உங்கள் உள்ளே உள்ள உயிர்த்தன்மையை வணங்குங்கள் என்று கூறுகிறேன்.

கடவுள் உங்களுக்குள்ளே - உங்களோடு மிக நெருக்கமாக இருக்கிறார்.

அதை நீங்கள் வெளியே தேடுவது முட்டாள் தனமில்லையா ?

மதவாதிகளே சற்று சிந்தித்துப் பாருங்கள்!

ஆகவே, கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஆதாரம் ஒரு செயலோடு, அது சம்பந்தப்படும் பொழுதுதான் தெரியும்.

மின்சாரம் இருப்பதற்கு ஆதாரம், அது செயல்வடிவம் பெறும்பொழுதுதான் விளங்கும், - (டிவி, ரேடியோ, மோட்டார் ஓடுதல்.....)

கடவுள் உங்களிடம் உணர்வாக ( Consciousness ) இருக்கிறார்.

ஹெய்சென்பெர்க் ( Heisenbergh ) என்ற ஒரு ஜெர்மன் விஞ்ஞானியின்,' நிலையாமைத் தத்துவம்' ( Unerfainity Principle ) பற்றி உங்களுக்குத் தெரியுமா ?

அவர் கூறுவது. " அணுவில் உள்ள மூலக்கூறுகள் ஒருசமயம் பொருளாகவும், மறுசமயம் அலையாகவும் இன்னொரு சமயம் பொருளாகவும் அலையாகவும், மறுசமயம் எதுவுமே இல்லாமலும் ( Nothing! ) இருக்கிறது " என்று கூறுகிறார்.

இதுவே கடவுள் தத்துவத்திற்கும் பொருந்தும்!

கடவுள் ஒரு நிலையற்ற தன்மையில் இருக்கிறார். அதனால்தான் மனிதன் மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்கிறான்!

இதில் புத்தர் அந்த ஒன்றுமற்ற தன்மையை ( The Great Nothing ) வற்புறுத்துகிறார்! மதங்கள் பொருள்களை வலியுறுத்துகின்றன.

ஆத்திகர்கள்! யோகிகளும், ஞானிகளும் அலையை வற்புறுத்துகிறார்கள்.

நாத்திகன், அலையையும் - பொருளையும் பார்த்துப் புரியாமல் தவிக்கிறான்.

இதை ஆழ்ந்து புரிந்துகொண்ட ஒருவன் இப்படிப்பட்ட அபத்தமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டு, தன் வாழ்நாளை வீண்டிக்க மாட்டான்!

மனிதன் இந்த உலகத்தில் படைக்கப்பட்டதே ஒருவருக்கொருவர் அன்பும், கருணையும் கொண்டு உதவி செய்துகொண்டு, ஆனந்தமாகச் சிரித்து வாழவே! வேறு எதற்காகவும் இல்லை.

பிறகு அவன் தன்னைத்தானே அறிந்துகொண்டு, ஞானத்தை அடைய வேண்டும். "

#கேள்வி: - கோவில்களுக்குச் செல்வது நல்லதா, கெட்டதா?


#ஓஷோ பதில்: - நல்லது, கெட்டது, நம்பிக்கை எல்லாம் ஒரு தனிமனிதனைப் பொறுத்த விஷயம்.

என்னைப் பொறுத்தவரையில் சாதாரண மக்களுக்கு, இது ஒரு பொய்யான ஆறுதல் தரும் கூடம்! மற்றபடி இதனால் எந்த நன்மையும் இல்லை. ஆனால் பல பேர் இதை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்துகிறார்கள். பாமர மக்களை ஏமாற்றுகிறார்கள்.

உங்களால், அந்தச் சிலையை ஒரு அன்பு உருவமாகப் பார்க்க முடிந்தால், ( ராமகிருஷ்ணரைப்போல ) உங்களால் பக்தி யோகத்தில் முன்னேற முடியும்.

ஆனால் இப்படிப் பார்ப்பவர்கள் எத்தனை பேர் ? அந்த மனப்பக்குவம் யாரிடம் இருக்கிறது ?

கோவிலுக்குப் போகும் 100 - க்கு 99 பேர்கள்,' எனக்கு அது வேண்டும், இது வேண்டும்' என்று வேண்டிக்கொள்ளத்தான் போகிறார்கள்.

அதாவது " வேண்டிக்கொள்ள! " கைமாறாக, காசு போடுகிறேன், தலை முடியைக் கொடுக்கிறேன் என்று வேறு வியாபாரம்!

இதுதான் ஆன்மீகமா ?
ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் வேண்டிக் கொள்ளுவது உங்களிடமேதான்!

அதாவது எதிரே உள்ள சிலையை முன்னிறுத்தி உங்கள் உயிர்தன்மையிடம், உங்கள் தெய்வீகத்தன்மையிடம்தான் வேண்டிக்கொள்கிறீர்கள்!

#ஓஷோஎனதருமை நேயர்களே இந்த 'கடவுள் இருக்கிறாரா? கோவில்களுக்குச் செல்வது நல்லதா? - ஓஷோவின் தெளிவான பதில் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News