26 ஜூன் 2018

, , ,

Facebook பெண்களே, உங்கள் செல்ஃபீயும் இப்படி உலாவர வாய்ப்பூட்டு, உஷார்..!

Facebook விழிப்புணர்வு தகவல், Girls Selfie picture misuse awareness in tamil, Report facebook profiles that are misusing girls pictures.

எனது மதிப்புக்குரிய நண்பர்களே அனைவருக்கும் எனது வணக்கம்
நேற்று இரவு ஒரு முகநூல் பக்கத்தினை எதேர்ச்சையாக பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதிலே பல பெண்களுடைய புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தது அப் படங்களுக்கு மேல், share பண்ணுபவருக்கு என் தொலைபேசி
Facebook விழிப்புணர்வு தகவல், Girls Selfie picture misuse awareness in tamil,  Report facebook profiles that are misusing girls pictures.
எண் அனுப்பி வைக்கப்படும், இன்று எனக்கு பிறந்த நாள், வாழ்த்துங்கள் நண்பர்களே,என்னைப் பிடிக்குமா share பண்ணுங்கள் என்று பல வசனங்கள் எழுதி பல பெண்களின் படங்கள் இடம் பெற்று இருந்தது. இதிலே கவலைக்குரிய விடயம் என்ன வென்றால் அதை நம்பி பல பேர் share பண்ணி இருக்கின்றார்கள் பல பேர் like பண்ணி இருக்கின்றார்கள் பல பேர் தங்கள் தொலைபேசி எண்ணை comment லே பதிவிட்டு இருக்கின்றார்கள். உலகத்திலேயே அதுவும் நம் நாட்டில் எந்த ஒரு பெண்ணும் இவ்வாறு தன்னுடைய புகைப்படத்தைப் முகநூலில் இட்டு share பண்ணுபவருக்கு number அனுப்பி வைக்கப்படும் என்று ஒரு பதிவை இடமாட்டாள். தவறான முகநூல் பக்கங்களில் தன்னுடைய படத்தை இட்டு நான் அழகாக இருக்கின்றேனா என்று கேட்க மாட்டாள். தயவு செய்து சிறிது சிந்தியுங்கள் நீங்கள் இவ்வாறு share ,like ,comment பண்ணும் அந்த பெண்கள் யாரோ ஒரு குழந்தைக்கு தாயாகவோ, யாரோ ஒரு கணவனுக்கு துணைவியாகவோ, நம்மைப் போன்றவர்களுக்கு அக்காவாகவோ தங்கச்சியாகவோ இருக்கின்றவர்கள்தான். தேவை இல்லாமல் அவர்களின் வாழ்க்கையை அழித்துவிடாதீர்கள்.
இதுவே நமது வீட்டுப் பெண்கள் என்றால் நாம் இவ்வாறு செய்வோமா??

இது தொடர்புக்காகவும், தகவல் திரட்டி மோசடி செய்யவும் தொலேபேசி எண்களை சேகரிக்கும் தந்திரம்.
படத்தில் உள்ள பெண்கள்தான் பதிவிட்டு இருக்கிறார்கள் என்று நம்பி ஏமாற வேண்டாம்.

#பெண்களே
  • தயவு செய்து உங்கள் படங்களை முகநூலில் இடாதீர்கள் அவ்வாறு இட வேண்டும் என்னால் நண்பர்கள் மட்டும்தான் பார்க்க முடியும் என்றவாறு இடுங்கள்.
  • தெரியாதவர்களை நண்பர்கள் ஆக்காதீர்கள்.
  •  உங்களை உண்மையாக நேசிக்கும் அதே நேரம் உங்களை கரம் பிடிப்பான் என்று நீங்கள் நம்பும் ஆணுக்கு மட்டுமே படங்களை அனுப்புங்கள்.
  • உங்கள் தொலைபேசி அல்லது laptop பழுதாகி விட்டால் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் மட்டுமே திருத்தக் கொடுங்கள் இல்லாவிட்டால் உங்கள் படங்களும் அவ்வாறான பக்கங்களில் வருவதை யாராலும் தடுக்க முடியாது.

#நண்பர்களே
தெரிந்தோ தெரியாமலோ இனி மேல் இவ்வாறான விடயங்களைப் பண்ணாதீர்கள். இவ்வாறான தப்பான விடயங்களுக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவால்தான் அதை செய்பவர்கள் மேலும் மேலும் அவ்வாறான தப்பைப் பண்ணிக் கொண்டு உள்ளனர். அவ்வாறான பக்கங்களைக் கண்டால் report பண்ணுங்கள் முகநூலுக்கு..

இந்த தகவலை நீங்கள் share பண்ணி எல்லோரும் தெரியபடுத்தி முகநூலுக்கு (Facebook)உடனடியாக report பண்ணினால் அந்தப் பக்கங்கள் இல்லாமல் போகும் எவ்வளவு அளவுக்கு அதிகமான report போகின்றதோ அப்போழுதுதான் முகநூலால் அதை இல்லாமல் பண்ண முடியும்..

நண்பர்களே இதை ஒரு சவாலாக எடுத்து எம் விட்டுப் பெண்களுக்கு இவ்வாறான ஒரு நிலை என்றால் நாம் என்ன செய்வோமோ அதை இப்போழுதே பண்ணுவோம்..

நண்பர்களே காலா காலமாக பெண்களின் மானத்தைக் காத்தவன்தான் #தழிழன் இவ்வாறு பெண்களின் மானத்தைக் காட்டிக் கொடுத்தவன் இல்லை..
நம் வீட்டுப் பெண்களுக்கு இந்த நிலை வர முதல் நாம் விழித் தெழுவோம்.

நான் report பண்ணி விட்டேன் நீங்களும் இதை share பண்ணி report பண்ணுங்கள்.
#ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
நன்றி
பார்த்திபன் Parthiban Parthibanஎனதருமை நேயர்களே இந்த 'Facebook பெண்களே, உங்கள் செல்ஃபீயும் இப்படி உலாவர வாய்ப்பூட்டு, உஷார்..! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News