04 ஜூன் 2018

, , ,

குழந்தையை எப்படி ஊக்குவிப்பது?

Tips to Motivate your child in Tamil, ookuvithal, okkam, பிள்ளைகளை ஊக்குவிப்பது எப்படி, Parenting tips in Tamil, Kulandhai valarppu murai

ஊக்குவித்தல்: உங்களது பிள்ளைகளை எப்படி ஊக்குவிப்பது?

குறிப்பிட்ட நேரம் படிப்பு


உங்கள் குழந்தையை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் படிக்கச் செய்யுங்கள். ஒவ்வோர் அமர்விலும் அதிக பட்சமாய் இரண்டு மணி நேரம் படித்தாலே போதும்.

சொந்த வாக்கியங்களில் எழுதப் பயிற்சி


புத்தகத்தில் உள்ளதை அப்படியே நெட்டுருப் போட வேண்டியதில்லை. புரிந்து கொண்டு படித்தாலே போதும் தேர்வுக்குரிய பதில்களை சொந்த வாக்கியங்களில் எழுதப் பயிற்சியளியுங்கள். தேர்வு இல்லாத காலத்தில் ஒவ்வொரு நாளும் வகுப்பில் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தவற்றை நினைவுபடுத்தி காகிதத்தில் எழுதச் செய்யுங்கள். அது அவனுடைய நினைவாற்றலை வளர்ப்பதோடு, விசயங்களை சொந்த நடையில் வெளிப்படுத்தும் திறனையும் மேம்படுத்தும்.
  • பாடப் புத்தகங்களைப் படிப்பதோடு, பாடத்துக்கு தொடர்புடைய புத்தகங்களைப் படிக்கவும் அவனைத் தூண்டுங்கள்.

விளையாட்டு

குழந்தை படிப்பில் இருப்பது போலவே விளையாட்டிலும் ஈடுபாடு கொள்வது நல்லது. விளையாட்டு அவனுடைய உடலையும், மனத்தையும் ஆரோக்கியமாய் வைத்துக்கொள்ள உதவும்.

திறமையை அடையாளம் காணுங்கள், ஊக்குவியுங்கள்


குழந்தையிடம்  இயல்பாயமைந்த திறமையை அடையாளம் காணுங்கள். அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள ஆவன செய்யுங்கள்.

Tips to Motivate your child in Tamil, ookuvithal, okkam, பிள்ளைகளை  ஊக்குவிப்பது எப்படி, Parenting tips in Tamil, Kulandhai valarppu murai
  • அவன் படம் வரைய விரும்பினால் அதற்குத் தேவையான கருவிகளை, புத்தகங்களை வாங்கி தாருங்கள்.
அவன் கண்டபடி கிறுக்கித் தள்ளினாலும், ஆகா! நல்லா இருக்கு. இன்னும் பிரமாதமாய்ச் செய் முடியும். பின்னாடி பெரிய ஆளா வந்திருவே, பிக்காஸோ மாதிரி' என்று ஊக்குவியுங்கள். இத்தகைய ஊக்குவிப்பு எல்லா முயற்சிகளுக்கும் பொருந்தும்.

ஊக்குவிக்கப்படும் குழந்தைகளே பின்னாளில் உயரங்களைத் தொடுகிறார்கள்.

'குழந்தைகளின் கனவுகளைக் கொஞ்சமேனும் நிறைவேற்றுங்கள்' என்ற நூலிலிருந்து, நூலாசிரியர்: சி.எஸ்.தேவநாதன் எனதருமை நேயர்களே இந்த 'குழந்தையை எப்படி ஊக்குவிப்பது? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News