21 மே 2018

, ,

முருங்கை கீரையை சுலபமாக ஆய்வது எப்படி? (Tips & Tricks)

முருங்கை கீரையை சுலபமாக ஆயலாம். விரைவாக முருங்கை கீரை பறிப்பது எப்படி ? murungai keerai parippadu eppadi tips and tricks in tamil. how to clean and how to remove drumstick leaves, Pick and Clean Moringa Leaves


முருங்கை இலையை விரைவாக பறிக்க சில வழிகள்

முருங்கை கீரையை சுலபமாக  ஆயலாம். விரைவாக முருங்கை கீரை பறிப்பது எப்படி ? murungai keerai parippadu eppadi tips and tricks in tamil. how to clean and how to remove drumstick leaves,  Pick and Clean Moringa Leaves

மாலை ஆறு மணியில் இருந்து இரவு 11 மணி வரை ஆய்ந்தேன். வேலைக்கு செல்வதால் நேரம் எடுத்து பொறுமையாக‌ சுத்தம் செய்ய‌ முடியவில்லை.  முருங்கை கீரையை சுலபமாக எப்படி பறிப்பது என கூறவும்..
  • தலை கீழாக‌ ஆயலாம். மிகவும் சுலபமாக‌ இருக்கும். ஒவ்வொரு கிளைப் பிரிவிலும் நுனியில் ஆரம்பித்து ரிவர்ஸில் உருவி எடுக்கலாம். கடைசியாக நுனியிலுள்ள ஒற்றை இலையைக் கிள்ளி எடுக்கலாம். எப்பொழுதும் மரத்திலிருந்து பிடுங்கி உடனே சமைத்தால் சுவையாக இருக்கும். இளம் கீரையாகப் பிடுங்கினால் அதிகம் தூசு படிந்திராது. தண்டு இருந்தாலும் பிஞ்சுத் தண்டு - வெந்துவிடும். - இமா க்றிஸ்
  • ஒரு கவரில் போட்டு பிரிட்ஜ்ல் அல்லது வெளியில் வைத்திருங்கள்..மறுநாள் எடுத்து ஒரு நியூஸ் பேப்பரை தரையில் விரித்து கீரையை கையில் வைத்து ஆட்டினால் உதிர்ந்துவிடும்..மீதம் உள்ளதை ஆய்ந்து கொள்ளலாம்..கவரிலும் பாதி கீரை உதிர்ந்து இருக்கும். - அவந்திகா
  • முருங்கைக் கீரையை மரத்தில் இருந்து ஒடித்ததும் கீரைக் கொத்துக்களை பின் புறமாகத் திருப்பிப் பார்க்கவும். கீரையின் தண்டுகளில் முசுக்கொட்டைப் பூச்சியின் கம்பளிப்பூச்சி முட்டைகள் வெகு அழகாய் முத்துக் கோர்த்தது போல் ஒட்டி இருக்கும் இருக்கலாம், கடுகு சைசில். அதை நீக்கவும். அடுத்து முக்கோண‌ வடிவத்தில் ஒரு ஜந்து முருங்கைக்காம்போடு ஒட்டிக் கொண்டிருக்கும் பச்சைநிறத்தில் குட்டிவெட்டுக்கிளி வடிவத்தில், தொட்டாலே பச்சைப்பூச்சி நாற்றம் அடிக்கும். இதைப் போக்க‌ கீரையை கொத்தாகவே தரையில் நாலு தட்டு தட்டி கீரை வீணாகாத‌ படி தட்டி நீக்கவும், பிறகு பழுத்த‌ இலைகளை நீக்கவும். கம்பளிப் பூச்சி இருந்தால் தயவு தாட்சண்யம் இன்றி நீக்கி விடவும். பிறகு கொத்தாகவே கீரையினை நன்கு நீரில் அலசிக் கழுவி விட்டு உருவிப் பயன் படுத்தவும், பையிலோ பருத்தித் துணியிலோ சுற்றி மூடி வைத்தால் கீரை உதிரும். ஆனால் சின்னக் குச்சிகளும் சேர்ந்து வரும். கீரையின் பசுமை வாசம் போய் வேறு வாசம் வரும்.சமைத்தால் ருசிக்காது ரசிக்காது. கொஞ்சம் வேலை தான். - பூங்கோதைகண்ணம்மாள்.

Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'முருங்கை கீரையை சுலபமாக ஆய்வது எப்படி? (Tips & Tricks)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90