08 மே 2018

, ,

வளரிளம் பருவ பெண்ணை பெற்ற தாய் தன் மகளுக்கு எவ்வாறு உதவிட வேண்டும்?

இளமை பருவ பெண்ணை பெற்ற தாய் எப்படி காத்திட வேண்டும்? Girl child care tips in Tamil, Parenting tips in tamil. Teenage girl problems, ilamai paruva pen padhukappaga valara

வளரிளம் பருவ பெண்களை பெற்ற தாய் கவனத்திற்கு 

ளரும் பெண்களுக்கு உடல் ஒரு பிரச்னை ஆகிறது. பிறர் தொடுவது அருவருப்பான உணர்வை ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் யாரிடம் விவாதிப்பது என்றும் அவர்கள் தயங்குவார்கள். மாத விலக்கினால் உடைகள் கறைபடுமோ, மாற்று ஏற்பாடு என்ன? Toilet இல்லாத இடங்களில் எப்படி சமாளிப்பது போன்ற பிரச்சினைகளுக்கெல்லாம் தாயே வழிகாட்டியாக, தோழியாக இருந்து மகளுக்கு உதவிட வேண்டும்.

இளமை பருவ பெண்ணை பெற்ற தாய் எப்படி காத்திட வேண்டும்? Girl child care tips in Tamil, Parenting tips in tamil. Teenage girl problems, ilamai paruva pen padhukappaga valara, பூப்பெய்த பெண் , வயதுக்கு வந்த பெண் , விடலை பருவம்

பிற ஆண்களிடம் கவனமாக நடந்துகொள்வதற்கு கற்பித்திட வேண்டும்.

  • நீண்ட நேரம் கை குலுக்குவது
  • தட்டிக்கொடுப்பது
  • தற்செயலாக நடந்ததை போல தொடுவது.
இவற்றை எதார்த்தமாக எடுத்துக்கொண்டால் கூட பிறர் தவறாக புரிந்துகொள்வார்கள். இளம் பெண் இவற்றை எவ்வளவு அனுமதிக்கிறாள் என்பதும் சமூகத்தால் ஆராயப்படுகிறது. எனவே இவை பிடிக்கவில்லை என்பதை தொடக்கத்திலேயே இளம் பெண் சொல்லும் வகையில் அவளை தயார் செய்ய வேண்டியதும், தாயின் கடமையாகிறது.

தெரியாத நபர்களிடம் ஈமெயில், SMS, வீடியோ கால், வாட்ஸாப், Facebook, ட்வீட், இன்ஸ்டாகிராம் வேண்டாம் என்பதையும், அதனால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளையும் கூறி தக்க அறிவுரையை நல்ல சூழலில் வழங்கிடவேண்டும்.

யாரவது பெண்ணின் உடலை வருணனை செய்தால் கூட, இது தேவையற்ற வேலை என்று அப்பெண்ணே கூறிடவேண்டும்; மாறாக அவர்களது மயக்கும் சொற்களுக்கு சொக்கி மயங்கி தவறிழைத்திட தொடக்க நிலையாக போய்விடக்கூடாது. இதனை மகளுக்கு தாய் பக்குவமாக எடுத்துரைக்க வேண்டும்.

பெண் பிள்ளைகள் தாயிடமிருந்து பெரிய பெண்ணாக மாறுவது எப்படி என்று தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறார்கள். பெண் பூப்படைவதால் மனநிலையில் பாதிப்பு ஏற்படாமல் தாய் அல்லது தமக்கை உதவிடவேண்டும். 'நீ உன் தயை போன்றே வளர்ந்து கொண்டு இருக்கிறாய்; பெருமைப்பட்டு; சங்கடம் அடையாதே' என்று கூறிட வேண்டும். மேலும் மாத விலக்கின் போது பின்பற்ற வேண்டிய உடல் தூய்மையை பற்றியும் போதித்திட வேண்டும்.

விடலை பருவம்


விடலை பருவம் பாதுகாப்பின்மை நிறைய உள்ள பருவமாகும். இந்த பருவத்தில் சாதனைகள் தான் தெம்பூட்டுகின்றன. அவர்கள் சாதிக்க விரும்புகிறார்கள். அவர்களது கனவுகள், ஆசைகள், நம்பிக்கைகள் நனவாவதற்கு முடிந்த அளவு உதவி செய்யுங்கள். வீர தீர செயல்கள் மற்றும்  ஹீரோயிக்காக எண்ணுதல் இப்பருவத்தில் செயல்களாகும். கவிதை வேண்டல் / ஈர்த்தால் என்பது விடலை பருவத்தினர் 'என்னை கவனி' என்று சமுதாயத்தில் கூறுவதாகும்.

எதையாவது சொல்லும் போது பெற்றோர்களது கவனத்தை ஈர்த்திட முயலுகிறார்கள் என்பது பொருளாகும். மறக்காமல் அவர்களை கவனியுங்கள், நல்ல விஷயங்களை பாராட்டுங்கள். இதனால் அந்த நல்ல விஷயங்களை தொடரவே ஆசைப்படுவார்கள்.எனதருமை நேயர்களே இந்த 'வளரிளம் பருவ பெண்ணை பெற்ற தாய் தன் மகளுக்கு எவ்வாறு உதவிட வேண்டும்?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News