15 ஏப்ரல் 2018

, ,

இதுபோன்ற சில குணங்கள் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது..!

பெண்களுக்கு ஆண்கள் மீது அதிகமான வெறுப்பு வருவது ஆண்களது ஒருசில குணங்களால் தான். எந்த மாதிரியான குணங்களைக் கொண்ட ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். Pengalukku varuppai tharum angalin kunangal, Psychology in tamil, kudumbam, ottrumai virumbi


பெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் ஒருசில குணங்களால் தான்.
 Pengalukku varuppai tharum angalin kunangal, Psychology in tamil, kudumbam, ottrumai virumbi

எந்த மாதிரியான குணங்களைக் கொண்ட ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

  • கர்வத்துடன் இருக்கும் ஆண்கள்: நான் ஒரு ஆண் என்ற கர்வத்துடன் இருக்கும் ஆண்களால் பெண்களை கவர முடியாது. மேலும் இந்த குணமுள்ள ஆண்களிடம் பழகுவதை அறவே தவிர்ப்பார்கள்.
  • கெட்ட வார்த்தையில் திட்டும் ஆண்கள்: பெண்கள் கெட்ட வார்த்தையில் திட்டும் குணம் உள்ள ஆண்களிடம் பழக விரும்பமாட்டார்கள். ஏனெனில் இந்த குணம் இருந்தால், எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை பயன்படுத்துவார்கள். எனவே இத்தகைய கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆண்களுடன் உறவுமுறையைத் தொடர்வதைத் தவிர்ப்பார்கள்.
  • சுயநலத்துடன் இருக்கும் ஆண்கள்: ஆண்களுள் எவர் மிகவும் சுயநலத்துடன் இருக்கிறார்களோ, அத்தகயைவர்களுக்கு காதல் நிலைக்காது. ஏனெனில் இத்தகையவர்கள் எப்போதும் தன்னைப் பற்றியே நினைத்தால், எந்த பெண்ணுக்கு தான் பிடிக்கும்?
  • பெண்களுக்கு குடிகாரர்களை பிடிக்கவே பிடிக்காது. அதற்காக சுத்தமாக பிடிக்காது என்று சொல்ல முடியாது. ஆனால் தினமும் குடித்தால், அத்தகையவர்களுடன் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ முடியாது என்பதால் தான்.
  • உறவுமுறை நீண்ட நாட்கள் நிலைக்க வேண்டுமெனில் சந்தேகம் இருக்கவே கூடாது. அது உறவுமுறையை அழிப்பதோடு, வெறுப்பை சம்பாதிக்கும். எனவே இந்த குணமுள்ள ஆண்களையும் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.
  • சைகோ குணமுள்ள ஆண்களுடன் இருக்கவே வெறுப்பார்கள். ஏனெனில் இத்தகைய குணமுள்ள ஆண்களிடம் எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தும் இருக்கும்.
  • பெண்களுக்கு ரொமான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் காதல் செய்யும் ஆணிடம் ரொமான்ஸ் இல்லாவிட்டால், பின் அதுவே இருவருக்கிடையே சண்டைகளை ஏற்படுத்தி, பிரிவுகளை ஏற்படுத்திவிடும்.
ஆனால் அத்தகைய ரொமான்ஸானது வற்புறுத்தி வரக்கூடாது. அவ்வாறு வற்புறுத்தும் வகையிலும், வெறுப்பேற்றும் வகையிலும், எந்நேரமும் செக்ஸ் பற்றியே பேசுவது, அந்த செயல்களிலேயே ஈடுபடுவது என இருந்தால், அது பெண்களுக்கு பெரும் வெறுப்பை ஏற்படுத்திவிடும்.

Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'இதுபோன்ற சில குணங்கள் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது..!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90