15 ஏப்ரல் 2018

, , ,

கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படி இருக்க வேண்டும்..?

கர்ப காலத்தில் மனைவிக்கு கணவன் எவ்வாறு உதவ வேண்டும்? (karpa kalam kanavan manaivikku evvaru udhava vendum. pregnancy tips in tamil, pregnancy care by Husband)

மனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும், மனைவிக்கு எவ்வாறு உதவ வேண்டும்? 

கர்ப காலத்தில் மனைவிக்கு கணவன் எவ்வாறு உதவ வேண்டும். karpa kalam kanavan manaivikku evvaru udhava vendum. pregnancy tips in tamil, pregnancy care by Husband

தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக, பிறக்கும் குழந்தையின் மனநலமும் ஆரோக்கியமாக இருக்க கர்ப காலத்தில் கணவனின் பங்கு

  • முதல் 3 மாதங்களில் கணவன், தன் மனைவியுடன் அதிக நேரம் செலவிட வேண்டியது அவசியம்.
  • வாந்தி, மசக்கை, தலைசுற்றல், மனநிலை  மாற்றம், உணவின் மீது வெறுப்பு என மனைவி சந்திக்கிற பல உபாதைகளுக்கு, கணவனின் அன்பும் அருகாமையும் தான் முதல் மருந்து.
  • காலையில் மனைவி மெதுவாக எழுந்திருக்க நேரிடும். தனக்கு வேலைக்குச் செல்ல நேரமாகிறதே எனக் கடிந்து கொள்ளாமல், மனைவிக்கு முடிந்த  உதவிகளைச் செய்யலாம்.
  • முதல் 3 மாதங்கள் குழந்தையின் வளர்ச்சியில் மிக முக்கியமானது என்பதால், மனைவிக்குத் தேவையான மருந்துகளையும்  கவனமாகப் பார்த்துக் கொடுக்கவேண்டியது கணவனின் பொறுப்பு.
  • மனைவிக்கு நீரிழிவோ, ரத்த அழுத்தமோ இருந்தால், இன்னும் அதிக அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். மசக்கையைக் காரணம் காட்டி,  அதிக இனிப்போ, உப்போ உள்ள பொருள்களைக் கேட்டாலும், கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 4 முதல் 7வது  மாதங்களில் மனைவியின் உணவில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும்.
  • இரும்புச்சத்தும் கால்சியமும் அந்நாள்களில் கர்பிணிப் பெண்ணுக்கு அதிகம் தேவை என்பதைத் தெரிந்துகொண்டு, அவை அதிகமுள்ள  உணவுகளை வாங்கிக் கொடுக்க வேண்டும்
  • முதல் 3 மாதங்களில் தாம்பத்ய உறவைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். 4 முதல்  7ம் மாதம் வரை, கர்ப்பிணிக்கு எந்தச்சிக்கலும் இல்லாதபட்சத்தில், மிதமான உறவு வைத்துக்கொள்ளலாம். பிரச்னை இருந்தால், கட்டாயம் தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்தில் சிறுநீரகத் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். அது கர்ப்பத்தைப் பாதிக்கும் என்பதால், இது போன்ற விஷயங்களில் மனைவிக்கு கணவன் ஒத்து ழைக்க வேண்டும்.
  • கடைசி மூன்று மாதங்களில் கணவனின் பொறுப்பு இன்னும் அதிகம். பிரசவம் குறித்த பயத்தைப் போக்க தைரியம் சொல்வதோடு, தரமான மருத்துவமனையில் பிரசவம் நிகழ முன்னேற்பாடுகளை செய்து வைக்க வேண்டும்.
  • அவசர காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, பிரசவத்துக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன் கூட்டியே தயாராகச் செய்து வைக்க  வேண்டியதும் கணவனின் பொறுப்பே. 

இப்படியெல்லாம் செய்தால், பிரசவத்துக்குப் பிறகு பெரும்பாலான பெண்களு க்கு உண்டாகிற மன அழுத்தப் பிரச்னை வராது. தவிர தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிறக்கும் குழந்தையின் மனநலமும்  ஆரோக்கியமாக இருக்கும்..!

- மருத்துவர் ஜெயராணிஎனதருமை நேயர்களே இந்த 'கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படி இருக்க வேண்டும்..?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News