27 பிப்ரவரி 2018

,

"டியூப்லெஸ் டயரு.. டயர் நல்லாருக்கு, ரிம்ல காத்து போகுது.." - படித்ததில் பிடித்தது

டியூப்லெஸ் டயர் ரிம்ல காத்து போகுது, போகாமலிருக்க என்ன செய்யலாம்? Lifehacks in Tamil, Tips & Tricks in Tamil, Two wheeler repair mechanism in Tamil, Bike tubeless tyre rim air leak problem solved

அலுவலகத்திலிருந்து வரும்போது பைக் டயரில் காற்று குறைந்திருப்பதை உணர்ந்தேன். பஞ்சராக இருக்கலாம் என அருகிலிருந்த கடையில் நிறுத்தினேன். கடைகாரர் டயரை சோதித்துவிட்டு "டியூப்லெஸ் டயரு.. டயர் நல்லாருக்கு, ரிம்ல காத்து போகுது.. நிறைய செலவாகுமே" என்றார்.

டியூப்லெஸ் டயர் ரிம்ல காத்து போகுது, போகாமலிருக்க என்ன செய்யலாம்?  Lifehacks in Tamil, Tips & Tricks in Tamil,  Two wheeler repair mechanism in Tamil, Bike tubeless tyre rim air leak problem solved
"மாசக்கடைசிண்ணே வேற ஏதாவது செய்ய முடியுமா?" என்றேன்.

"சரி இப்போதைக்கு டியூப் வாங்கி மாட்டி விடுறேன் ஆனா சீக்கிரம் ரிம் மாத்தனும்.. அது இங்க கிடைக்காது" என்றார். சரி என்று ஆமோதித்தேன்.

அருகிலிருந்த ஒரு கடையை கை காட்டி அங்கு சென்று டியூப் வாங்கி வர சொன்னார்.

கடைக்கு செல்ல ஆயத்தமான என்னை நிறுத்தி "இதை கலட்டி மாட்றது கஷ்டம் எனக்கு 150ரூ ஆகும் இருக்குல?" என்றார். சரியென்றேன். அருகிலிருக்கும் ஏடிஎம்மில் பணம் எடுத்துக்க சொன்னார். அவருக்கு நான் மாசக்கடைசி என்று சொன்னதில் பணம் கொடுக்க மாட்டான் என பயம் போல. டியூப் வாங்கி வந்து கொடுத்தேன்.

டியூப்பை கையில் வாங்கிவிட்டு, என்னிடம் 150ரூ இருப்பதை மீண்டும் உறுதி செய்துகொண்டார். டயரை கலட்டி டியூபை மாற்ற ஆரமித்தார். உண்மையில் அது கடினமான வேலை தான். கம்பியை வைத்து நெம்பிய போது அவர் கையில் குத்தி ரத்தம் வந்தது. எச்சிலை வைத்து பணியை தொடர்ந்தார்.
என்னால் அதற்கு மேல பார்க்க முடியவில்லை. நானும் உதவிக்கு இணைந்து கொண்டேன். இருவருமாக சேர்ந்து ஒருவழியாக கலட்டினோம்.

நான் சென்று மருந்து வாங்கவா என கேட்டேன். "அத விடுப்பா" என்றவர் "மாசக்கடைசின்ன டியூப் வாங்க துட்டு வச்சுருந்தியா?" அவ்வளவு நேரம் வியாபாரம் பேசியவர் வாஞ்சையாக விசாரித்தார்.

டியூப்பை மாட்டி காற்றடித்து சரி பார்த்து முடித்து "ரெடிப்பா" என்றார். 200ரூ எடுத்து கொடுத்தேன். "150ரூ சில்றயா குடுப்பா" என்றார். "இல்ல மீதி சில்ற வேணாம், 200ரூ வச்சுக்கோங்க" என்றேன்.

"அட நீ வேற நீயும் தான சேர்ந்து வேலை பார்த்த இந்தா 100ரூ போதும்" என பணத்தை என்னிடம் திணித்தார்.

அவ்வளவு நேரம் பெரிதாக நினைத்த பணம் எங்கள் பரஸ்பர அன்பின் முன் சாதாரணமாக தெரிந்தது. "அட வச்சுக்கண்ணே, கையிக்கு மருந்து வாங்கி போடு" என உரிமையாக கொடுத்து விட்டேன். பைக்கை எடுக்க போனேன்.

"இருப்பா.." என்றவர். பைக் செயினில் அக்கறையாக ஆயில் அடித்துவிட்டு "இப்ப போகலாம்" என்றார்.
அந்த ஆயிலில் அன்பும் ஒட்டியிருந்தது..  

- Boopathy MurugeshUseful Comments:

Gokul: ஆனா ட்யூப்லெஸ் டயருக்கு ட்யூப் போட்டது தான் ஆச்சிரியம்!!

Boopathy Murugesh: அது தான் தற்காலிக தீர்வு.. பெரும்பாலும் அப்படி தான் பண்ணுவாங்களாம்.. டெம்ப்ரவரியா டியூப் போட்டு விட்டு ஏர் கம்மியா பிடிச்சுகனுமாம்..

பிரபாகர் மு: நைஸ்,,, பட் அதுக்காக ரிம் மாத்தவேண்டிய அவசியம் இல்லை,, டயர கலட்டி எடுத்திட்டு ரிம் உட்புறம் நல்லா எமரி போட்டுட்டு திரும்ம அதே டயர போட்டு காத்து பிடிச்சா லீக் ஆகாது.Sudha Melvin: என்ன பைக் அண்ணா

Boopathy Murugesh: FZஎனதருமை நேயர்களே இந்த '"டியூப்லெஸ் டயரு.. டயர் நல்லாருக்கு, ரிம்ல காத்து போகுது.." - படித்ததில் பிடித்தது ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News