16 பிப்ரவரி 2018

,

காவல் துறையினரிடம் முறையாக அனுமதி பெற்று போராட்டங்களை நடத்துவது எப்படி?

kaaval thuraiyinaridam muraiyaaga anumadhi pettru porattangalai nadatthuvadhu eppadi? - Get Permission from Police - காவல்துறை அனுமதியுடன் போராட்டத்தை முன்னெடுப்பது எப்படி?

kaaval thuraiyinaridam muraiyaaga anumadhi pettru porattangalai nadatthuvadhu eppadi? - Get Permission from Police - காவல்துறை அனுமதியுடன் போராட்டத்தை முன்னெடுப்பது எப்படி?

*காவல்துறை அனுமதியுடன் போராட்டத்தை முன்னெடுப்பது எப்படி?*


1. பள்ளிகளில் விடுமுறை விண்ணப்பம் எழுதுவது போல், அமைப்பின் லெட்டர் பேடில் போராட்டம் செய்யும் இடம், தேதி, நேரம், எத்தனை பேர் கலந்து கொள்வர் போன்றவற்றை குறிப்பிட்டு, மாநகராட்சி என்றால் காவல் ஆணையரிடமும், மற்ற பகுதிகளில் காவல் ஆய்வாளரிடமும் விண்ணப்பிக்க வேண்டும். மாதிரி கடிதத்தை இணைத்து உள்ளோம்.

2. 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.

3. காவல்துறை மூலம் உறுதி செய்யப்பட்ட கடிதம் போராட்டம் நடக்கும் முந்தைய நாள் கிடைக்கும்.

4. உளவுத்துறை காவல் அதிகாரி அவ்வப்போது தங்களை அழைத்து எத்தனை பேர் வருவார்கள், என்ன கோரிக்கை போன்றவற்றை கேட்பார்.

5. போராட்டத்திற்கு பெரிதாக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ரூ 500 செலவு செய்ய முடிந்தவர்கள் பேனர் ஒன்றை அடித்து கொள்ளலாம். ரூ. 2500 செலவு செய்தால் சிறிய ஸ்பீக்கர் மைக் வாங்க முடியும். இரண்டும் கடினம் என்றால், 5 சார்ட் பேப்பர் வாங்கி, கோரிக்கை வாசகங்களை ஸ்கெட்ச் மூலம் எழுதி கையில் ஏந்தி கொள்ளலாம்.

6. உங்கள் ஊரில் உள்ள ஊடக நண்பர்களுக்கு போராட்டத்தை பற்றி தெரியப் படுத்தலாம். ஊடக நண்பர்கள் பணம் எதிர்பார்ப்பார்கள். தயவுசெய்து பணம் தர வேண்டாம்.

7. போராட்டத்தின் போது விநியோகம் செய்ய உள்ள துண்டு பிரசுரம் ஒன்றை தயார் செய்து கொள்ளலாம். வருபவர்கள் எண்ணிக்கை குறைவு என்றால், ஜெராக்ஸ் எடுத்து கொள்ளலாம்.

8. போராட்டம் 4 மணிக்கு துவங்குவதாக இருந்தால், 3:30 மணிக்கு போராட்ட களத்திற்கு சென்று பேனர் கட்டுவது, வருபவர்களை ஒருங்கிணைப்பு செய்வது போன்றவற்றில் ஈடுபடலாம்.

9. அனைவரையும் வருக என வரவேற்று, போராட்டம் ஏன் செய்கிறோம், தீர்வுகள் என நம்முடைய கருத்தை கூறிய பிறகு, கோஷங்களை முன் வைக்கவும்.

10. கலந்து கொண்டவர்களில் பேச விரும்புபவர்களை ஒவ்வொருவராக பேச வாய்ப்பளிக்கவும்.

11. அலைபேசி மூலம் புகைப்படங்கள், காணொளி போன்றவற்றை பதிவு செய்யும் பொறுப்பை ஒருவரிடம் வழங்கவும்.

12. கலந்து கொண்டவர்களின் தகவல்களை பெற ஒருவரை நியமிக்கவும். வருகை பதிவேட்டில் பெயர், அலைபேசி எண்களை பெறவும்.

13. கலந்து கொண்டவர்களிடம் இதுபோன்ற போராட்டத்தை அவரவர் பகுதியில் முன்னெடுக்க வலியுறுத்தவும்.

14. இறுதியாக இன்னொரு முறை கோஷங்களை எழுப்பிய பிறகு, குழுவாக புகைப்படம் ஒன்றை எடுத்து, காவல்துறை நண்பர்களுக்கு நன்றி சொல்லி கலைந்து செல்லலாம்.

நன்றி,
இளையதலைமுறை
மேலும் தகவல்களுக்கு 9962265231 என்ற எண்ணை அழைக்கலாம்.எனதருமை நேயர்களே இந்த 'காவல் துறையினரிடம் முறையாக அனுமதி பெற்று போராட்டங்களை நடத்துவது எப்படி?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News