19 டிசம்பர் 2017

, , ,

நேர்மறை எண்ணங்களை வளர்க்க இந்த 6 பண்புகள் மிக அவசியம்

நேர்மறை எண்ணங்களை வளர்க்க இந்த 6 அவசியமான பண்புகள் | Six Qualities of Positive People, Positive thinking, Motivation in tamil, Thannambikkai quotes in tamil, Suya Munnetram, Vida Muyarchi,

நேர்மறை எண்ணங்களை வளர்க்க இந்த 6 அவசியமான பண்புகள் | Six Qualities of Positive People

  1. நன்றி மனப்பான்மை

  2. தன்னம்பிக்கை

  3. சூழ்நிலைக்கு தகுந்தாற்போல மாற்றிக்கொள்வது

  4. நகைச்சுவை உணர்வு

  5. நேர்மறை சிந்தனை

  6. நிகழ்காலத்தை கூர்ந்து கவனி


நன்றி மனப்பான்மை (Gratitude)


நேர்மறை எண்ணங்களை வளர்க்க இந்த 6 அவசியமான பண்புகள் | Six Qualities of Positive People, Positive thinking, Motivation in tamil, Thannambikkai quotes in tamil, Suya Munnetram, Vida Muyarchi,
நமது வேலை, மனைவி, குழந்தைகள், நண்பர்கள், பெற்றோர்கள், செல்வம், வீடு, கார் இப்படி நம்மிடம் இருப்பவைகளுக்கு முதலில் நன்றி சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு நன்றி சொல்கிறோமோ அந்த அளவிற்கு புது விஷயங்களை ஈர்க்கிறோம்.

நம்மிடம் இருப்பவர்களுக்கு நன்றி சொல்லவில்லை என்றல் புதுசா எதையும் பிரபஞ்சத்திடம் இருந்து ஏற்க முடியாது. நேர்மறை எண்ணம் கொண்டவர்களிடம் இந்த பண்பை காணலாம். நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் தன்னிடம் இருப்பவர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருப்பார்கள், அதனால் அவர்கள் புது விஷயங்களை ஈர்த்துக்கொண்டிருப்பார்கள்.

தன்னம்பிக்கை (Self-Confidence)

தன்னம்பிக்கை குணம் நேர்மறை எண்ணம் கொண்டவர்களிடம் ரொம்பவே அதிகமாக இருக்கும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது கடினமாக இருந்தாலும் அதன் மூலம் அடையும் பலன்கள் அளவற்றது. தன்னம்பிக்கை வளர்த்துக்கொள்ள தெரிந்துவிட்டால் வாழ்க்கையில் எந்த விஷயமும் கஷ்டமாக தெரியாது. உங்களுடைய சொந்த முயற்சிகள், திறமைகள் மீது சந்தேகமே வராது. உங்களுக்கு முன் எவ்வளவு தடைகள் இருந்தாலும் அது ஒரு பெரிய விஷயமாக தெரியாது. இதை தெரிந்து வைத்திருக்கும் நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் இதன் மூலம் நிறைய பயன்களை அடைகின்றனர். அவர்களை இலக்குகளை சுலபமாக அடைய முடியும். இதன் மூலம் வாழ்க்கை எப்பொழுதுமே வெற்றிகரமாகவும் சந்தோசமாகவும்
இருக்கும்.

சூழ்நிலைக்கு தகுந்தாற்போல மாற்றிக்கொள்வது (Adaptability)


நம்முடைய வாழ்க்கை எப்பொழுதும் நாம் எதிர்ப்பார்ப்பது போல அமையாது, நம்மையும் மீறி நாம் எதிர்பாராத விஷயங்கள் நடக்கலாம். நீங்க ஒரு விபத்தை சந்திக்கலாம், வேலை சம்பந்தமாக நிறைய பிரச்சனைகளை சந்திக்கலாம், உங்க பிசினஸ் லாஸ் ஆகலாம், உங்க பொருளை யாராவது திருடிக்கிட்டு போய்டலாம் அல்லது இயற்கை பேரழிவுகள் எதையாவது நீங்கள் சந்திக்கலாம். இது போன்ற சூழ்நிலைகளில் நீங்க மிகவும் எரிச்சலடைந்தால் மனது குழப்பத்தில் செல்லவும் வாய்ப்புள்ளது. உங்களை நீங்களே தாழ்மை படுத்திக்கொள்ளவும் வாய்ப்புள்ளது.

அனால் இந்த மாதிரி நிகழ்வுகள் நேர்மறை எண்ணங்கள் கொண்டவருக்கு நடக்கும் பொழுது அவர் அதை எடுத்துக்கொள்ளும் விதம் மிகவும் வித்தியாசமாக இருக்கும். மனநிலையை நடு நிலையில் வைத்திருப்பார்கள், ஒரு விஷயத்தை உற்று நோக்கி வேலை செய்வார்கள்,கஷ்டமான சூழலிலிருந்து எப்படி வெளியே வருவது என பார்ப்பார்களே தவிர அந்த சூழ்நிலையிற் நினைத்து வருத்தப்பட மாட்டார்கள். சூழ்நிலைக்கு தகுந்தது போல தன்னை மாற்றிக்கொள்வார்கள்.

நகைச்சுவை உணர்வு (Humor)


இயற்கையாகவே நகைச்சுவை உணர்வு இருப்பவர்கள் தண்ணி சுற்றி உள்ளவர்களை எப்பொழுதுமே கலகலப்பாக உயிரோட்டத்துடன் வைத்திருப்பார்கள். எந்த கடினமான சூழலிலும் நகைச்சுவையாக பேசி சுலபமாக அணுக முடியும். இது நேர்மறை எண்ணம் கொண்டவர்களின் முக்கிய குணமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நகைச்சுவை உணர்வுடன் இருப்பதால் வாழ்கை எப்போதுமே சந்தோசமா இருக்கும் இதன் மூலம் நோய் இல்லாத உடல் நிலையை பெற முடியும். அதனால் எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுதெல்லாம் புன்னகை செய்வோம்.

நேர்மறை சிந்தனை (Optimism or Positive Thinking)


நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் தன்னுடைய திறமையை எப்பொழுதுமே குறைத்து மதிப்பிட மாட்டார்கள்,  தன்னால் முடியாது என்ற விஷத்தை கூட முயற்சி செய்து பார்ப்பார்கள்.

நிகழ்காலத்தை கூர்ந்து கவனி (Focus on Present)

கடந்த காலத்தை பற்றி அதிகமாக யோசித்தோமென்றால் முன்னோக்கி செல்ல வேண்டிய வாய்ப்புகளை இழந்து விடுகிறோம். அதே போல எதிர்காலத்தை பற்றி யோசிக்கும் போது நிகழ் காலத்தில் இருக்கும் சந்தோசங்களை இழக்க நேரிடுகிறது.

கடந்த காலத்தை நினைவில் வைத்துக்கொள்வது தப்பில்லை அனால் அதிலேயே மூழ்கி இருப்பது பயனளிக்காது. எதிர்காலத்தை  நினைத்து செயல்படுவதில் தப்பில்லை அனால் அதையே நினைத்து நிகழ்கால சந்தோசங்களை இழக்க கூடாது.

நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் இதை நன்றாக புரிந்துகொண்டு தன்னுடைய வாழ்க்கையை எப்போதுமே நிகழ்காலத்தை நோக்கியே வாழ்கிறார்கள்.

இந்த ஆறு விஷயங்களே நேர்மறை எண்ணம் கொண்டவர்களின் முக்கியமான பண்புகள்.


nermarai ennangalai valarkka indha 6 panbugal miga avasiyam


Nandri manappanmai (Gratitude)

Namadhu velai, manaivi, kulandhaigal, nanbargal, petrorgal, selvam, veedu, car ippadi nammidam iruppavaigalukku mudhalil nandri solla katrukolla vendum. Evvalavukku evvalavu nanri solgiromo andha alavirkku pudhu visayangalai eerkkirom. nammidam iruppavaigalukku nandri sollavillai endral pudhusa edhaiyum pirabanjathidam irundhu eerkka mudiyaadhu. Nermarai ennam kondavargalidam indha panbai kanalaam. nermarai ennam kondavargal thannidam iruppavaigalukku nandri sollikondiruppargal, adhanal avargal pudhu visayangalai eerthukondiruppargal.


Thannambikkai (Self-Confidence)
thannambikkai kunam nermarai ennam kondavargalidam rombave adhigamaga irukkum. thannambikkaiyai valarthukolvadhu kadinamaga irundhaalum adhan moolam adaiyum palangal alavatradhu.

thannambikkai valarthukolla therindhuvittal valkaiyil endha visayamum kastamaga theriyaadhu.
ungaludaiya sondha muyarchigal, thiramaigal meedhu sandhegame varadhu. ungalukku mun evalavu thadaigal irundhaalum adhu oru periya visayamaaga theriyaadhu.

idhai therindhu vaithirukkum nermarai ennam kondavargal idhan moolam niraya payangalai adaigindranar.

avargalai ilakkugaai sulabamaga adaiya mudiyum. idhan moolam valkkai eppoludhume vetrigaramagavum sandhosamagavum irukkum.

soolnilaikku thagundharpola maarikolvadhu (Adaptability)

nammudaiya valkkai eppoludhum naam edhirpparpadhu pola amaiyaadhu, nammaiyum meeri naam edhirparadha visayangal nadakkalaam. neenga oru vibathai sandhikkalaam, velai sambandhamaga niraya pirachanaigalai sandhikkalaam, unga business loss agalaam, unga porulai yaravadhu thirudikkittu poidalaam alladhu iiyarkkai peralivugal edhavaidhi neengal sandhikkalaam. idhu pondra soolnilaigalil neenga migavum erichaladindhu manadhu kulappathil sellavum vaippulladhu. ungalai neengale thalmai padutthikollavum vaippulladhu. aanal indha madhiri nigalvugal nermarai ennangal kondavarukku nadakkum poludhu avar adhai edutthukollum vidham migavum vithiyaasamaaga irukkum.

Mananilaiyai nadu niliyil vaithiruppargal, oru visayathai uttu nokki velai seivargal,kastama sollalil irundhu eppadi veliye varuvadhu ena paarppargale thavira andha soolnilayia ninaitthu varutthapada maatargal. soolnilaikku thagundhadhu pola thannai maatrikolvaargal.

Nagaichuvai unarvu (Humor)
iyarkaiyagave nagaichuvai unarvu iruppavargal thanni sutri ullavargalai eppoludhume kalakalappaaga uyirottathudan vaithiruppargal. endha kadinamaana soolalilum nagaichuvaiyaaga pesi sulabamaga anuga mudiyum. idhu nermarai ennam kondavargalin mukkiya kunamaga paarkkapadugiradhu. enendral nagaichuvai unaruvdan iruppadhu valkai eppodhume sandhosama irukkum idhan moolam noi illadha udal nilaiyai pera mudiyum. adhanal eppoludhellam mudiyumo appoludhellam punnaigai seivom.

Nermarai sindhanai (Optimism or Positive THinking)
Nermarai ennam kondavargal thannudaiya thiramaiyai eppolidhume kuraitthu madhippida maatargal, thaanal mudiyadhu endra visayathai kooda muyarchi seidhu paarpaargal.

Nigalkalathai koorndhu kavani (Focus on Present)

kadandha kaalathai patri adhigamaaga yosithomendral munnokki sella vendiya vaaipugalai ilandhu vidukirom. adhe pola edhirkalathi patri yosikkum podhu nigal kalathil irukkum sandhosangalai illa neridugiradhu.

Kadandha kalathai ninaivil vaithukolvadhu thappillai aanal adhileye moolgi iruppadhu payanalikkadhu. future niniathu seyalpaduvadhil thappillai aanal adhaye ninithu nigalkala sandhosangali illakka koodhadhu.

nermarai ennam kondavargal idhai nandraga purindhukondu thannudaiyai valkaiyai eppodhume nigalkalathai nokkiye valkiraargal.

indha visayangale neramarai ennam kondavargalin mukkiyamaana panbugal.எனதருமை நேயர்களே இந்த 'நேர்மறை எண்ணங்களை வளர்க்க இந்த 6 பண்புகள் மிக அவசியம் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News