12 நவம்பர் 2017

மூக்கிலிருந்து ரத்தம் வந்தால் என்ன முதலுதவி செய்ய வேண்டும்?

மூக்கிலிருந்து ரத்தம் வந்தால் முதலுதவி செய்ய வேண்டும், மூக்கில் இருந்து ரத்தம் வடிவது, nose bleeding first aid in tamil, mookil ratham kasivadhu nirkka tips, mudhaludhavi

மூக்கில் அடிபட்டால் ரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கிலிருந்து திடீரென்று ரத்தம் வடிவதுண்டு. 


நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்தத் தொல்லை அதிகமாகக் காணப்படும்.

மூக்கிலிருந்து ரத்தம் வந்தால் முதலுதவி செய்ய வேண்டும், மூக்கில் இருந்து ரத்தம் வடிவது, nose bleeding first aid in tamil, mookil ratham kasivadhu nirkka tips, mudhaludhavi

மூக்கு இரத்தப்போக்கு: மூக்கில் இருந்து ரத்தம் வடிவது முதலுதவி

முதலுதவி: மூக்கிலிருந்து ரத்தம் வந்தால், அவரை முன்னோக்கிக் குனியச்செய்து, மூக்கின் மென்மையான முன்பகுதியை, விரல்களால் பிடித்துக் கொண்டு, வாயால் மூச்சுவிடச் செய்ய வேண்டும், இவ்வாறு பத்து நிமிடங்களுக்குத் தொடர்ச்சியாகப் பிடித்துக்கொள்ள, ரத்தம் வடிவது நின்றுவிடும்.

மூக்கிலிருந்து ரத்தம் வந்தால் முதலுதவி செய்ய வேண்டும், மூக்கில் இருந்து ரத்தம் வடிவது, nose bleeding first aid in tamil, mookil ratham kasivadhu nirkka tips, mudhaludhavi
என்ன செய்யக் கூடாது?
மூக்கிலிருந்து வரும் ரத்தத்தை அவர் விழுங்கிவிடக் கூடாது. அதனால்தான் முன்னால் குனியச் சொல்கிறோம். வாய் வழியாக ரத்தம் வர வாய்ப்புள்ளது. பயப்பட வேண்டாம். வாயிலிருக்கும் ரத்தத்தைத் துப்பச் சொல்லுங்கள்.

தலையைப் பின்பக்கமாக சாய்த்துவிடக் கூடாது. அப்படி சாய்த்தால், ரத்தம் வாய்க்குள் போய், நுரையீரலுக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே நிமிரவே கூடாது.  மூக்கிலிருந்து ரத்தம் தொண்டைக்குச் சென்று குமட்டலை ஏற்படுத்தும். வாந்தி வரலாம். சமயங்களில் புரையேறி, இருமல் வந்து சேரும்.

மூக்கு சிந்தச் செய்யவும் கூடாது. விரலை நுழைத்து மூக்கை அடைக்கக் கூடாது.

**இத்தனை முயற்சிகளிலும் ரத்தக் கசிவு நிற்கவில்லை என்றால், அது மூக்கின் மேற்பகுதியிலிருந்துதான் வருகிறது என்று அர்த்தம். அதற்கு ரத்தக் குழாயைப் பொசுக்கி ரத்தக் கசிவை நிறுத்த வேண்டும். இதற்கு மருத்துவர் உதவியை நாட வேண்டும்.எனதருமை நேயர்களே இந்த 'மூக்கிலிருந்து ரத்தம் வந்தால் என்ன முதலுதவி செய்ய வேண்டும்? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News