இந்த 8 காரணங்களால் தான் குதிகால் வலி வருகிறது | Tamil247.info
Loading...

இந்த 8 காரணங்களால் தான் குதிகால் வலி வருகிறது

குதிகால் வலி வருவதற்கான காரணங்களை தெரிந்துகொண்டால் வலியிலிருந்து விரைவில் நிவாரணம் பெற வழி தேடலாம்...

இந்த 8 காரணங்களால் தான் குதிகால் வலி வருகிறது , குதிக்கால் வலி, பாதங்களில் வலி, கால் வலி வர காரணம், Plantar Fasciitis natural cure in tamil
குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் நிறைய பேர் தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் உள்ளனர். இவர்கள் காலையில் எழுந்ததும் தரையில் நின்றால் போதும், தீயை மிதித்தது போல் ‘சுள்’ ளென ஒரு வலி குதிகாலில் தொடங்கி, கால் முழுவதும் பரவும்.

கால் பாதம் எரிச்சல்:
கால் எரிச்சலும் மதமதப்பும் கைகோத்துக்கொள்ளும். ஓர் அங்குலம்கூடக் காலை எட்டுவைத்து நடக்க முடியாது; மாடிப்படி ஏற முடியாது. அத்தனை சிரமம்!

ஆனால், இந்தச் சிரமம் எல்லாமே சில மணி நேரத்துக்குத்தான். வலியைப் பொறுத்துக்கொண்டு, நடக்கத் தொடங்கிவிட்டால், சிறிது நேரத்தில் வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். பிறகு, இவர்கள் பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு, இரவில் உறங்கச் செல்லும்போது மீண்டும் குதிகாலில் வலி ஏற்படும். இந்தப் பிரச்சினைக்கு ‘பிளான்டார்ஃபேசியைட்டிஸ்’ (Plantar Fasciitis) என்று பெயர்.

குதிகால் வலி வருவதற்கு என்ன காரணம்?


1) அழற்சி மற்றும் வீக்கம்: 

i) குதிகால் எலும்பிலிருந்து ‘பிளான்டார் அப்போநீரோசிஸ்’ (Plantar Aponeurosis) எனும் திசுக்கொத்து கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது. குதிகால் எலும்பும் இந்தத் திசுக்கொத்தும் இணையும் இடத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டாகிறது. இதனால் குதிகால் வலி ஏற்படுகிறது.

ii) குதிகால் எலும்பும் தசைநார்களும் உராய்வதைத் தடுக்க ‘பர்சா’ (Bursa) எனும் திரவப்பை உள்ளது. இதில் அழற்சி ஏற்பட்டு வீங்கிவிட்டாலும் குதிகால் வலி வரும்.

2) குதிகாலில் எலும்பு அதிகமாக வளருவது: 
சிலருக்குக் குதிகால் எலும்பும் திசுக்கொத்தும் சேருமிடத்தில் சிறிதளவு எலும்பு அதிகமாக வளர்ந்துவிடும். இதற்கு ‘கால்கேனியல்ஸ்பர்’ (Calcaneal Spur) என்று பெயர். இதன் காரணமாகவும் குதிகால் வலி ஏற்படுவது வழக்கம்.

3) யூரிக் அமிலம்: 
சிலருக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும். இதனாலும் குதிகால் வலி வரலாம்.

4) நோய்கள்: 
காசநோய், முடக்குவாதம், தன்தடுப்பாற்றல் நோய், கோணலாக வளர்ந்த பாதம், தட்டைப் பாதம், எலும்பு வலுவிழப்பு நோய் போன்ற பல காரணங்களாலும் குதிகால் வலி வரலாம்.

5) வார்ம்அப்
முறைப்படி ‘வார்ம்அப்’ பயிற்சிகளைச் செய்யாமல் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டால் நாளடைவில் குதிகால் வலி வந்துவிடும்.

6) கரடுமுரடான காலணிகள்:
கரடுமுரடான தோல் செருப்புகளையும் பிளாஸ்டிக் செருப்புகளையும் அணிபவர்களுக்குக் குதிகால் வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காரணம், வாகனங்களில் ‘ஷாக் அப்சார்பர்’ வேலை செய்வதுபோல, நம் காலணிகள் செயல்பட வேண்டும். அப்போதுதான் குதிகாலுக்கு வேலைப் பளு குறையும். ஆனால், கரடுமுரடான தோல் செருப்புகளில் இந்தப் பலனை எதிர்பார்க்க முடியாது. மிருதுவான ரப்பர் செருப்புகள் ( ஹவாய் செருப்புகள் ) இதற்கு உதவும்.

7) கூம்பு வடிவ ஷூக்கள்:
சிலர் கூம்பு வடிவ ஷூக்களை அணிகிறார்கள். இவற்றால் கால் பாத எலும்புகள் அழுத்தப்பட்டு, இடைவெளி குறைந்து, வலி தொடங்கும். சாதாரணமாக இருக்கும்போது கால் முழுவதும் வலிக்கும். நடக்கும்போது குதிகாலில் வலி அதிகமாக இருக்கும்.

8) ஹை ஹீல்ஸ்:
பெண்களில் பலரும் ‘ஹைஹீல்ஸ்’ செருப்புகளை அணிகின்றனர். குதிகாலை உயரமான நிலையில் வைத்திருக்க உதவுகிற இந்தக் காலணிகள் பாதத்துக்குச் சமமான அழுத்தத்தைத் தருவதில்லை. இவற்றைக் காலில் போட்டுக்கொண்டு நடக்கும்போது, பிளான்டார் திசுக்கொத்து மிகவும் விரிந்த நிலையிலேயே நாள் முழுவதும் இருப்பதால், சீக்கிரமே அழற்சி அடைந்து குதிகால் வலியை ஏற்படுத்திவிடும்.

9) நீரிழிவு நோய்: 
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குக் குதிகால் வலி, இளம் வயதிலேயே வந்து விடுகிறது. காரணம், ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறும்போது, அந்த அதீதச் சர்க்கரையானது குதிகால் எலும்பு மூட்டுகளில் தேங்கும். அப்போது அங்குள்ள திசுக்களை அது அழிக்கத் தொடங்கும். இதன் விளைவால் இவர்களுக்குக் குதிகால் வலி வரும்.

Source: tamil hindu news paper
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'இந்த 8 காரணங்களால் தான் குதிகால் வலி வருகிறது ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
இந்த 8 காரணங்களால் தான் குதிகால் வலி வருகிறது
Tamil Fire
5 of 5
குதிகால் வலி வருவதற்கான காரணங்களை தெரிந்துகொண்டால் வலியிலிருந்து விரைவில் நிவாரணம் பெற வழி தேடலாம்... குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment