சமையல்: பொட்டுக்கடலை பாயசம் ஸ்வீட் | Tamil247.info
Loading...

சமையல்: பொட்டுக்கடலை பாயசம் ஸ்வீட்

சேமியா ஜவ்வரிசி ரவை கடலைபருப்பு வரிசையில் பொட்டுக்கடலையில் செய்யப்படும் பாயசம் சுவையோடு சத்தும் மிகுந்தது. சளி இருமல் தொண்டை கட்டு போன்ற உபாதைகளுக்கு இந்த பாயசத்தை பருகினால் குணம் கிடைக்கும்.
சமையல்: பொட்டுக்கடலை பாயசம் ஸ்வீட், Pottu kadalai payasam sweet recipe in tamil, Samayal seimurai, Sweet recipes,


செய்ய தேவையானவை:

  1. பொட்டுக்கடலை-1 கப் 
  2. தேங்காய்-1 
  3. சர்க்கரை-1/2 கப் 
  4. ஏலப்பொடி-1/4 டீஸ்பூன் 
  5. உடைத்த முந்திரி-சீவிய பாதாம் தலா 1 டேபிள் ஸ்பூன் 
  6. நெய்-1டீஸ்பூன்
 செய்முறை:
தேங்காயை துருவி அரைத்து முதல்பால் ஒரு கப் இரண்டாம் மூன்றாம் பால் நான்கு கப் அளவில் எடுத்துக்கொள்ளவும்
பொட்டுக்கடலையை பொடித்து சலிக்கவும்.
முதல் பாலை தனியாக வைத்துக்கொண்டு மற்ற பாலில் பொட்டுக்கடலையை சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும். இது நீர்த்த நிலையில் இருக்கவேண்டும். காய்ச்சினால் கெட்டியாகிவிடும்.
அடுப்பில் வைத்து கொதிக்கும் வரை கைவிடாமல் காய்ச்சி சர்க்கரை சேர்க்கவும்.அடுப்பை சிம்மில் வைத்து கெட்டி தேங்காய்ப்பால் சேர்க்கவும்.
கெட்டியாக இருந்தால் மேலும் நீர் சேர்த்துக்கொள்ளலாம்.
நெய்யில் வறுத்த முந்திரியை நெய்யுடன் சேர்க்கவும்.ஏலப்பொடி,சீவிய பாதாம் சேர்த்து கலந்து பறிமாறவும்.
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'சமையல்: பொட்டுக்கடலை பாயசம் ஸ்வீட்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+




SHARE WhatsApp SHARE
சமையல்: பொட்டுக்கடலை பாயசம் ஸ்வீட்
Tamil Fire
5 of 5
சேமியா ஜவ்வரிசி ரவை கடலைபருப்பு வரிசையில் பொட்டுக்கடலையில் செய்யப்படும் பாயசம் சுவையோடு சத்தும் மிகுந்தது. சளி இருமல் தொண்டை கட்டு போன்ற உ...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment