04 அக்டோபர் 2017

, ,

டெங்கு காய்ச்சல் - சில விழிப்புணர்வு தகவல்கள்

டெங்கு காய்ச்சல் நோய் விழிப்புணர்வு தகவல்கள், டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள், Awareness, Health doubts, Medical information,டெங்கு காய்ச்சல் நோய், டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள், Awareness, Health doubts, Medical information,
🚫 1990ஆம் ஆண்டுகளில் கொசு மூலம் பரவும் முக்கியமான நோயாக டெங்கு இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் இதற்கு பாதிப்படைந்து உள்ளதாக உலக சுகாதார கழகம் தெரிவித்துள்ளது.

🚫 உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய இந்த கொடிய நோய் வடக்கு அர்ஜென்டினா, பங்களாதேஷ், பிரேசில், கம்போடியா, கொலம்பியா, கியூபா, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளில் அதிகம் பரவுகிறது.

நோய் கணிப்பு :

🚫 ரத்தத்தில் உள்ள லியூகோசைட்ஸ் என்ற வெள்ளை ரத்த அணுக்களின் அளவு குறைதல்.

🚫 ரத்தத்தில் உள்ள ரத்த வட்டுக்களின் (pடயவநடநவள) எண்ணிக்கை குறைதல்.

🚫 உடலின் எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்யும் ரத்த நிண நீர் பரிசோதனை போன்ற சோதனைகளின் மூலம் நோய் இருப்பதை கண்டறியலாம்.

ஏடிஸ் கொசு :

🚫 ஏடிஸ் கொசு கறுப்பு நிறமுடையது. இதன் சிறகுகளில் வெள்ளை நிறப் புள்ளிகள் காணப்படும். இவற்றில் பெண் கொசு மட்டும்தான் மனிதனுக்கு இந்த நோயை பரப்புகிறது. இனச்சேர்க்கைக்குப் பின்னர், பெண் கொசுவுக்கு முட்டை முதிர்ச்சியடைய மனிதர்களின் ரத்தத்தில் உள்ள புரதச்சத்து தேவைப்படும். இதனால், மனித ரத்தத்தை உறிஞ்சும்.

🚫 இந்த ஏடிஸ் கொசுவானது அசுத்தமற்ற நீர்நிலைகளில் வளரக்கூடியவை. கொசுக்கள் பெரும்பாலும் இரவில்தானே கடிக்கும்? ஆனால், இந்த கொசுக்களோ பெரும்பாலும் மாலை அல்லது பகலில் கடிக்கும்.

யாருக்கு ஆபத்து அதிகம்?

🚫 குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் இந்த நோய் வரலாம். குறிப்பாக, குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கும் எளிதில் வரும்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் :

🚫 2 நாட்கள் இடைவெளியில் விட்டு விட்டு காய்ச்சல் வருவது.

🚫 காய்ச்சலின் போது வாய்ப்பகுதியை சுற்றிலும் நிறம் மாறுவது.

🚫 கண்கள் சிவந்து காணப்படுவது மற்றும் முகத்தில் தடிப்புகள் ஏற்படுவது.

🚫 காய்ச்சலுடன் மூச்சு திணறல் ஏற்படுவது.

🚫 குளிர், தலைவலி, கண்களை அசைக்கும் போது வலி, கீழ் முதுகு பகுதியில் வலி, இரத்த வாந்தி, கறுப்பு நிற மலம் மற்றும் கால்களில் வீக்கம், கால்களிலும் மூட்டுகளிலும் கடுமையான வலியுடன் காய்ச்சல் போன்றவைகள் ஆகும்.

நோயுற்ற காலத்தில் :

🚫 காய்ச்சல் பாதித்த காலத்தில் நோயாளி நன்றாக ஓய்வெடுக்க வேண்டும்.

🚫 உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால், அதிக அளவில் நீர்ச்சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

🚫 பால், பழச்சாறு, இளநீர், கஞ்சி போன்ற திரவ உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு:

🚫 கொசுக்களை ஒழிப்பது ஒன்றே வழி. கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும்.

🚫 தெரு மற்றும் வீட்டைச் சுற்றி தண்ணீரைத் தேங்கவிடாதீர்கள்.

🚫 குடிப்பதற்காக குடம், தண்ணீர் தொட்டிகளில் சேமித்து வைக்கும் நீரை நன்றாக கொசு புகாதபடி மூடிவைத்துப் பயன்படுத்த வேண்டும்.

🚫 வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசுவலை பொருத்தலாம்.

🚫 கொசு விரட்டி, கொசுவலையைப் பயன்படுத்தி கொசுக்கடியிலிருந்து தப்பிக்கலாம்.

🚫 எனவே, கை, கால் முழுக்க மறைக்கும் வகையில் ஆடைகளை அணியலாம்.

🚫 டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும்.


டெங்கு காய்ச்சல் குணமாக :
👉 டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருந்தாக பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு இலைச்சாறு, நிலவேம்பு சாறு போன்றவைகளை அளித்தால், அவர்கள் மிக விரைவில் குணமடைவார்கள்.

எவ்வாறு தயாரிப்பது?

பப்பாளி இலை சாறு : 
👉 புதிதாக பறித்த பப்பாளி இலைகளை காம்புகளை அகற்றிவிட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து அதை வடிகட்டி கொள்ளவும். இதை 10 மில்லி என்ற கணக்கில் நாளொன்றுக்கு 4-5 முறை பருகி வர வேண்டும். இதனால் டெங்கு காய்ச்சலானது கட்டுப்படுத்தப்படும்.

மலைவேம்பு இலைச்சாறு :
👉 மலைவேம்பு இலைகளை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 10 மில்லி வீதம் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பருக வேண்டும். மலைவேம்பு இலைச்சாறு டெங்கு வைரஸ்களை எதிர்க்கும் சக்தி கொண்டது.

நிலவேம்பு குடிநீர் :
👉 நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பு, சுக்கு, மிளகு,  பற்படாகம், விலாமிச்சை, சந்தனம், பேய்புடல், கோரைக்கிழங்கு, வெட்டிவேர் ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். 50 மில்லி வீதம் நாளொன்றுக்கு இருவேளை அருந்த வேண்டும்.

இதுபோல,
டெங்கு காய்ச்சலால் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு கஞ்சி தான் மிகமிகச் சிறந்த உணவாகும்.

நிறையப் பழச்சாறுகளைக் குடிப்பதாலும் டெங்கு காய்ச்சலிலிருந்து தப்பிக்கலாம். அதிலும் வைட்டமின் சி அதிகமுள்ள ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, கிவி, பப்பாளி உள்ளிட்ட பழங்களின் சாற்றைக் குடிக்கலாம்.
புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை உண்பதாலும் டெங்கு காய்ச்சலை விரட்டலாம். பால், முட்டை, மீன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடுவது நலம்.
புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை உண்பதாலும் டெங்கு காய்ச்சலை விரட்டலாம்.

இளநீரை நிறையக் குடிப்பதாலும் டெங்கு காய்ச்சல் விரைவில் குணமாகும்.
மேற்கண்ட முறைகளின் மூலம் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும்.

நாம் போராட வேண்டியது மனிதர்களிடம் இல்லை...! கொசுக்களிடம் !
விழித்திரு மனிதா! இந்த டெங்குவில் இருந்து தப்பிக்க...!
Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'டெங்கு காய்ச்சல் - சில விழிப்புணர்வு தகவல்கள் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90