04 செப்டம்பர் 2017

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலியான காட்சி

MMA Fighter Kills World Champion Powerlifter in Street Fight in Russia, பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலியான காட்சி

ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரி ட்ராக்கியோவ் (22) என்பவர் 
பளு தூக்கும் போட்டியில் கடந்த 2008 மற்றும் 2011 ஆகிய
இரு ஆண்டுகளில் உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் ஆவர்.

தற்போது சர்வதேச அளவில் ஆணழகன் போட்டியில்
பங்கேற்பதற்காக பயிற்சிகளில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், Aug 21 காலை 7 மணியளவில் ஹபரோவ்ஸ்க் 
என்ற நகரில் நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார்.

அப்போது, சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது 
அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

மற்றவர்கள் வேடிக்கை பார்த்த நிலையில் 
அனார் ஆலாகவர்னோவ்  என்ற நபர் விளையாட்டு வீரரை 
தாக்கியுள்ளார்.

சினிமா சண்டைக்காட்சிகளில் வருவது போல் அந்நபர் 
கால்களை சுழற்றி விளையாட்டு வீரரின் தலையில் 
அடித்துள்ளார்.

இத்தாக்குதலில் நிலைகுலைந்து கீழே விழுந்து மீண்டும்
எழுந்துள்ளார்.

அப்போது, அவர் சுதாரிப்பதற்குள் அந்த நபர் மறுபடியும் 
அவரது தலையில் உதைக்கவும் அவர் மயங்கி கீழே 
விழுந்துள்ளார்.

ஆத்திரம் தீராத அந்த நபர் மயங்கி கிடந்த விளையாட்டு 
வீரரின் தலையில் பலமுறை கையால் குத்துக்கிறார்.

சில நிமிடங்களில் நண்பர்கள் தடுத்ததும் தாக்கிய அந்த 
நபர் அங்கிருந்து தப்பியுள்ளார்.

மயங்கி கிடந்த விளையாட்டு வீரரை மருத்துவமனையில் 
சேர்த்தபோது அவர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

விளையாட்டு வீரரை தாக்கிய காட்சிகள் அங்கு வைக்கப்
பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகியுள்ளது.

விளையாட்டு வீரரை தாக்கி கொலை செய்த நபர் மீது 
வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தீவிரமாக தேடி 
வருகின்றனர்.
-
CCTV footage: 

Awareness Video: Road accidents Caught on camera

தினத்தந்திஎனதருமை நேயர்களே இந்த 'உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலியான காட்சி ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News