Top Ad 728x90

Latest Posts

13 ஜூலை 2017

,

முகத்தில் மங்கு வர காரணம், மங்கு மறைய என்ன செய்யலாம்?

Mugathil Mangu sariyaaga enna seiyya vendum, முகத்தில் மங்கு வர காரணம், மங்கு மறைய என்ன செய்யலாம்?, மங்கு குணமாக சிகிச்சைகள்


முகத்தில் மங்கு வர காரணம், மங்கு மறைய என்ன செய்யலாம்?

சருமத்தில் ஆக்காங்கே கருப்பாகவோ வெளுத்தோ, ஒட்டு போட்டது போல் திட்டு திட்டாக இருந்தால் அதனை மங்கு என்று கூறுவார்கள். அதனை போக்க மருந்து மாத்திரைகளை விட எளிய தீர்வுகள் நம் வீட்டிலேயே இருக்கின்றன.
அதற்கான வழிகளை இங்கே சொல்லியிருக்கிறோம். நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க.
Mugathil Mangu sariyaaga enna seiyya vendum, முகத்தில் மங்கு வர காரணம், மங்கு மறைய என்ன செய்யலாம்?, மங்கு குணமாக சிகிச்சைகள்

சருமப் பராமரிப்புக்கு, குறிப்பாக முகத்தின் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. முகத்தில் மச்சம்போல ஆரம்பித்து முகம் முழுவதும் பரவி, முக அழகைக் கெடுப்பது ‘மெலாஸ்மா’ எனப்படும் மங்கு.

மெலனின் என்ற நிறமி, சருமத்துக்கு நிறத்தைத் தருகிறது. மெலனின் அதிகரித்தால், சருமத்தில் ஆங்காங்கே கறுப்புத் திட்டுக்களும் புள்ளிகளும் ஏற்பட்டு தோற்றத்தையே கெடுத்துவிடும்.

மெலாஸ்மா (மங்கு) என்றால்?

மெலாஸ்மா (மங்கு in english - Melasma) பிரச்னை, 80 சதவிகிதப்  பெண்களுக்கு வரக்கூடியது. சில ஆண்களுக்கும்கூட மங்கு வரும். இது நோய் அல்ல; சருமத்தில் ஏற்படக்கூடிய கறுப்பான பாட்சஸ், புள்ளிகள் எனச் சொல்லலாம். சருமத்தின் சில இடங்களில் கறுப்பு அணுக்கள் அதிகமாகக் காணப்படுவதால், பாட்ச் பாட்ச்சாக கறுப்பாகத் தெரிகிறது. சூப்பர்ஃபிஷியல், டீப் என்ற இரண்டு வகை மங்குகள் உள்ளன. இது, குறிப்பிட்ட காலத்துக்கு வரக்கூடிய தற்காலிகப் பிரச்னை என்றாலும் சிலருக்கு மீண்டும் மீண்டும் வரலாம்.

மங்கு யாருக்கு வரும்?

20-35 வயதுள்ளவர்களுக்கு வரலாம். பிறகு 45-50 வயதுள்ளவர்களுக்கு வர வாய்ப்புகள் உள்ளன. வேலூர், திருச்சி போன்ற ஊர்களில் வசிப்பவர்களுக்கு, அதீத வெயில் காரணங்களாலும் மெலாஸ்மா வரலாம்.

முகத்தில் மங்கு வர காரணம்


மரபியல், சூரியக்கதிர்கள், ஹார்மோன் மாத்திரைகளைச் சாப்பிடுதல், ஹார்மோன் சிகிச்சை எடுப்பவர்கள், தைராய்டு பிரச்னை, ஹார்மோன் மாற்றங்கள் போன்ற காரணங்களால் மங்குப் பிரச்னை வருகிறது. மெலனொ சைட் என்ற செல்லை உற்பத்தி செய்ய உதவுவது ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன். மெலனின், ஸ்டிமுலேடிங் ஹார்மோனை அதிகப்படுத்துவதும் ஈஸ்ட்ரோஜன் தான். கருவுற்ற காலத்தில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் அதிகமாகச் சுரக்கும். இது இயல்பான மாற்றம்; இதன் விளைவாகவும் சருமத்தில் மங்கு பிரச்னை வருகிறது.

ஒரு சிலருக்குக் கர்ப்ப காலம் முடிந்த பின் சரியாகிவிடும். சிலருக்குச் சரியாகாமலும் போகலாம். பிரசவத்துக்குப் பின் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை காத்திருந்து, தானாகச் சரியாகிறதா எனக் கவனித்தப் பின் சிகிச்சை எடுக்கலாம். அதுபோல, மெனோபாஸ் வரும் பெண்களுக்குக்கூட இந்தப் பிரச்னை வரும்போது சரும மருத்துவர், காஸ்மெட்டால ஜிஸ்ட்டிடம் சென்று சிகிச்சை பெறலாம்.

மங்கு குணமாக சிகிச்சைகள் என்னென்ன?


முதல் கட்டமாக சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதுதான் சரி. சூரியக் கதிர்கள், அழுக்கு, மாசு, சுற்றுச்சூழலிருந்து காப்பாற்றுவது சன் ஸ்கிரீன்.

ஹைட்ரொகுயினான் (Hydroquinone), ஸ்டீராய்டு (Steroid) க்ரீம்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.  இதனால், மங்கு போகலாம். ஆனால், மீண்டும் பல மடங்கு பக்கவிளைவுகளை  ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். வேறு சில சருமத் தொல்லைகளும் வரலாம்.

டிசிஏ (TCA -Trichloroacetic acid) என்ற பீல்ஸ் இருக்கிறது. இந்த சிகிச்சையை எடுக்கும்போது, மங்கு தானாகப் போய்விடும். அதிகமாக, அதாவது ஆழமான மங்குவாக இருந்தால், 50 சதவிகிதம்தான் சரியாகும்.

மேலோட்டமாக இருக்கும் மங்கு, பீல்ஸ் செய்யும்போது மூன்று மாதங்களிலேயே சரியாகிவிடும். மங்கு திரும்ப வர வாய்ப்பு உள்ளதால், யாருக்கு மங்கு திரும்ப வருமோ அவர்கள் மட்டும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சருமப் பராமரிப்புக்கான பீல்ஸ் செய்துகொள்ளலாம். இதனுடன் சன்ஸ்கிரீன்  பயன்படுத்துவதும் அவசியம். அடர் கறுப்பாக இருக்கும் இடத்தை வெண்மையாக்க, ஸ்கின் லைட்னிங் சிகிச்சையும் பயன் அளிக்கும்.

மங்கு வராமல் தடுக்க


தேன், பாதாம் :
தேனும் பாதாமும் சேர்த்த கலவை மங்குகளை போக்க சிறந்த வழியாகும். பாதாமை ஊற வைத்து தோலினை நீக்கிக் கொள்ளுங்கள். அதனை நன்றாக அரைத்து, அதனுடன் தேன் கலந்து முகத்தில் போடவும். தினமும் இப்படி செய்தால், மங்கு குறைந்து, சருமம் கிளியாராகிவிடும்.


பசும்பால்,  எலுமிச்சை சாறு:

பசும்பால்  2 ஸ்பூன், எலுமிச்சை சாறு  1 ஸ்பூன் இவற்றை ஒன்றாகக் கலந்தால் திரிந்துவிடும். அப்போது மேலே மிதக்கும் ஏடுகளை குழைத்து எடுத்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவி வந்தால் முகத்தில் தோன்றும் கருமை நிறம் மாறி முகம்பொலிவுபெறும்.

உருளைக் கிழங்கு :
உருளைக் கிழங்கு சருமத்தில் அற்புதமாக நல்ல விளைவுகளை கொடுக்கும். முக்கியமாக நாள்பட்ட மங்குவையும் போக்கும் குணங்கள் உள்ளது.
உருளைக் கிழங்கிலிருந்து சாறு எடுத்து அதனை முகத்தில் தேய்த்து வாருங்கள். முகம் என்றில்லாமல், உடல் முழுவதும் இந்த சாறினை பூசி, காய்ந்த பின் குளிந்தால், சரும பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்கும்.

தக்காளி சாறு, ஓட்ஸ் :
சரும நிற மாற்றத்தில் இந்த கலவை நன்றாக வேலை செய்யும். நீங்கள் முயன்று பாருங்கள். கட்டாயம் முன்னேற்றம் தரும்.

தேவையானவை :
ஓட்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்
யோகார்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாறு - தேவையான அளவு

ஓட்ஸை யோகார்ட்டுடன் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனுடன் சிறிது தக்காளி சாறு கலந்து, பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். இதனை சருமத்தில் ஏற்பட்டுள்ள மங்கு, கரும் புள்ளிகள் மீது நன்றாக தேயுங்கள். காய்ந்த பின் கழுவவும். தினமும் இவ்வாறு செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

தினமும் மருத்துவர் பரிந்துரைப்படி சருமத்துக்கு ஏற்ற சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று, ஸ்கின் கேர் பீல்ஸ் செய்துகொள்ளலாம்.

ஆண்களுக்கும் மங்கு வரும் என்பதால், அவர்களும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.

வெயிலில் அதிக நேரம் அலைவதைத் தவிர்க்கலாம். முடிந்த அளவுக்கு சன் ஸ்கிரீன், ஸ்கார்ஃப் போன்றவற்றால் முகம், கை, கால்களை மூடி பாதுகாக்கலாம்.

மெனோபாஸ் சமயத்தில் தோன்றும் மங்குப் பிரச்னைக்கு உடனே சரும மருத்துவரை அணுகி, பீல்ஸ் செய்துகொள்ளலாம்.
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'முகத்தில் மங்கு வர காரணம், மங்கு மறைய என்ன செய்யலாம்? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90