06 ஜூலை 2017

,

ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை சாதம் [சமையல்]

கறிவேப்பிலை சாதம் சமையல் செய்முறை.. Karuveppilai saadham samayal (Curry leaves Rice recipe), karuveppilai podi sadam, kariveppilai soru.

ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை சாதம் - Karuveppilai saadham samayal seimurai

செய்ய தேவையான பொருட்கள்:
 1. சாதம் - 4 கப் (வடித்து ஆற வைத்தது)
 2. கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
 3. இஞ்சி - சிறிதளவு
 4. சின்ன வெங்காயம் - சிறிதளவு
 5. வற்றல் மிளகாய் - 4
 6. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
 7. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
 8. பூண்டு - இரண்டு பல
 9. சீரகம் - சிறிதளவு
 10. புதினா - சிறிதளவு
 11. எலுமிச்சை சாறு - சிறிதளவு


கறிவேப்பிலை சாதம் சமையல் செய்முறை.. Karuveppilai saadham samayal (Curry leaves Rice recipe), karuveppilai podi sadam, kariveppilai soru.
கறிவேப்பிலை சாதம் செய்முறை:
எலுமிச்சை சாறு எடுத்து தனியே வைத்து கொள்ளவும். வற்றல் மிளகாய், உளுத்தம் பருப்பு, வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் ஆகிய பொருட்களை லேசாக வறுத்து அரைத்துக் கொள்ளவும். புதினா, கறிவேப்பிலை, இஞ்சி, சின்ன வெங்காயம் ஆகிய பொருட்களை அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அரைத்த விழுது மற்றும் அரைத்த பொடியை போட்டு கலந்து பச்சை வாசனை போனதும் சாதத்தோடு கலந்து சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும் சுவையான கறிவேப்பிலை சாதம் தயார்.

குறிப்பு:
கறிவேப்பிலை எண்ணெயில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். எண்ணெயில் பொறிக்கும் உணவுகளில் அதிக கொழுப்பிருக்கும். அதனை குறைக்க நினைப்பவர்கள் எண்ணெயில் சிறிதளவு கறிவேப்பிலையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டினால் போதும். எண்ணெயில் உள்ள கொழுப்பு கரைந்துவிடும்.

– அனைவருக்கும் பகிருங்கள்
கறிவேப்பிலை சாதம் சமையல் செய்முறை.. Karuveppilai saadham samayal (Curry leaves Rice recipe), karuveppilai podi sadam, kariveppilai soru.எனதருமை நேயர்களே இந்த 'ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை சாதம் [சமையல்]' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News