உடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய 10 தவறுகள் என்னென்ன தெரியுமா? | Tamil247.info

உடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய 10 தவறுகள் என்னென்ன தெரியுமா?

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

வொர்க் அவுட்டுக்குப் பின் என்னென்ன செய்யக் கூடாது?

உடற்பயிற்சி கட்டுரை, உடற்பயிற்சி செய்வது எப்படி புத்தகம், உடற்பயிற்சி உணவு முறைகள், உடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய தவறுகள்

உடற்பயிற்சியின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அதை முறையாகச் செய்யாதபோது, அதற்கான பலன்கள் நிச்சயம் கிடைக்காது. உடற்பயிற்சிக்கு முன்போ, உடற்பயிற்சியின்போதோ, உடற்பயிற்சிக்குப் பிறகோ செய்யவேண்டியவை பற்றி ஜிம் பயிற்சியாளரிடம் கேட்டுத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

உடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய தவறுகள் என்னென்ன தெரியுமா?

1. தண்ணீர் வேண்டும் ஆனால்... வேண்டாம்

உடற்பயிற்சி செய்து முடித்ததும் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.
அதே நேரத்தில் குறைந்தபட்சம் 5 நிமிட இடைவெளிக்குப் பிறகே குடிக்க வேண்டும். ஏனெனில், கடுமையான உடற்பயிற்சியின்போது அதிகமாக இருந்த ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு சாதாரண நிலைக்கு வரச் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, உடனே தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து விடுங்கள்.

2. கார்போஹைட்ரேட் உணவுகள் வேண்டாம்

வொர்க்-அவுட் முடிந்ததும் கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணக் கூடாது. இவை உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். மாறாக, அதிக புரோட்டீன் சத்துள்ள உணவுகளை உண்பதால் அவை உடலின் தசை வளர்ச்சிக்கு உதவும்.

3. குளிர்பானங்கள் வேண்டாம்

வொர்க்-அவுட் முடித்தவுடன் உடல் களைப்பாக இருப்பதாக உணர்ந்தால், உடனே அதிகம் சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர் பானங்களையோ, சோடா போன்றவற்றையோ குடிக்கக் கூடாது. அதிகமான சர்க்கரை மீண்டும் உடலின் கலோரிகளை அதிகரித்துவிடும். எனவே, தண்ணீர் குடிப்பதே சிறந்தது.

4. ரன்னிங், சைக்கிளிங் கூடாது

ட்ரெட் மில்லில் ஓடுதல், சைக்கிளிங் போன்ற கார்டியோ (Cardio) வார்ம்-அப் வகைப் பயிற்சிகளை வொர்க்-அவுட் செய்த பிறகு, கண்டிப்பாகச் செய்யக் கூடாது. ஏற்கெனவே கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்துவிட்டு மீண்டும் வார்ம்-அப் பயிற்சிகளைச் செய்வதால், அது மூட்டுகளையும் தசைகளையும் பாதிக்கும். உடற்பயிற்சி செய்வதற்கு முன்புதான் இவற்றைச் செய்ய வேண்டும். உடற்பயிற்சி முடித்த பிறகு, ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைத்தான் செய்ய வேண்டும்.

5. உடையை மாற்றி விடுங்கள்

வொர்க்-அவுட் முடித்ததும் நேராக வீட்டுக்குச் சென்று, உடையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில், உடற்பயிற்சியின்போது ஏற்பட்ட வியர்வையால், உடையில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளின் தொற்று ஏற்பட்டிருக்கலாம். வொர்க்-அவுட்டின்போது உடுத்திய உடையை நீண்ட நேரம் உடுத்தினால், சருமத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படலாம்.

6. வெள்ளை பிரெட் சாப்பிடாதீர்கள்

பிரெட்டில் உள்ள ஸ்டார்ச் வேகமாகச் சர்க்கரையாக மாறக்கூடியது. எனவே, இதை அதிகளவில் சாப்பிடாமல், குறைந்த அளவில் சாண்ட்விச்சாக உண்ணலாம். முக்கியமாக வெள்ளை நிற பிரெட் உண்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

7. சீஸ் வேண்டாம்

உடற்பயிற்சி செய்து முடித்ததும் சீஸ், பதப்படுத்தப்பட்ட சிக்கன் சேர்க்கப்பட்ட பர்கர் போன்ற உணவுகளை உண்ணக் கூடாது. ஏனெனில், அவற்றில் கொழுப்பு மற்றும் உப்பு அதிகளவில் நிறைந்துள்ளன. இவை உடல் எடையை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தையும் பாதிக்கும்.
Also Read: உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கான‌ அதிபயங்கர எச்ச‍ரிக்கை!
8. ஷவர் குளியலுக்கு நோ!

வொர்க்-அவுட் முடித்ததும் வியர்வைப் படலம் ஏற்பட்டு, பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே, உடற்பயிற்சிக்குப் பிறகு, குளித்துவிடுவது நல்லது. ஆனால், ஷவரில் குளிப்பது ஏற்றதல்ல. குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்.


9. ஆம்லெட்டுக்கு நோ சொல்லுங்கள்

உடற்பயிற்சிக்குப் பின் முட்டை சாப்பிடுவது நல்லதுதான். முட்டையில் புரோட்டீன் மற்றும் கோலைன் அதிகம் உள்ளது. ஆனால் முட்டையைப் பொரித்தோ வறுத்தோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வேகவைத்து உண்ணலாம்.

10. ஜூஸ், மில்க் ஷேக் வேண்டாம்

ஜூஸ், மில்க் ஷேக் போன்றவற்றை உடற்பயிற்சிக்குப் பின் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அவற்றில் சர்க்கரை அதிகம் இருப்பதால், அவையும் உடல் எடையை அதிகரிக்கக் காரணமாகிவிடும்.


- ஜி.லட்சுமணன் @ Dr Vigadan.

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'உடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய 10 தவறுகள் என்னென்ன தெரியுமா?' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
உடற்பயிற்சி செய்யும் பலரும் செய்யக்கூடிய 10 தவறுகள் என்னென்ன தெரியுமா?
Tamil Fire
5 of 5
வொர்க் அவுட்டுக்குப் பின் என்னென்ன செய்யக் கூடாது? உடற்பயிற்சியின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அதை முறையாகச் செய்யாதபோது, அதற்கான பலன்...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News