06 மே 2017

,

கண்கள் பளபளப்பாகவும் பொலிவுடனும் இருக்கணுமா? இதைப் படிங்க!

karuvalayam poga tips in tamil, eye dark circle remove tips in tamil, கண்கள் அழகாகவும், கண்களுக்கான சில அழகு குறிப்புகள், kangal alagu kurippu, azhagu kurippu for face in tamil

கண்கள் பளபளப்பாகவும் பொலிவுடனும் இருக்கணுமா? இதைப் படிங்க!


கண்கள் சோர்வாக இருந்தால் முகமே களை இழந்து விடும். எனவே கண்களை குளிர்ச்சியாக வைத்திருந்தாலே போதும் பொலிவாகவும் பளபளப்பாகவும் இருக்கும். கண்களை பாதுகாக்க அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.
karuvalayam poga tips in tamil, eye dark circle remove tips in tamil, கண்கள் அழகாகவும், கண்களுக்கான சில அழகு குறிப்புகள், kangal alagu kurippu, azhagu kurippu for face in tamil

தூக்கம் கெட்டாலே கண்களை சுற்றி கருவளையும் தோன்றும். எனவே இரவு நேரங்களில் அதிகம் டிவி, நெட் பார்க்காமல் கண்களுக்கு ரெஸ்ட் கொடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.
 கண்களை பாதுகாப்பாக வைத்திட உபயோகமுள்ள இயற்க்கை வைத்திய குறிப்புகள்

கண்கருவளையம் நீங்க:
கண்கருவளையம் நீங்க சந்தனக்கல்லில் சாதிக்காயை அரைத்து பூசிவந்தால் கருவளையம் விரைவில் மறையும்.

வெண்ணெயுடன் கொத்தமல்லி சாற்றைக் கலந்து கண்களுக்கு பேக் போட கண்கள் கருவளையம் நீங்கி பிரகாசமாக இருக்கும்.

பாதம் பருப்புகளை பாலுடன் சேர்த்து ஊறவைத்து அரைத்து கண்களைச்சுற்றி பேக் போடுவதால் கண்ணின் கருவளையம் மறையும்.

கருவளையங்கள் போக, துளசியும் புதினாவும் அரைத்து பன்னீர் (rosewater) சேர்த்துத் தடவவேண்டும்.

கண் கருவளையம் போக்க ஆயுர்வேத வழிகள்

கண்கள் பிரகாசமாக:
நந்தியாவட்டை பூவை நீரில் கழுவி வெள்ளைத் துணியில் சுற்றி கண்களின் மேல் வைத்து கட்டிவர கண்கள் பிரகாசமாகும். அவ்வாறு இயலாதவர்கள் பறித்த பூவை தண்ணீரில் கழுவி கண்ணின் மேல் ஒற்றியெடுக்க கண்கள் குளிர்ச்சியடைந்து பிரகாசமாகும்.

வெள்ளரிக்காயை அரைத்தோ அல்லது வட்டமாக நறுக்கியோ கண்களின் மீதும் கண்களைச்சுற்றியும் பேக்போட்டு வர கண்ணிற்கு குளிர்ச்சியைத்தரும்.

கண்கள் பளபளப்பாகவும் பொலிவுடனும் இருக்க தினமும் இரவில் கண் இமைகளில் விளக்கெண்ணெயை ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் விட்டுவர வேண்டும்.

திரிபலா சூரணத்தை ஒரு சிட்டிகை அளவு எடுத்து ஒருகப் நீரில் இரவே கலந்து அந்த நீரைக் கொண்டு காலையில் கண்களைக் கழுவினால் கண்கள் நன்றாக ஒளிவீசும்.

கண்களை பாதுகாக்க எளிய 5 வழிகள் 

உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பு இவற்றிற்கு கருஞ்சீரகம் 100 கிராம் நல்லெண்ணெயை கண்ணின் மேலும், கண்ணைச் சுற்றியும் தேய்த்து கழுவினால் கண்எரிச்சலும் சிகப்பும் மாறும்.

தினமும் காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளைக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு கண்களை இடது வலதாக மேலும் கீழுமாக சுற்ற வேண்டும். இவ்வாறு 5-6 முறை செய்யவும். கண்களை இறுக்கமாக மூடித்திறக்க வேண்டும். இவ்வாறு 5 முறை செய்ய வேண்டும். இது கண்களுக்கு ஏற்ற சிறந்த எக்ஸர்சைஸ் என்கின்றனர் நிபுணர்கள்.

karuvalayam poga tips in tamil, eye dark circle remove tips in tamil, கண்கள் அழகாகவும், கண்களுக்கான சில அழகு குறிப்புகள், kangal alagu kurippu, azhagu kurippu for face in tamilஎனதருமை நேயர்களே இந்த 'கண்கள் பளபளப்பாகவும் பொலிவுடனும் இருக்கணுமா? இதைப் படிங்க!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News