26 மே 2017

,

ஆண்களைக் கவரும் பெண்களின் 6 முக்கிய அம்சங்கள் தெரியுமா?

ஆண்களைக் கவரும் பெண்களின் 6 முக்கிய அம்சங்கள் தெரியுமா? ,

ஆண்களைக் கவரும் பெண்களின் 6 முக்கிய அம்சங்கள் தெரியுமா?

ஒரு ஆண் பெண்ணைப் பார்த்ததும் காதலில் விழுவதன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. சொல்லப்போனால் ஆண்களால் ஒரு பெண்ணைப் பார்த்ததுமே அவர்களைக் கணிக்க முடியும் என்று அறிவியல் கூறுகிறது. அதன் படி, ஒவ்வொரு முறையும் ஆண்கள் பெண்களை கவனிக்கும் போது, ஆண்களுக்குள் ஓர் மதிப்பீடு நிகழ்வு நடைபெறுகிறது. ஆண்கள் பெண்களின் முக்கிய அம்சங்களைப் பார்த்து கணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவர்கள். இந்த முக்கிய அம்சங்கள் தான் ஒரு பெண்ணை கவர்ச்சியாக வெளிக்காட்டுகிறது. ஏனெனில் அந்த முக்கிய அம்சங்கள் அவர்களின் நல்ல ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்கத் தன்மையுடன் தொடர்புடையது. இங்கு அறிவியல் கூறும் ஆண்களைக் கவரும் பெண்களின் 6 முக்கிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

அழகிய வளைவுகள்

ஆய்வுகளில் விலா எலும்புகளுக்கும், இடுப்பிற்கும் இடைப்பட்ட பகுதி சிறியதாகவும், பரந்த இடுப்பையும் கொண்ட பெண்களால் ஆண்கள் அதிகம் ஈர்க்கப்படுவார்களாம். உதாரணமாக, சிறந்த இடுப்பு விகிதம் 7:10 ஆகும். ஆண்கள் அழகிய வளைவுகளைக் கொண்ட பெண்களால் கவரப்படுவதற்கு காரணம், இந்த அம்சம் கொண்ட பெண்களின் இனப்பெருக்கம் நன்றாக இருக்கும் என்பதால், அவர்களை அறியாமலேயே அம்மாதிரியான பெண்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.

நீளமான மற்றும் அழகான கூந்தல்

குட்டையான கூந்தலைக் கொண்ட பெண்களை விட, நீளமான கூந்தலைக் கொண்ட பெண்களால் ஆண்கள் அதிகம் ஈர்க்கப்படுவார்கள். இது அனைவருக்கும் அறிந்த ஒன்று தான். இதற்கு காரணம் நீளமான பட்டுப் போன்ற கூந்தல் பெண்களின் ஆரோக்கியமான உடலை வெளிக்காட்டுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே பெண்களே ஆண்களைக் கவர கூந்தலை நீளமாக வளர்த்து வாருங்கள்.

அளவான மேக்கப்

மேக்கப் போட்டு ஆண்களைக் கவர்ந்துவிடலாம் என்று நினைத்தால் அது தவறு. ஏனெனில் ஆய்வின் படி, ஆண்கள் மேக்கப் போடாமல் இயற்கை அழகுடன் இருக்கும் பெண்களின் மீது தான் காதல் வயப்படுவதாக தெரிய வந்துள்ளது. அளவான மேக்கப் எனவே இனிமேல் பல அடுக்கு மேக்கப் போடுவதைத் தவிர்த்து, இயற்கை அழகில் ஜொலிக்க ஆரம்பியுங்கள். இதனால் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

வாயாடி பெண்கள்

உரத்த குரலில் படபடவென்று பேசும் பெண்கள் ஆண்களால் அதிகம் கவரப்படுவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அதனால் தான் ஆண்கள் அமைதியாக இருக்கும் பெண்களை விட, வாயாடி பெண்களின் மீது காதலில் விழுகிறார்கள். இதுக்குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்னவென்றால், உரத்த குரலானது பெண்களின் இளமை மற்றும் பெண்மையை அறிந்து கொள்ள உதவுகிறதாம். உயிரியல் ரீதியாக இளமை என்பது ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க சாதகமாக இருப்பதை வெளிக்காட்டும். அதனால் தான் ஆண்கள் அவர்களை அறியாமலேயே வாயாடி பெண்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.

புன்னகை

பெண்களின் அழகை அதிகரித்துக் காட்டும் மற்றொரு முக்கிய அம்சம் புன்னகை. எப்போதும் புன்னகைக்கும் முகத்துடன் இருக்கும் பெண்கள் தான் ஆண்களால் அதிகம் கவரப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. வெறும் புன்னகை மட்டும் இருந்தால் போதாது, பற்களும் வெள்ளையாக பளிச்சென்று இருந்தால் தான், அது ஆண்களைக் கவர உதவும். எனவே பற்களை வெள்ளையாக பளிச்சென்று வைத்துக் கொள்ளுங்கள்.

சிவப்பு

பொதுவாக கருப்பு நிறத்திற்கு அடுத்தப்படியாக, சிவப்பு கவர்ச்சியை அதிகரித்துக் காட்ட உதவும் ஓர் நிறம். மானுடவியல் ஆய்வுகளின் படி, சிவப்பு நிறம் ஆண்களை எளிதில் கவர உதவுவதாக கூறுகின்றன. ஆகவே பெண்களே நீங்கள் சைட் அடிக்கும் ஆணை எளிதில் கவர நினைத்தால், சிவப்பு நிற உடை, சிவப்பு நிற நெயில் பாலிஷ், சிவப்பு நிற லிப்ஸ்டிக் என்று ஒரே சிவப்பு நிறத்திற்கு மாறிவிடுங்கள்.எனதருமை நேயர்களே இந்த 'ஆண்களைக் கவரும் பெண்களின் 6 முக்கிய அம்சங்கள் தெரியுமா? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News