குழந்தைகளுக்கு டயபர் அவசியம்தானா? இதை படித்துவிட்டு கொஞ்சம் யோசியுங்கள்..!! | Tamil247.info
Loading...

குழந்தைகளுக்கு டயபர் அவசியம்தானா? இதை படித்துவிட்டு கொஞ்சம் யோசியுங்கள்..!!

kulandhaigal diaper thevaiya, kids diaper avasiyama, kulandhai valarppu tips in tamil, kulandhai valarppu murai, kulandhai paramarippu, குழந்தை வளர்ப்பு டிப்ஸ்
நான் ஒரு கிராமப் பகுதியில் சொந்தமாக Medical Shop நடத்தி வருகிறேன். எனது கடையில் ஒரு நாளில் அதிக அளவில் விற்பனையாகும் ஒரு பொருள் என்று பார்த்தால்... அது குழந்தைகளுக்கான பேபி டயாபர்கள்தான் (Pampers, Huggies, etc).

டயபர் அணிவிப்பதன் காரணம்

டயாபர்களில் குறிப்பிட்டுள்ள வாசகமே 'one pamper = one dry night' என்பதுதான். அதாவது இந்த ஒரு டயாபரைக் குழந்தைக்கு அணிவித்து விட்டால், இரவு முழுதும் குழந்தையின் சிறுநீரானது இதன் பஞ்சுப் பகுதிகளால் உறிஞ்சப்பட்டு, அதில் உள்ள வேதிப் பொருட்களால் ஜெல் (magic gel) நிலைக்கு மாற்றப்படுகிறது. இதனால் குழந்தை ஈர உணர்வால் அழாமல் இரவு முழுதும் தூங்கும்.

பெற்றோர்களின் தூக்கம்

அதைவிட முக்கியமாகக் குழந்தை அழுது பெற்றோர்களின் தூக்கம் கலைந்து எழுந்து, குழந்தை சிறுநீர் கழித்த அந்த ஈரத்துணியை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை.

இறுக்கமான ஆடை

விசயம் என்னவென்றால், பெரியவர்களான நாமே இரவு நேரத்தில் இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்துத் தளர்வான லுங்கி, நைட்டி முதலான ஆடைகளை அணிகிறோம். ஆனால் இந்தப் பச்சிளம் குழந்தைகளுக்குக், காற்றோட்டத்துக்கு வாய்ப்பே இல்லாத இந்த டயாபர்களை தினசரி அணிவிப்பது எந்த வகையில் சரியான செயலாக இருக்க முடியும்? அதிலும் வெளியூர் பயணமென்றால் பாவம் அந்தக் குழந்தைகள், நாள் முழுதும் டயாபர்களால்தானே சுற்றப்பட்டு இருக்கின்றன.

பிறப்புறுப்பில் அரிப்பு புண்கள் 

போதுமான காற்றோட்டம் இல்லாததாலும், சிறுநீரை ஜெல்லாக மாற்றும் வேதிப் பொருட்களின் தாக்கத்தாலும் அலர்ஜியாகிக் குழந்தைகளின் பிறப்புறுப்பில் அரிப்பு புண்கள் போன்றவை தோன்றுகின்றன.

ஆனால் அலட்டிக்கொள்ளாத நாம் அதற்கும் ஒரு ஆயிண்ட்மென்ட்டைப் பூசிவிட்டு அடுத்த டயாபரை மாட்டி விடுகின்றோம்.

தாத்தா பாட்டிகள் கால குழந்தை வளர்ப்பு

யோசித்துப் பார்த்தால், இந்த டயாபர்கள் நம்மிடையே புழக்கத்திற்கு வந்து ஒரு 10 ஆண்டுகள் ஆகியிருக்குமா?
இந்த டயாபர்களின் உபயோகம் இல்லாமல்தானே நமது தாய் தந்தையர் 4, 5 குழந்தைகள் வரையும், நமது தாத்தா பாட்டிகள் 8, 10 குழந்தைகள் வரையிலும் வளர்த்தனர்! அவர்கள் நம்மை வளர்க்க எத்தனை இரவுகளில் எத்தனை முறை தூக்கத்தில் விழித்திருப்பார்கள்!

நாம் வளர்ப்பது ஒன்றோ இரண்டோதானே!

 பெற்ற குழந்தைகளின் ஆரோக்கியத்தைவிட நிம்மதியான தூக்கம் முக்கியம் என்கிற அளவுக்கு மனித மனம் மரத்துவிட்டதோ..! என நினைக்கத் தோன்றுகிறது.

kulandhaigal diaper thevaiya, kids diaper avasiyama, kulandhai valarppu tips in tamil, kulandhai valarppu murai, kulandhai paramarippu, குழந்தை வளர்ப்பு டிப்ஸ்
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'குழந்தைகளுக்கு டயபர் அவசியம்தானா? இதை படித்துவிட்டு கொஞ்சம் யோசியுங்கள்..!! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
குழந்தைகளுக்கு டயபர் அவசியம்தானா? இதை படித்துவிட்டு கொஞ்சம் யோசியுங்கள்..!!
Tamil Fire
5 of 5
நான் ஒரு கிராமப் பகுதியில் சொந்தமாக Medical Shop நடத்தி வருகிறேன். எனது கடையில் ஒரு நாளில் அதிக அளவில் விற்பனையாகும் ஒரு பொருள் என்...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment