எரி தேங்காய் / எரி தேங்கா சுட்டு சாப்பிடும் முறை தெரியுமா? | Tamil247.info
Loading...

எரி தேங்காய் / எரி தேங்கா சுட்டு சாப்பிடும் முறை தெரியுமா?

எரி தேங்காய் / எரி தேங்கா சுட்டு சாப்பிட்டிருக்கிறீர்களா, இல்லை என்றால் எப்படி செய்வது என பார்க்கலாம் ..

எரி தேங்காய் இல்ல எரி தேங்கா என மதுரை மாவட்ட வட்டார வழக்கில் சொல்லுவாங்க.

sutta thengai, eri thangai seivadhu eppadi, pandigai unavu, aadi onnu palagaram, thengai sudum vizha,fried coconut recipe in tamil
நண்பர்கள் கூடினால் இல்லை ஆற்றில், குளத்தில், கிணற்றில் குளித்து விட்டு வந்த பின் எங்காவது தென்னந்தேப்பில் தேங்காய் திருடி இப்படி எரி தேங்காய் செய்து உண்பதும் உண்டு.

சில இரவுகளில் பேசி கொண்டே இருந்து நண்பர்களுடன் அப்படியே ஊர் எல்லை தாண்டி நடந்த பின் வழியில் இருக்கும் ஏதாவது தென்னந்தோப்பில் தேங்காய் திருடி எரி தேங்காய் செய்து நடு இரவில் உண்டதும் உண்டு.

ஆனால் எரி தேங்காய் மல்யுத்த கோதாவில் ஆடும் இளைஞர்கள் வழுவடைய மல்யுத்த ஆசான்களால் தயாரிக்கப் பட்டு கொடுக்கப் பட்டதே உண்மையாகும் .
அது நாளடைவில் விளையாட்டாக செய்து உண்ணும் பழக்கமும் வந்தது.

எரி தேங்கா எப்படி செய்வது?

நன்கு விளைந்த தேங்காயின் மேல் உள்ள மூன்று கண் திறந்து அதில் தேங்காய் நீர் இருக்க அவல், நாட்டு சக்கரை, வருத்த எள் திணித்து மீண்டும் தேங்காய் கண் மூடி அதை ஒரு கூறிய குச்சியால் (பண்டிகை சமயத்தில் தேங்காய் சுடும் குச்சியை தெருக்களில் அல்லது காய்கறி சந்தைகளில் விற்ப்பார்கள் )  குத்தி தீயில் சுட்டு எடுத்தால் எரி தேங்காய் கிடைக்கும்.
இல்ல இல்ல அமிர்தம் கிடைக்கும் என கூட சொல்லலாம்
உண்மையில் அமிர்தம் எப்படி இருக்கும் என தெரியாது ஆனால் நான் எரி தேங்காய் உண்ட காலத்தில் அது எனக்கு அமிர்தத்தை விட அதிகம் இனித்தது
இதையே ஆடி ஒன்றாம் நாள் தேங்காய் சுடும் பண்டிகையாகவும் கொண்டாடுவதும் உண்டு தமிழகத்தில்.
 
- Chembiyan Valavan
எரி தேங்காய்,  சுட்ட தேங்காய், sutta thengai, eri thangai seivadhu eppadi, pandigai unavu, aadi onnu palagaram, thengai sudum vizha,fried coconut recipe in tamil
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'எரி தேங்காய் / எரி தேங்கா சுட்டு சாப்பிடும் முறை தெரியுமா?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
எரி தேங்காய் / எரி தேங்கா சுட்டு சாப்பிடும் முறை தெரியுமா?
Tamil Fire
5 of 5
எரி தேங்காய் / எரி தேங்கா சுட்டு சாப்பிட்டிருக்கிறீர்களா, இல்லை என்றால் எப்படி செய்வது என பார்க்கலாம் .. எரி தேங்காய் இல்ல எரி தேங்கா ...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment