06 ஜனவரி 2017

சாமி சிலைக்கு பதில் "ராயல் என்பீல்ட்" புல்லட்டை வைத்து வழிபடும் அதிசய மக்கள்.

royal enfield bike temple in india, royal enfield sami silai kovil tamil news, ராயல் என்பீல்ட் சிலை கோவில்

royal enfield bike temple in india, royal enfield sami silai kovil tamil news

சாமி சிலைக்கு பதில் ராயல் என்பீல்ட் புல்லட்டை வைத்து வழிபடும் அதிசய மக்கள்.

சண்டிகாரிலிருந்து 50 Km தொலைவில் NH-21 சாலையோரம் இருக்கும் ஜோட்பூர் சுண்டியா என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் ராயல் என்பீல்ட் புல்லட் வண்டியை சிலையாக வைத்து வழிபட்டு வருகின்றனர். செல்லுகின்ற பயணம் பாதுகாப்பாக இருக்கவேண்டுமென நூற்றுக்கணக்கான பேர் தினம்தோறும் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

ராயல் என்பீல்ட் கோவில் உருவான கதை:

சில காலங்களுக்கு முன்னர் அந்த ஊர் பெரிய மனிதருக்கு ஓம் பன்னா என்று ஒரு மகன் இருந்துள்ளார் அவரிடம் ஒரு ராயல் என்பீல்ட் புல்லட் இருந்து வந்துள்ளது. தனது மனைவியை காட்டிலும் அந்த ராயல் என்பீல்ட் புல்லட்டை மிகவும் நேசித்து வந்துள்ளார் ஓம் பன்னா. இப்படி இருக்க ஒரு நாள்(1988) ஓம் பன்னா தனது புல்லட்டை ஓட்டி செல்லும் போது விபத்துக்குள்ளாகி அந்த இடத்திலேயே இறந்து விட்டார்.

அவர் இறந்த பிறகு அவரது ராயல் என்பீல்ட் புல்லட்டை காவலர்கள் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்று நிறுத்தி வைத்துள்ளனர். மறுநாள் காலை பார்த்தால் பைக் இருந்த இடத்தில் இல்லை, மாறாக விபத்து நடந்த இடத்திலேயே இருந்தது. யாரேனும் தூக்கி சென்று வைத்திருப்பார்கள் என எண்ணிய காவல் துறையினர் அதை மீண்டு எடுத்து சென்று சங்கிலியால் பூட்டு போட்டு காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். அனால் மறுநாள் இரவு மீண்டும் அந்த பைக் விபத்து நடந்த இடத்திற்க்கே சென்று அந்த இடத்திலேயே இருந்தது கண்டு வியப்படைந்த காவலர்கள் மற்றும் பொது மக்கள் புல்லட்டிற்கும் ஓம் பன்னாவிற்குமிடையே இருந்த ஒற்றுமையால் ஓம் பன்னாவின் ஆத்மா எங்கும் செல்லாமல் பைக்கையே சுற்றி வருவதாக எண்ணி அதற்க்கு மரியாதை செலுத்தும் விதமாக கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.

அதன் பிறகு அந்த வழியாக செல்லும் அனைவரும் இந்த கோவிலை வழிபாட்டு செல்வது வழக்கமாகி போனது. இதை வழிபடாமல் கடந்து சென்றால் ஏதேனும் அசம்பாவிதம் நேரிட வாய்ப்புள்ளது என நம்பிக்கை மக்களிடம் நிரம்பியுள்ளது.

பக்தர்கள் பைக்கிற்கு சிகப்பு கயிறை கட்டியும், திருநீறு வைத்தும், ஓம் பானா விற்கு பக்தி பாடல்கள் பாடியும் வழிபாடு செய்து வருகிறார்கள்.

கதை நம்புமளவிற்கு இல்லையென்றாலும் கோவிலையும் அதை கும்பிடும் மக்களையும் எண்ணிப்பார்க்கையில் வித்தியாசமாகவும் வியப்பாகவும் இருக்கிறது.


sami silaikku badhil Royal enfield bullettai vaitthu vazhibadum adhisaya makkal.


chandigarilirundhu 50 km tholiavil NH-21 salai aruge irukkum jodpoor chundia endra kiramathil vasikkum makkal Royal Enfield vandiyai silaiyaaga vaitthu vazhipattu varungindranar. Sellugindra payanam padhukappaaga irukkavendumena thinamdhorum nootrukkankkana per vandhu vazhipattu selgindranar.

Royal Enfield kovil uruvana kadhai:


sila kalangalukku munnar andha oor periya manidharukku Om Banna endru oru magan irundhullaar avaridam oru Royal Enfield bullet irudhu vandhulladhu. than manaiviyai kaattilum andha Royal Enfield bulletai migavum nesitthu vandhullaar. ippadi irukka oru naal thanadhu bullettai otti sellum podhu vibathukkullagi andha idathileye irandhu vittar. avar irandha piragu kaavalargal Royal Enfield bullettai police station kondu sendru niruthi vaithullaanar. maarunaal kalai paarthal bike irundha idatthil illai, maaraga vibatthu nadandha idathileye irundhadhu.

yarenum thooki sendru vaitthiruppaargal ena enniya kaval thuraiyinar adhai meendu edutthu sendru sangiliyal pootu pottu kaaval nilaiyathil nirutthi vaithullaanar aanal marunaal iravu meendum andha bike vibatthu nadandha idatthirkke sendru andhe idathilye irundhadhu kandu viyappadaindha kavalargal mattrum podhu makkal bikeirkkum  Om Banna virkkum irundha ottrumaiyaal Om banna vin aathmaa engum sellaamal bikaye suttri varuvadhaga enni adharkku mariyaadhai selutthum vidhamaaga kovil katti vazhipattu varugindranar.

adhan piragu andha vazhiyaga sellum anaivarum indha kovilai vazhipattu selvadhu vazhakkamaagi ponadhu. idhai vazhipadamal kadandhu sendraal edhenum asambaavidham nerida vaaippulladhu ena nambikkai makkalidam nirambiyulladhu.

pakthargal bikirkku sigappu kayirai kattiyum, thiruneeru vaitthum, Om bana virkku bakthi padalgal paadiyum vazhibaadu seidhu varugiraargal.

Kadhai nambumalavirkku illaiyendralum kovilaiyum adhai kumbidum makkalaiyum enniparkkaiyil vithiyasamagavum viyappagavum irukkiradhu.

Source: http://beingindian.com/lifestyle/royal-enfield-bullett-baba-temple/ 

royal enfield bike temple in india, royal enfield sami silai kovil tamil news, ராயல் என்பீல்ட் சிலை கோவில்எனதருமை நேயர்களே இந்த 'சாமி சிலைக்கு பதில் "ராயல் என்பீல்ட்" புல்லட்டை வைத்து வழிபடும் அதிசய மக்கள்.' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News