சீன போலி முட்டைகளை எப்படி கண்டுபிடிப்பது? | Tamil247.info

சீன போலி முட்டைகளை எப்படி கண்டுபிடிப்பது?

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
china fake eggs, poli muttai kandupidikkum murai, plastic eggs in india, போலி முட்டை
Add caption
போலி முட்டைகளின் நதி மூலம் - ரீஷி மூலம் / கண்டறிவது மற்றும் தடுக்கும் வழிகள்
======================================================

சமீபத்தில் கேரளாவில் மோர் / ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களின் கடைகளை சேட்டன்கள் உடைத்துப்போட்டார்கள். காரணம் அங்கே இருந்து வாங்கிய முட்டைகள் போலி முட்டைகள் என கண்டறிந்ததால். கான்பூரில் இருந்து ஒரு நண்பர் "நேற்று வாங்கிய முட்டைகளில் இருந்தவை போலி முட்டைகள்" என்று படத்துடன் செய்தி போட்டிருந்தார். வடக்கு / தெற்கு என இந்தியா முழுக்க பரவிவிட்ட போலி முட்டைகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன ? அதை விற்பவர்களுக்கு என்ன லாபம் ? எப்படி கண்டறிவது ? இந்த போலி முட்டைகளிடம் இருந்து மக்களை காக்கும் வழி என்ன ? என்பதை எல்லாம் நான் சிந்தித்து ஆராய்ந்து இந்த பதிவை எழுதுகிறேன்.

போலிமுட்டைகளின் தாயகம் சீனாவின் ஹெனன் மாநிலம். (Henan). மத்திய சீனாவில் இருக்கும் இந்த மாநிலம் சீனாவில் ஐந்தாவது பெரிய பொருளாதார வட்டம். விவசாயத்தை தொழிலாக கொண்ட மக்கள். விவசாயம் கந்த பத்தாண்டுகளாக சரிவை சந்தித்துவருகிறது. பெரிய லாபம் இல்லாத தொழிலாக மாறி வருகிறது. அதனால் கடந்த ஐந்தாண்டுகளாக இந்த போலி முட்டை, போலி திராட்சை, போலி பன்றி குடல் போன்றவைகளை தயாரிக்கும் தொழில் செழிக்கிறது. சமீபகாலங்களில் அரசு கடும் நடவடிக்கை எடுத்துவருவதாலும், ஏழு வேதிப்பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் இந்த முட்டை உண்டவர்களின் உடல்நலனில் ஏற்பட்ட கடும் பாதிப்பாலும், மூலப்பொருட்களின் விலை உயர்வாலும் இந்த போலி முட்டைகள் இப்போது மியான்மர், தாய்லாந்து, இந்தோனேஷியா, இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கும், சீனாவின் மிகவும் பின் தங்கிய சில மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஏழு கெமிக்கல்கள் போட்டு தயாரித்த முட்டை என்று சொன்னேன் அல்லவா ? விலை எப்படி கட்டுப்படியாகிறது ? தயாரிப்பு செலவு அதிகம் ஆகுமே என நீங்கள் நினைக்கலாம். இந்திதியாவை பொறுத்தவரை இந்த ஏழு கெமிக்கல் முட்டையை வைத்து நாலு மடங்கு லாபம் சம்பாதிக்கலாம்.

நான் விசாரித்தவரையில் 360 முட்டை கொண்ட முமு பெட்டி - 7 டாலர். (டாலர் மதிப்பு 1 இந்திய ரூபாய்க்கு 60 என வைத்துக்கொண்டால் - 420 ரூபாய்.) போர் டுவெண்டி என்று பொருத்தமாக வந்துள்ளது பாருங்கள்.

சாதாரண பிராய்லர் கோழி முட்டை 360 - ஒரு முட்டை ஐந்து ரூபாய் என்று வைத்துக்கொண்டால் - 1800 ரூபாய்.

இது நாலு மடங்குக்கு மேல் லாபம்.

இந்த போலி முட்டையின் சுவை, சாதாரண பிராய்லர் கோழி / நாட்டுக்கோழி முட்டையின் சுவையை விட அதிகமாக இருக்கும். அதனால் மக்களால் வித்யாசம் கண்டுபிடிக்கவே முடியாது. சில முட்டைகளின் கெமிக்கல் காம்பினேஷன் அரைகுறையாக இருந்தால் மஞ்சள் கரு கெட்டிப்பட்டு போய் காட்டிக்கொடுத்துவிடும். இதை பற்றிய விழிப்புணர்வு அரபு நாடுகளில் ஏற்கனவே உண்டு என்பதால் தான் சேட்டன்கள் போலி முட்டைகளை கண்டுபிடித்து ரிலையன்ஸ் / மோர் கடைகளை சூறையாடினார்கள். ஆனால் முட்டைகளை இந்தியா முழுமைக்கும் ஏற்றுமதி செய்யும் நம் தமிழ்நாட்டில், நம் சென்னையில், இந்த போலி முட்டைகள் லாபவெறி கொண்ட பெரிய டிஸ்டிரிபியூட்டர்களால் மாற்றி விற்கப்படுகிறது. உங்களுக்கு முட்டையை விற்கும் நாடார் அண்ணாச்சிக்கு அது போலி முட்டை என்று தெரியாது. அவரும் அதையே தான் ரெண்டு எடுத்து சாப்பிடுவார். இந்த பரிதாப நிலையை நான் எப்படி சொல்ல ?

போலி முட்டைகளை எப்படி தயாரிப்பது ?

இந்த போலி முட்டையை தயாரிக்கும் முறை - முதலில் மஞ்சள் கருவை தயாரித்துக்கொண்டு, அதை குறிப்பிட்ட கெமிக்கல் கலவையில் கலந்து, அதனை பாரபின் மெழுகு / கால்சியம் கார்பனேட் கலவையில் போட்டால் கெமிக்கல் ரியாக்‌ஷன் மூலம் சில நிமிடங்களில் ஓடு உருவாகிவிடும்.

போலி முட்டைகளை எப்படி கண்டுபிடிப்பது ?

ஒரு டார்ச் லைட் எடுத்து முட்டையின் ஊடே அடித்து பார்த்தால், இயற்கையான காற்று ஓட்டைகள் அந்த முட்டையில் இருந்தால் அது பிராய்லர் / நாட்டுக்கோழி முட்டையாகும். முட்டை டிரான்ஸ்பரண்ட் ஆக இருந்தால் (transparent fake eggs allowing light to pass through so that objects behind can be distinctly seen.) அது போலி முட்டையாகும். ( முட்டைக்கு அந்த பக்கம் உள்ள பொருள் தெரியுது என்றால்).

போலி முட்டைகளை எப்படி தடுப்பது ?

முன்பே சொன்னது போல இந்தியாவுக்கே முட்டை அனுப்பும் நாமக்கல் இருக்கும் இடம் நம் தமிழகம். நாமக்கல் முட்டை கழகம் முட்டை விலை நிர்ணயம் செய்து அனுப்புகிறது அல்லவா ? அதே கான்ஸப்ட் மூ லம் இந்திய மக்கள் மீதான சீனாவின் மறைமுக போரை தடுக்கமுடியும். நாமக்கல் முட்டை விற்பனை கழகம் அவசரமாக போர்க்கால அடிப்படையில் கூடவேண்டும்.

மாதம் முதல் தேதியில் நாமக்கல் முட்டை விற்பனை கழகம் ஒரு குறிப்பிட்ட சீலை அறிமுகப்படுத்தும். (ஸ்கார்ப்பியன் சிம்பல் நவம்பர் மாதம்).

முட்டை உற்பத்தியாளர்கள் அந்த சீலை போட்டுத்தான் முட்டையை விற்பனைக்கு அனுப்பவேண்டும்.

அந்த குறிப்பிட்ட சீல் இல்லாத முட்டையை மக்கள் வாங்க கூடாது.

ஒவ்வொரு மாதமும் சீலை மாற்றிவிடவேண்டும்.

நாமக்கல் முட்டை விற்பனை கழகம் போலி முட்டைகளை கண்டறியவும், விற்பனையாளர்கள் அந்த மாதம் அறிவிக்கப்பட்ட சீல் உபயோகப்படுத்துகிறார்களா என்பதையும் பரிசோதிக்க பறக்கும் படை அமைக்கவேண்டும்.

நாமக்கல் முட்டை விற்பனை கழகம் அமைத்துள்ள பறக்கும் படை ஓட்டல்கள், சிறு கடைகள் ஆகியவற்றில் முட்டைகளை திடீர் சோதனை செய்து அதில் சீல் இருக்கிறதா, ஒளி பாய்ச்சினால் இயற்கையான ஓட்டைகள் தெரிகிறதா அல்லது டிரான்ஸ்பரண்ட் போலி முட்டையா என்பதை கண்டறிந்து சட்டரீதியான வழக்கு போட்டு அபராதம் விதிக்கவேண்டும்.

நாமக்கல் முட்டை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்கம் போலி முட்டைகளை கண்டறிய விழிப்புணர்வு பயிற்சி முகாம்களை ஊருக்கு ஊர் நடத்தவேண்டும்.

மக்கள் உடல் நலன் மட்டுமல்ல, இவ்வளவு நாள் உங்களுக்கு உணவிட்டு வந்த உங்கள் தொழிலுக்கே அணுகுண்டு போடக்கூட நிகழ்வு, கேன்ஸர் போல இந்தியா முழுவதும் பரவி வருகிறது. உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது உங்கள் கடமை, எங்கள் உரிமை.

நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் தவிப்போடு இந்த பதிவை எழுதுகிறேன். உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு வாட்சப், தனி செய்தி, மின்னஞ்சல், அலைபேசி என எப்படி எப்படி கொண்டுபோய் சேர்க்க முடியுமோ அப்படி சேர்க்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

 china fake eggs, poli muttai kandupidikkum murai, plastic eggs in india, போலி முட்டை
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'சீன போலி முட்டைகளை எப்படி கண்டுபிடிப்பது?' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
சீன போலி முட்டைகளை எப்படி கண்டுபிடிப்பது?
Tamil Fire
5 of 5
Add caption போலி முட்டைகளின் நதி மூலம் - ரீஷி மூலம் / கண்டறிவது மற்றும் தடுக்கும் வழிகள் ===============================================...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News