21 டிசம்பர் 2016

, ,

பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்: தனது படிப்பு சான்றிதழ்களை இழந்தபோதிலும் 15 உயிர்களைக் காப்பாற்றிய மாணவர்!

One youth saved 15 lives from omni bus fire accident though he lost his certificates and belongings, Good people in tamilnadu, nalla ullangal, nalla manidhargal, nallavargal, perundhu thee vibatthu 15 perai kapatriya ilaignar

One youth saved 15 lives from omni bus fire accident though he lost his certificates and belongings, Good people in tamilnadu, nalla ullangal, nalla manidhargal, nallavargal, perundhu thee vibatthu 15 perai kapatriya ilaignar

ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்: தனது உடைமைகளை இழந்து 15 உயிர்களைக் காப்பாற்றிய மாணவர்!


20 Dec 2016: சென்னையிலிருந்து ராஜபாளையம் நோக்கி வந்த ஆம்னி பேருந்து விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று அதிகாலை மின் கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்து முழுவதும் நாசமானது. பேருந்தில் பயணித்த பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் வயர் கருகும் வாடையை அறிந்து தூங்கிக் கொண்டிருந்த அனைத்து பயணிகளையும் எழுப்பி தப்பிக்க வைத்ததுடன், ஓட்டுனரிடம் விரைந்து சென்று கூறி பேருந்தை நிறுத்தியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

தனது உடைமைகளை இழந்து 15 உயிர்களைக் காப்பாற்றிய மாணவர்:
மாணவர் ராம்சுந்தர் ஓட்டுநரிடம் போய் பேருந்து தீப்பற்றி எரிவது குறித்து கூறிவிட்டு, அவரால் மீண்டும் கடைசி இருக்கைக்கு வந்து தனது பை உள்ளிட்ட உடைமைகளை எடுக்க முடியவில்லை. இதில் இவரது படிப்பு தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் பையில் கொண்டுவந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகிவிட்டது.

இது குறித்து மாணவர் ராம்சுந்தர் கூறும்போது, எனது பொருட்கள், சான்றிதழ் எரிந்தது குறித்து கவலையில்லை. ஆழ்ந்த நித்திரையில் இருந்து அனைவரையும் ஒரு சேதமும் இல்லாமல் காப்பாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. மாணவர் தக்க சமயத்தில் அவர் உள்ளிட்ட 16 உயிர்களையும் காப்பாற்றியதை பேருந்தின் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் வெகுவாகப் பாராட்டினர். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டும் இவருக்கு நமது பாராட்டை தெரிவிப்போம்... 

One youth saved 15 lives from omni bus fire accident though he lost his certificates and belongings, Good people in tamilnadu, nalla ullangal, nalla manidhargal, nallavargal, perundhu thee vibatthu 15 perai kapatriya ilaignarஎனதருமை நேயர்களே இந்த ' பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்: தனது படிப்பு சான்றிதழ்களை இழந்தபோதிலும் 15 உயிர்களைக் காப்பாற்றிய மாணவர்!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News