எடையை குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்.. | Tamil247.info

எடையை குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
உடல் எடையை குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்..

'உடல் பருமன்' தான் பெரும்பாலான நோய்களுக்கு நுழைவு வாயிலாக இருக்கிறது. உடற் பருமனை குறைக்க காய்கறிகளும், பழங்களும் பெரும் அளவில் உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதனால் உடற்பருமனை குறைக்க நினைப்பவர்கள் மாவு சத்து அதிகமுள்ள உணவுகளை தவிர்த்துவிட்டு, நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.

எடையை குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்.. udal edai kuraiya unavugal, udal edai kuraippathu eppadi, உடற் பருமனைக் குறைக்க, tips in tamil

பட்டாணி, உருளை கிழங்கு போன்ற காய்களுக்கு பதில் நார்ச்சத்து அதிகமுள்ள ப்ரோக்கோலி, வெள்ளரிக்காய், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை அதிகம் எடுத்து கொள்ளலாம். இதை தவிர வேறு என்னென்ன உணவுகள் உடல் பருமனை குறைக்க உதவும் என்று பார்ப்போம்.

எலுமிச்சம் பழம்:

எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் C அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எலுமிச்சம் பழம் சரியான சாய்ஸ் ஆக இருக்கும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்நீரில் சிறிது எலுமிச்சம் சாற்றை கலந்து குடிக்க வேண்டும். இது உடலில் இருக்கும் நச்சு பொருட்களை வெளியில் கொண்டுவந்துவிடும், இதில் இருக்கும் சிட்ரிக் அமிலம் உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்க்கும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

இதனால் சளி, இருமல், தலை வலி, செரிமான பிரச்னை போன்றவை ஏற்படாது. ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

காலிஃபிளார்:

ப்ரோக்கோலி, காலிஃபிளார் போன்ற காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம். கலோரி சத்து குறைவு, முட்டை கோசில் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகம். இந்த காய்கறிகளெல்லாம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். குறிப்பாக ப்ரோக்கோலி உடற் பருமனை குறைக்கும்.

தர்பூசணி:

இதில் கலோரி சத்து மிக மிக குறைவு. அதே நேரத்த்தில் விட்டமின்களும், மினெரல் சத்துக்களும் அதிகம். அடி வயிற்றில் சேரும் கொழுப்பை குறைப்பதில் தர்ப்பூசணிக்கு முக்கிய பங்குண்டு.

ஆரஞ்சு:

மற்ற சிட்ரஸ் பழங்களை போல ஆரஞ்சு பழமும் உடலில் இருக்கும் கொழுப்பை எரித்து உடல் எடையை குறைக்கும். இது உடலில் இருக்கும் நச்ச்சு பொருட்களை நீக்கும். இதில் வைட்டமின் சி, போலிக் அமிலம், பொட்டாசியம் மற்றும் பெக்டின் சத்து உள்ளது.

பெருஞ்சீரகம்: 


அதிகமான மினெரல் கொண்டது , குறைவான கலோரி சத்து கொண்ட பெருஞ்சீரகம் வயிறு உப்பிசத்தை குறைத்து செரிமானத்தை அதிக படுத்தும். உடல் எடையை குறைப்பதில் பெருஞ்சீரகம் பெருமளவில் உதவும்.

முதல் நாள் இரவே பெருஞ்சீரகத்தை தண்ணீரில் ஊற வைத்து மறு நாள் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடித்து அதில் இருக்கும் பெருஞ்சீரகத்தை சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

க்ரீன் டீ:

பாலி பினால் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்து இருக்கும் க்ரீன் டீ உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். சர்க்கரை சேர்க்காமல் க்ரீன் டீயை குடித்து வர உடல் எடை குறையும். இதில் இருக்கும் டேனின், உடலின் கொலெஸ்டொல் அளவையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.
எடையை குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்.. udal edai kuraiya unavugal, udal edai kuraippathu eppadi, உடற் பருமனைக் குறைக்க, tips in tamil
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'எடையை குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்..' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
எடையை குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்..
Tamil Fire
5 of 5
உடல் எடையை குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்.. 'உடல் பருமன்' தான் பெரும்பாலான நோய்களுக்கு நுழைவு வாயிலாக இருக்கிறது. உடற் பருமனை குற...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News