நவம்பர் 8: தமிழின் பெருமையை உலகறியச் செய்த வீரமாமுனிவரின் பிறந்த நாளை நினைவு கூர்வோம்..! | Tamil247.info

நவம்பர் 8: தமிழின் பெருமையை உலகறியச் செய்த வீரமாமுனிவரின் பிறந்த நாளை நினைவு கூர்வோம்..!

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
நவம்பர் 8: தமிழின் பெருமையை உலகறியச் செய்த வீரமாமுனிவரின் பிறந்த நாளை நினைவு கூர்வோம்..!

வீரமாமுனிவர்,  பிறந்த நாள், Viramamunivar renowned poet in the Tamil language. history, biography, veeramamunivar images, veeramamunivar statue
Constanzo Beschi, also known under his Tamil name of Viramamunivar or Constantine Joseph Beschi was an Italian Jesuit priest, missionary in South India, and renowned poet in the Tamil language.

வீரமாமுனிவர் (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1742) இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். 
 
தமிழுக்காக பாடுபட்டவர்களை தமிழினம் என்றும் மறக்காமல் போற்றும். அதே போல தமிழை இகழ்ந்தவர்களை தமிழினம் என்றுமே தூற்றும்.
அந்த வகையில் இத்தாலி நாட்டை சேர்ந்த கிருத்துவ மதபோதகரான கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi) அவர்களை தமிழினம் என்றுமே நினைவில் வைத்துக் கொண்டாடும்.

எங்கிருந்தோ வந்த கிருத்துவர் தமிழர் மதத்தின் நூல்களை படித்து தமிழின் பெருமைகளை உலகறியச் செய்தார். வீரமாமுனிவருக்கு தமிழ் கூறும் நல்லுலகம் தனது புகழ் வணக்கத்தை உரித்தாக்குகிறது.

வீரமாமுனிவர் தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.

தமிழ் கற்க ஏதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்.

சதுரகராதியை, நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார்.
அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் விளக்க என்று "ர" சேர்த்தேழுதுவது வழக்கம். "ஆ" என எழுத "அர" என 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ:அர, எ:எர) இந்த நிலையை மாற்றி "ஆ, ஏ" என மாறுதல் செய்தவர் இவர்.

தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் படித்தறிய எளிதில் முடியவில்லை என்பதனை அறிந்து உரைநடையாக மாற்றியவர் இவர்.

23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.

ref: https://ta.wikipedia.org/wiki/வீரமாமுனிவர்

Via Rajkumar Palaniswamy

வீரமாமுனிவர்,  பிறந்த நாள், Viramamunivar renowned poet in the Tamil language. history, biography, veeramamunivar images, veeramamunivar statue 

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'நவம்பர் 8: தமிழின் பெருமையை உலகறியச் செய்த வீரமாமுனிவரின் பிறந்த நாளை நினைவு கூர்வோம்..! ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
நவம்பர் 8: தமிழின் பெருமையை உலகறியச் செய்த வீரமாமுனிவரின் பிறந்த நாளை நினைவு கூர்வோம்..!
Tamil Fire
5 of 5
நவம்பர் 8: தமிழின் பெருமையை உலகறியச் செய்த வீரமாமுனிவரின் பிறந்த நாளை நினைவு கூர்வோம்..! Constanzo Beschi, also known under his Tamil na...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News