இருபது ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த அதிசய மருத்துவர் | Tamil247.info
Loading...

இருபது ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த அதிசய மருத்துவர்

இருபது ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் "பால சுப்பிரமணியம்"

20 rupee doctor in Coimbatore, 20 rubai maruthuvar V. Balasubramanian, ezhaigalin maruthuvar. adhisaya manidhar, Dr. Bala Subramaniam doctor for poor people in taminadu
மருத்துவ சேவையை கொள்ளையடிக்க பயன்படுத்திக் கொண்டிருக்கும் சமூகத்தில் பல ஆண்டுகளாக இருபது ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த "மக்கள் மருத்துவர்" வெள்ளியன்று (18.11.2016) மாரடைப்பால் காலமானார்.

கோவை ராஜகணபதி நகரை சேர்ந்தவர் மருத்துவர் பால சுப்பிரமணியம். இவர் கோவை ஆவாரம்பாளையம் சாலையில் சிறிய அறையில் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்தார்.

இவரின் மருத்துவமனையை சுற்றியுள்ள ஆவரம்பாளையம், நேதாஜிநகர், அண்ணாநகர் போன்ற பகுதியில் மட்டுமல்லாமல் மாநகரத்தில் உள்ள பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் வைத்தியம் பார்க்க வருவார்கள். இரண்டு ரூபாயில் வைத்தியம் பார்த்து வந்தார். இதனால் பிற மருத்துவர்களின் எதிர்ப்பை சம்பாதித்தார். மேலும், பல இடையூறுகளை சந்தித்து வந்தார். இருப்பினும் தன்னுடைய மருத்துவ சேவையை காசாக்க விரும்பவில்லை. கடந்த இரண்டு வருட காலமாக இருபது ரூபாய் மட்டுமே பெற்று வைத்தியம் பார்த்து வந்தார்.

மேலும், நோயாளிகளுக்கு ஊசி, மருந்து போன்றவற்றை இலவசமாக வழங்குவார். பல நேரங்களில் நோயாளிகளின் ஏழ்மை நிலையறிந்து அந்த இருபது ரூபா கட்டணம் கூட பெறாமல் வைத்தியம் பார்ப்பார். கடந்த இருபது ஆண்டுகளில் ஒருநாள் கூட தனது மருத்துவமனைக்கு வராமல் இருந்ததில்லை. அனைத்து தரப்பு மக்களின் அன்பை பெற்றதால் இருபது ரூபா டாக்டர் என்றும்,  தற்போது மக்கள் மக்கள் மருத்துவர் என்றும் அன்போடு அழைத்தனர்.

மேலும், இப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைக்கு டாக்டர்தான் பெயர் வைக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து பெயர்வைத்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் இவர் வெள்ளியன்று (18.11.2016) காலை வழக்கம் போல் நடைபயிற்சி சென்று வீடு திரும்புகையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார்.

இதனைத்தொடர்ந்து மாலை இவரது மருத்துவமனைக்கு வைத்தியம் பார்க்க வந்த மக்கள் மருத்துவர் வராததையறிந்து விசாரித்துள்ளனர். இவர் இறந்ததை கேள்விப்பட்டு அம்மருத்துவமனையின் முன்பே கதறியழுதனர்.
மேலும், கண்ணீரோடு அவரது மருத்துவமனையின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் வளையம் வைத்தும் நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மருத்துவத்தை கொள்ளையடிக்கும் வியாபாரமாக மாறிவிட்ட சமூகத்தில் தான் படித்த படிப்பு சாமன்ய மக்களுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணத்தில் குறைந்த கட்டணத்தில் வைத்தியம் பார்த்ததால் மக்கள் இவருக்கு கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாகி வருகின்றனர்.

பலமுறை ஊடகங்கள் அவரின் சேவை குறித்து செய்தியாக்க முனைந்தபோது ஒருமுறைகூட அவர் விளம்பரங்கள் தேவையில்லை என்று மறுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

20 rupee doctor in Coimbatore, 20 rubai maruthuvar V. Balasubramanian, ezhaigalin maruthuvar. adhisaya manidhar, Dr. Bala Subramaniam doctor for poor people in taminadu
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'இருபது ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த அதிசய மருத்துவர்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
இருபது ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த அதிசய மருத்துவர்
Tamil Fire
5 of 5
இருபது ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் "பால சுப்பிரமணியம்" மருத்துவ சேவையை கொள்ளையடிக்க பயன்படுத்திக் கொண்டிருக...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment