முகம் மற்றும் மேனி, சரும அழகை கூட்ட:
முக பவுடர், முக கிரீம் போன்றவைகளை உபயோகிப்பதால் முகத்திலுள்ள தோல் சுவாசிக்கும் துவாரங்கள் மூடப்பட்டு விடுகின்றன. இதனால் பருக்கள் போன்ற கட்டிகள் தோன்றி பவுடர், கிரீம் போன்றவற்றை வெளியேற்றுகின்றன.
மனிதன் பிறக்கும் பொழுது இருந்த பால் வடியும் முகம் கடைசி வரை இருக்க எந்த வித அழகு சாதனங்களையும் பயன்படுத்த கூடாது. அதற்க்கு பதிலாக வெள்ளரி பிஞ்சு, தக்காளி, கேரட் முதலியவற்றில் ஏதாவது ஒன்றை அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவலாம்.
ஆவி பிடிக்கலாம்: தினமும் காலையிலும் மாலையிலும் ஐந்து நிமிடம் முகத்திற்கு ஆவி பிடிக்கலாம். ஆவி பிடித்த பின் குளிர்ந்த நீரில் முகத்தை ஐந்து நிமிடம் கழுவவும்.
வைட்டமின் D : குளிக்க சோப்பு உபயோகிப்பதால் தோலில் சூரிய ஒளியினால் வைட்டமின் D உண்டாக்கும் ஒருவித எண்ணெய் பசை கழுவப்பட்டு விடுகிறது. இதனால் சூரிய ஒளியினால் நமக்கு கிடைக்கும் வைட்டமின் D குறைகிறது.
காற்று புகும்படி ஆடை: முடிந்த அளவு ஆடைகளை குறைத்துக்கொள்ள வேண்டும். உள்ளே காற்று புகும்படி ஆடைகள் இருக்க வேண்டும்.
குளிக்க சோப்பிற்கு பதிலாக இயற்கை குளிக்கும் தூளை பயன்படுத்துங்கள்.
Loading...
எனதருமை நேயர்களே இந்த 'முகம் மற்றும் மேனி, சரும அழகை கூட்டுவது எப்படி? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.
இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
Follow us on: Facebook, Google+
லேபிள்கள்: Beauty Tips, health tips, Pengal.com