பழங்களை ஜூஸ் செய்து குடிப்பதற்கு முன்னர் கவனிக்க வேண்டியவை | Tamil247.info

பழங்களை ஜூஸ் செய்து குடிப்பதற்கு முன்னர் கவனிக்க வேண்டியவை

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

பழங்களை ஜூஸ் செய்து குடிப்பதற்கு முன்னர் கவனிக்க வேண்டியவை..


பொதுவாக பழங்களை சாப்பிடுவதை விட, அதை ஜூஸ் செய்து குடிப்பது தான் பலருக்கு பிடிக்கும். நார்ச் சத்து அதிகம் உள்ள பழங்களை ஜூஸ் செய்து சாப்பிடுவதை விட, அப்படியே சுத்தம் செய்து பழமாக சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அப்படியே கிடைத்துவிடும்.

pazha juice seidhu kudippadharkku mun kavanikka vendiyavai, milk shake kudikkalaama, pachiyaaga juice thayarikka, health tips in tamil, therindhukolvom,

விளையாட்டு வீரர்கள் ஜூஸ் செய்து குடிக்கலாமா?

விளையாட்டு வீரர்கள் அனைவரும் பழங்களை நேரடியாக சாப்பிடுவதை விட, ஜூஸ் செய்து குடித்து வந்தால் நல்லது. அப்படி ஜூஸ் செய்து குடிப்பதன் மூலம் விளையாட்டு வீரர்களின் நீரிழப்பை சமன் செய்து விடும்.
அப்படி பழச்சாறுகளை ஜூஸ் செய்து குடிப்பதற்கு முன்னர் நாம் கவனிக்க வேண்டியவை பல உள்ளன. அவை என்ன என்பதை பார்ப்போம்.

கடைகளிலே ஜூஸ் வாங்கி குடிப்பது: பெரும்பாலானோர் வீடுகளில் பழச்சாறுகள் செய்து குடிப்பதை விட கடைகளிலே வாங்கி குடிப்பர். கடைகளில் பழச்சாறுகள் குடிப்பது தொற்று நோய்களுக்கு வழிவகுக்கும். அவர்கள் ஜார்களை சரியாக கழுவாமல் அப்படியே நாள் முழுவதும் உபயோகிப்பார்கள். இதனால் பாட்டீரியாக்கள் எளிதில் உற்பத்தியாகிவிடும். அதை நாம் குடிக்கும் போது வயிற்றுப்பிரச்சனைகளை உருவாக்கிவிடும்.

சர்க்கரை போட்டு ஜூஸ் குடிக்கும் போது: பொதுவாக ஜூஸ் குடிக்கும் போது சிலர் அதில் சர்க்கரை போட்டு குடிப்பதையே வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் அது நல்லதல்ல. இது உடல் எடையை கணிசமாக கூட்டிவிடும். ஏனென்றால் பழங்களிலேயே தேவையான அளவு சுக்ரோஸ் இருக்கிறது. இதில் கூடுதலாக நாம் சர்க்கரையை சேர்க்கும்போது அதன் முழு நன்மைகளும் கிடைக்காமல், கலோரியை அதிகரித்து விடும். ஆகவே சர்க்கரையை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து ஜூஸ் குடிக்கும் போது:
தற்போது உள்ள கணினி காலத்தில் வேலைக்கு செல்வோர் ஜூஸ் அளவுக்கு அதிகமாக போட்டு குடித்து விட்டு மீதியை குளிர்சாதனப் பெட்டிக்குள்(பிரிட்ஜ்) வைத்து விட்டு, மீண்டு வந்து குடிப்பார்கள். இது பெரிதும் பலன் அளிக்காது. காரணம் அப்போது தயாரித்து அப்போதே குடித்துவிட வேண்டும். இதனால் முழு சத்துக்களும் கிடைக்கும். பிர்ட்ஜில் வைப்பதால் சில நுண் சத்துக்கல் அழிந்துவிடுகின்றன. ஆகவெ எந்த பழச் சாறையும் ப்ரஷாக குடித்து விடுங்கள்.

பால் கலந்து ஜூஸ் தயாரிக்கலாமா? 

எல்லா வித பழங்களிலும் பால் கலந்து மில்க் ஷேக் குடிக்கிறார்கள். இது தவறு. பாலில் எலுமிச்சை கலந்தால் என்னாகும்.திரிந்துவிடும்தானே? அப்படிதான் சிலவகை பழங்கள். மிகவும் இனிப்பான பழுத்த பழங்களுடன் பால் கலந்து ஜூஸ் தயாரிக்கலாம். மாம்பழம், ஆப்பிள் போன்றவற்றில் குடிக்கலாம். ஆனால் திராட்சை, ஆரஞ்சு, மாதுளை போன்றவற்றில் குடிக்கக் கூடாது. ஸ்ட்ரா பெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் இனிப்பாக இருந்தாலும் அவற்றில் புளிப்பு சுவையும் உள்ளது. ஆகவே ஸ்ட்ரா பெர்ரி, அன்னாசி ஆகியவை பாலுடன் கலந்து குடிக்கக் கூடாது.

அப்படியே பச்சையாக ஜூஸ் தயாரிக்கலாமா? 


காய்கறி ஜூஸ் குடிக்கும்போது எல்லா காய்களையும் அப்படியே பச்சையாக ஜூஸ் தயாரிக்கக் கூடாது. சில காய்களை வேக வைத்த பின்னே ஜூஸ் தயாரிக்க வேண்டும். புருக்கோலி, காலிஃப்ளவர் ஆகியவை வேக வைத்த பின்னே ஜூஸ் தயாரிக்கலாம். தக்காளி, கேரட், வெள்ளரி ஆகியவற்றை அப்படியே தயாரிக்கலாம்.
pazha juice seidhu kudippadharkku mun kavanikka vendiyavai, milk shake kudikkalaama, pachiyaaga juice thayarikka, health tips in tamil, therindhukolvom,  fruit juice, vegetable juice, pazha saaru, health drinks in tamil,

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'பழங்களை ஜூஸ் செய்து குடிப்பதற்கு முன்னர் கவனிக்க வேண்டியவை' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
பழங்களை ஜூஸ் செய்து குடிப்பதற்கு முன்னர் கவனிக்க வேண்டியவை
Tamil Fire
5 of 5
பழங்களை ஜூஸ் செய்து குடிப்பதற்கு முன்னர் கவனிக்க வேண்டியவை.. பொதுவாக பழங்களை சாப்பிடுவதை விட, அதை ஜூஸ் செய்து குடிப்பது தான் பலருக்கு ப...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News