ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக வீடு, கார், நகைப் பெட்டிகள் வழங்கி வரும் தொழிலதிபர் | Tamil247.info
Loading...

ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக வீடு, கார், நகைப் பெட்டிகள் வழங்கி வரும் தொழிலதிபர்

Hare Krishna Export Diwali Gift Of 400 Flats, 1000 Cars Comes With EMIs For Staff - Savjibhai Dholakia, diwalivspecial news in tamil, adhisayam, World's best boss gifts Rs 46 crore
தனது ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி போனசாக வீடு, கார், நகைப் பெட்டிகள் போன்றவற்றை வாரி வழங்கி வருகிறார் குஜராத் மாநிலம் சூரத் நகரில் ‘ஹரே கிருஷ்ணா’ என்ற ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர் சாவ்ஜிபாய் தோலாகியா.

இவர் வைரம் மற்றும் துணிமணிகளை ஏற்றுமதி செய்து ஒரு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகிறார். இவரது ஏற்றுமதி நிறுவனத்தில் 5,500 க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இவர்கள் ₹10 ஆயிரம் முதல் ₹60 ஆயிரம் வரை சம்பளம் பெறுகின்றனர்.

கடந்த ஆண்டு 1716 ஊழியர்களை தேர்வு செய்து 200 வீடுகள், 491 கார்கள் இதர மற்றவர்களுக்கு நகைப் பெட்டிகள் வழங்கினார். அதேபோல் இந்தாண்டும் 1665 ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 1260 பேருக்கு கார்களும், 400 பேருக்கு வீடும் மற்றவர்களுக்கு நகைப் பெட்டிகளும் வழங்கப்படுகின்றன. இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு தீபாவளி பரிசு பெறாதவர்கள்.

இவரது கடந்த காலம்:
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள துதாலா கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சாவ்ஜிபாய், கடந்த 1977ம் ஆண்டு சூரத் நகருக்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது அவரது பையில் இருந்தது 12 ரூபாய் 50 காசுகள்.  சூரத்தில் தொழிலாளியாக இருந்து முதலாளியாக உயர்ந்தவர் சாவ்ஜிபாய். அதனால் தொழிலாளர்களுக்கு தாராளமாக பரிசுகளை வழங்குகிறார்.

Hare Krishna Export Diwali Gift Of 400 Flats, 1000 Cars Comes With EMIs For Staff - Savjibhai Dholakia, diwalivspecial news in tamil, adhisayam, World's best boss gifts Rs 46 crore
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக வீடு, கார், நகைப் பெட்டிகள் வழங்கி வரும் தொழிலதிபர்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக வீடு, கார், நகைப் பெட்டிகள் வழங்கி வரும் தொழிலதிபர்
Tamil Fire
5 of 5
தனது ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி போனசாக வீடு, கார், நகைப் பெட்டிகள் போன்றவற்றை வாரி வழங்கி வருகிறார் குஜராத் மாநிலம் சூரத் நகரில...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment