09 அக்டோபர் 2016

, , ,

குழந்தைகள் தெரிந்தோ தெரியாமலோ காய்ன் அல்லது வேறு பொருட்களை விழிங்கி விட்டால் என்ன செய்வது?

குழந்தை வளர்ப்பு, kulanthai paramarippu tips in tamil, pirantha kulanthai valarpu pirachanaigal, theervugal, vizhunginaal enna seivadhu, What to Do If Your Child Swallows Something

குழந்தை வளர்ப்பு, kulanthai paramarippu tips in tamil, pirantha kulanthai valarpu pirachanaigal, theervugal, vizhunginaal enna seivadhu, What to Do If Your Child Swallows Somethingகுழந்தைகள் தெரிந்தோ தெரியாமலோ காய்ன் அல்லது வேறு பொருட்களை விழிங்கி விட்டால் அதற்கான தீர்வு என்ன..?


குழந்தைகள் கையாளும் பொருட்களில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஒருவேளை குழந்தைகள் விழுங்கிய பொருட்களால் அப்போதைக்கு எந்த உபாதைகள் இல்லாவிட்டாலும் சில நாட்கள் கழித்து அதன் வேலையைக் காண்பிக்கும். எனவே உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

மண்ணையும், மற்ற பொருட்களையும், சகஜமாக வாயில் போட்டுக் கொண்டு போக்குக் காட்டுவது குட்டீஸ்களின் வாடிக்கையாகிவிட்டது.

வாயில் உள்ளபோதே பெற்றோர்கள் பார்த்துவிட்டால்:


பொதுவாக விளையாட்டுப் பொருட்களின் சிறு பாகங்கள், சில்லறைக் காசுகள், சில கடின உணவுப் பொருட்களை குழந்தைகள் தவறுதலாக வாயில் போட்டு, விழுங்க முயலும் போது விபரீதத்தில் முடிகிறது. இத்தகைய பொருட்களை வாயில் உள்ளபோதே பெற்றோர்கள் பார்த்துவிட்டால் பிரச்னை இல்லை. உடனே வாயில் விரலை விட்டு அந்தப் பொருளை வெளியே எடுத்து விடலாம்.

விழிங்கிய பொருள் தொண்டையில், உணவுக் குழாயில் சிக்கிக் கொண்டிருந்தால்:


ஒருவேளை விழுங்கப்பட்ட பொருட்கள் தொண்டையில் சிக்கிக் கொண்டிருந்தால், பெற்றோர் முயற்சி செய்வது ஆபத்தானது. தாமதிக்காமல் உடனே குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். விழுங்கப்பட்ட மழுங்கிய முனை உடைய சிறிய பொருட்கள், சிறிய காசுகள், கோலிகுண்டு போன்றவை எக்ஸ்ரேவில் இரைப்பையைத் தாண்டி விட்டால் தானாகவே மலத்துடன் வெளியேறி விடும். அப்படி இல்லாமல், சில பெரிய அல்லது கடின பொருட்கள் உணவுக் குழாயில் சிக்கியிருந்தாலோ, இரைப்பையில் இருந்து சிறுகுடலுக்குச் செல்ல இயலாது இருந்தாலோ என்டோஸ்கோபி மூலம் அகற்றிவிட இயலும்.

கூரிய முனை பொருட்கள்:

மிக ஆபத்தான கூரிய முனையுடைய ஊசி போன்ற பொருட்கள் குடலில் சென்று குத்திக் கொள்ளும் தன்மையுடையவை. அதன் விளைவுகள் மிகமிக விபரீதமானவை. அத்தகைய பொருட்களை விழிங்கிவிட்ட குழந்தைகளுக்கு, மயக்கம் கொடுத்து லேபராஸ்கோபி உதவியுடன் மிகச்சிறிய அறுவை சிகிச்சையால் பாதுகாப்பாக அகற்றிவிட இயலும்.kulanthai paramarippu tips in tamil, pirantha kulanthai valarpu pirachanaigal, theervugal, vizhunginaal enna seivadhu, What to Do If Your Child Swallows Something
எனதருமை நேயர்களே இந்த 'குழந்தைகள் தெரிந்தோ தெரியாமலோ காய்ன் அல்லது வேறு பொருட்களை விழிங்கி விட்டால் என்ன செய்வது?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News