பின் பாக்கெட்டில் பர்ஸ் வைப்பவரா நீங்கள்..? எச்சரிக்கை..! | Tamil247.info

பின் பாக்கெட்டில் பர்ஸ் வைப்பவரா நீங்கள்..? எச்சரிக்கை..!

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
ஆண்களே உங்கள் பின் பாக்கெட்டில் பர்ஸ் வைப்பவரா நீங்கள்..? எச்சரிக்கை உங்கள் உடல் நலத்திற்க்காக ஒரு நிமிடம் ஒதுக்கி இச் செய்தியை படியுங்கள்…!

ஆண்கள் காலம், காலமாக பின்பற்றி வரும் பழக்கம் ஒன்று அபாயகரமானது என தெரியவந்துள்ளது. கடந்த சில காலமாகவே ஆண்கள் இதுகுறித்து சிறிதளவு அறிந்து வைத்திருந்தாலும், இதன் அபாயம் இவ்வளவு தாக்கத்தை உண்டாக்கும் என்பதை அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

pant pinpura pocket purse vaithiruppdhal vilayum udal nala kolarugal, back pocket purse health problems in tamil, Awareness, research news in tamil,
ஆம், பின் பாக்கெட்டில் பர்ஸ் வைப்பதால் தான் ஒருசில உடல்நல கோளாறுகளால் நீங்கள் அவதிப் படுகிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியாது. அதிலும் சில ஆண்களின் பர்ஸ் எப்போதும் நிறைமாத கர்ப்பிணி போல தான் இருக்கும். உள்ளே கண்ட காகித குப்பைகள் இருக்கும்.
இந்த பழக்கம் கொண்டுள்ள ஆண்கள் உடனே இதை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்….

நியூயார்க் மருத்துவர் கூறியது..!
நியூயார்க்-கை சேர்ந்த மருத்துவர் ஒருவர், பின் பாக்கெட்டில் நிறைமாத கர்ப்பிணி போன்று பர்ஸை வைத்திருக்கும் ஆண்களுக்கு இடுப்பு, முதுகு, கழுத்து போன்ற இடங்களில் அதிக வலி ஏற்படும் அபாயம் இருக்கிறது என கூறியுள்ளார்.

அபாயம்!
பின் பாக்கெட்டில் பர்ஸ் வைத்து பயன்படுத்துவதால் நாள்ப்பட இடுப்பு மற்றும் தண்டுவட பகுதியில் சமநிலையின்மை உண்டாகும் இதனால், அசௌகரியங்கள் அதிகரிக்கும் என தெரிவிக்கிறார். இதனால் ஒருபக்கம் உயரமாகவும், ஒரு பக்கம் இறக்கமாகவும் உடல் நிலை அமைகிறது, இது இடுப்பில் இருந்து கழுத்து வரை பாதிப்பை உண்டாக்குகிறது.

ஏற்ற இறக்கம்!
கிரீஸ் எனும் மற்றுமொரு மருத்துவர், பின் பாக்கெட்டில் பர்ஸை வைத்துக் கொண்டு அதிக நேரம் உட்கார்ந்து இருப்பதால், உடல் நாள்பட சிறிதளவு ஒருபக்கம் ஏற்றமாகவும், ஒரு பக்கம் இறக்கமாகவும் நிலை பெறும்.

எச்சரிக்கை!
இதுப்போக போக, தண்டுவடம், தசைகள், டிஸ்க் பகுதிகளை வலுவாக பாதிக்கும். நாம் உட்காரும் நிலையானது தண்டுவடம் நேராக இருப்பது போல இருக்க வேண்டும். இதனால், தான் அதிக நேரம் சரியான நிலையில் இல்லாமல் சாய்ந்து உட்காருதல் தவறு என கூறப்படுகிறது.

பட்டக்ஸ்!
இதுமட்டுமின்றி, பின் பாக்கெட்டில் அதிக நேரம் பர்ஸ் வைத்திருப்பதால், பட்டக்ஸ் பகுதியில் இருக்கும் நரம்புகள், தசைகள், தமனிகள் மற்றும் சிரைகள் போன்றவை சேதமைடைய காரணியாக இருக்கின்றது.

மருத்துவர் குறிப்பு!
இன்று ஆண்கள் மத்தியில் கழுத்து, முதுகு மற்றும் இடுப்பு வலி அதிகரிக்க இந்த பழக்கம் ஒரு முக்கிய காரணியாக இருந்து வருகிறது.
ஏறத்தாழ 5-15 வருடங்கள் தொடர்ந்து இந்த பழக்கம் இருக்கையில் உடலில் அசௌகரியங்கள் அதிகரிக்கும் அபாயம் நிறையவே இருக்கின்றன என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'பின் பாக்கெட்டில் பர்ஸ் வைப்பவரா நீங்கள்..? எச்சரிக்கை..!' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
பின் பாக்கெட்டில் பர்ஸ் வைப்பவரா நீங்கள்..? எச்சரிக்கை..!
Tamil Fire
5 of 5
ஆண்களே உங்கள் பின் பாக்கெட்டில் பர்ஸ் வைப்பவரா நீங்கள்..? எச்சரிக்கை உங்கள் உடல் நலத்திற்க்காக ஒரு நிமிடம் ஒதுக்கி இச் செய்தியை படியுங்கள்...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News