நோயாளிகள், மருந்து சாப்பிடுபவர்கள் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும்? | Tamil247.info
Loading...

நோயாளிகள், மருந்து சாப்பிடுபவர்கள் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும்?

எந்தெந்த நோயாளிகள் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும்?

ஆஸ்துமா: 

ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

endha noyaligal endha maadhiriyaana unavugalai thavirkka vendum?, Endha Marundhu sappidubavargal endha vidha unavugalai thavirkka vendum?, Marundhu sappidum poludhu ehdai sappida vendam, allergy foods, pathiyam, sappadu, unavu, kaaram, pulippu, uppu, maamisam, ulcer, astma, thol noi pathiyam, sigichai, idhaya noi, koluppu kuraippu marundhu

மூல நோய்:  

மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.

அல்சர் : 

அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.

வீட்டிற்குத் தூரமான பெண்கள்: 

பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.
எதை எதையெல்லாம் ஒன்றோடு ஒன்று சேர்த்து சாப்பிட கூடாது

தோல் நோய்: 

தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

வாதம், மூட்டுவலி: 


மூட்டுவலி, வாத நோயாளிகள், அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக்கூடாது.

என்னென்ன மருந்து சாப்பிடுபவர்கள் எந்த வித உணவுகளை தவிர்க்க வேண்டும்?


வாழைப்பழம் vs இரத்த அழுத்த மருந்துகள்: 


உங்களுக்கு இரத்த அழுத்த பிரச்சனை இருந்து, அதற்காக மருந்து மாத்திரைகளை எடுத்து வரும் போது பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுக்கக்கூடாது. இருப்பதிலேயே வாழைப்பழத்தில் தான் பொட்டாசியம் வளமான அளவில் உள்ளது. இதனை இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் அதிகம் உட்கொண்டால், இதய செயல்பாடு அதிகரித்து, அதனால் நிலைமை மோசடைய வாய்ப்புள்ளது.

ஆல்கஹால் vs வலி நிவாரணிகள்: 


நீங்கள் ஆன்டி-ஹிஸ்டமைன்கள், சர்க்கரை நோய் மருந்துகள் அல்லது வலி நிவாரணிகளை எடுப்பவராயில், ஆல்கஹால் பருகுவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இந்த மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ஆல்கஹாலை அதிகம் பருகினால், ஆல்கஹாலில் உள்ள உட்பொருட்களை உடைப்பதற்கு கல்லீரல் சற்று அதிகமாக செயல்பட வேண்டியிருக்கும். இப்படி கல்லீரலில் வேலைப்பளு அதிகரித்தால், அதனால் கல்லீரல் செயலிழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள்.
கல்லீரலில் பிரச்சனை இருக்கிறது என்பதை தெரிவிக்கும் அறிகுறிகள்..!

பச்சை இலைக் காய்கறிகள் vs இரத்த உறைதல் தடுப்பு மருந்து: 


இரத்த உறைவு தடுப்பு மருந்துகளை எடுத்து வருபவர்கள், பச்சை இலைக் காய்கறிகளான கேல், பசலைக்கீரை, ப்ராக்கோலி போன்றவற்றை அதிகம் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இந்த மருந்துகளை எடுக்கும் போது, இவற்றை உட்கொண்டால் அதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் கே இரத்த உறைய வழிவகுக்கும். எனவே இவை இரண்டையும் ஒன்றாக உட்கொள்ளாதீர்கள்.

அதிமதுரம் vs இதய பிரச்சனைக்கான மருந்துகள்:  


இதய பிரச்சனைகளுக்கு மருந்து எடுத்து வருபவர்கள், அதிமதுரத்தை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உடலில் பொட்டாசியத்தின் அளவைக் குறைத்து, நோயாளிகளை பலவீனப்படுத்தி, இதய துடிப்பில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும்.


கிரேப்ஃபுரூட் vs கொழுப்புக் குறைப்பு மருந்துகள்: 


உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க மருந்துகளை எடுத்து வரும் போது, கிரேப்ஃபுரூட்/பப்பளிமாஸ் பழத்தை உட்கொள்ள வேண்டாம். ஏனெனில் இதில் உள்ள கெமிக்கல்கள், உடலில் உள்ள கொழுப்புக்களை உடைக்க முடியாமல் செய்யும். மேலும் கொழுப்பு குறைப்பு மருந்துகள் உயர் இரத்த அழுத்தத்தையும் குறையும் உதவும் என்பதால், சிட்ரஸ் பழங்கள் அதிகம் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
வெந்நீர் குடிப்பதால் ஏற்ப்படும் நன்மைகள்.

பால் vs ஆன்டி-பயாடிக்ஸ்: 


ஆன்டி-பயாடிக்குளான சிப்ரோஃப்ளோக்சசின் மற்றும் டெட்ராசைக்ளின் போன்றவற்றை உணவு உட்கொள்வதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் அல்லது உணவு உட்கொண்ட 2 மணிநேரத்திற்கு பின் தான் உட்கொள்ள வேண்டும். அதிலும் இந்த மாத்திரைகளை தண்ணீருடன் தான் எடுக்க வேண்டும். டீ அல்லது பால் உடன் எடுக்கக்கூடாது. ஒருவேளை பாலுடன் எடுத்தால், அந்த மாத்திரையின் சக்தி குறைந்துவிடும்.

எலுமிச்சை vs இருமல் மருந்துகள்: 


உங்களுக்கு சளி அல்லது இருமல் இருந்து, அதற்கு டெக்ஸ்ரோம்த்ரோபன் உள்ள மருந்துகளை எடுக்கும் போது, சிட்ரஸ் பழங்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலமும், டெக்ஸ்ரோம்த்ரோபனும் ஒன்று சேர்ந்தால், அது மயக்க உணர்வை உண்டாக்கும்.
endha noyaligal endha maadhiriyaana unavugalai thavirkka vendum?, Endha Marundhu sappidubavargal endha vidha unavugalai thavirkka vendum?, Marundhu sappidum poludhu ehdai sappida vendam, allergy foods, pathiyam, sappadu, unavu, kaaram, pulippu, uppu, maamisam, ulcer, astma, thol noi pathiyam, sigichai, idhaya noi, koluppu kuraippu marundhu
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'நோயாளிகள், மருந்து சாப்பிடுபவர்கள் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும்?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+




SHARE WhatsApp SHARE
நோயாளிகள், மருந்து சாப்பிடுபவர்கள் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும்?
Tamil Fire
5 of 5
எந்தெந்த நோயாளிகள் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும்? ஆஸ்துமா:  ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், ம...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment