ஒட்டிப்போன கன்னம் சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி | Tamil247.info

ஒட்டிப்போன கன்னம் சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
கன்னம் சதை பிடிக்க, udal edai athikarikka tamil, udal edai athigamaga, tips in tamil, edai Kooda, kannam perukka, kannam kundaga tamil tips, kannam uppa tamil tips, kannam alagu pera, kannam kundavathu eppadi, enna seiya vendum, udambu balam pera, recipe for cheek development, chubby cheek secret

நோஞ்சான் குழந்தைகள், கன்னம் வற்றிப்போன தோற்றம் உடையவர்கள் கொழு கொழுவென்று சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி


குழந்தைகள் உடம்பு தேறாமல் ஒல்லியாக இருப்பது தாய்மார்களுக்கு பெரும் கவலையாக இருக்கும். அதே போல கல்யாணம் ஆகாத இளையவர்கள் திருமணத்திற்கு முன் தனது கன்னங்கள் ஒட்டி போய் முக அழகு குறைந்தது போன்ற தோற்றத்துடன் இருப்பதால் வரன்ங்கள் கிடைக்காத காரணத்தால் தனது உடல் எடை, கன்னம் சதை குறித்து பெரிய கவலையாக இருக்கும். இதுபோன்றவர்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ள கொழு கொழு காஞ்சி ரெசிபியை  செய்து சாப்பிட்டால் அவர்களது கன்னங்கள் சதை பிடிப்பதுடன்  தோற்றத்திலும் முன்னேற்றம் காணலாம்.

உடல் எடை கூட்ட, கன்னம் சதை பிடிக்க, குழந்தை உடல் தேற உதவும் சத்தான ரெசிபி இது, மேலும் இதை செய்வதும் மிக மிக எளிது.

செய்ய தேவையானவை:

 1. முளைவிட்ட கம்பு - 50 gm
 2. முளை விட்ட கோதுமை - 50 gm
 3. முளை விட்ட பாசி பயறு - 50 gm
 4. கொட்டை எடுத்து சுத்தம் செய்யப்பட்ட பேரிச்சம் பழம் - 50 gm
 5. முந்திரி பருப்பு - 50 gm
 6. தேங்காய் துருவல் - 50 gm
 7. உலர்ந்த திராட்சை - 50 gm

செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் எடுத்து மிக்சியில் போட்டு தண்ணீர் விட்டு இட்லி மாவு அரைப்பது போல் அரைக்கவும்.     அவ்வளவுதான், கொழு கொழு கஞ்சி ரெடி. அதை அப்படியே சாப்பிடலாம். பேரிச்சம் பழம் மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்திருப்பதால் இனிப்பு சுவையுடன் இருக்கும்.

அடிக்கடி இதை செய்து சாப்பிட்டு வந்தால் உடல் சதை பிடித்து, ஒட்டிப்போய் இருந்த கன்னங்களில் சதை பிடித்து காணப்படுவீர்கள். மேலும் இதில் இரும்புச்சத்து மிகுந்திருப்பதால் ரத்த சோகை விரைவில் சரியாகும்.

குறிப்பு: உலர்ந்த திராட்சையை உபயோகிக்கும் முன் அதன் தோலில் படிந்துள்ள பூச்சி மருந்து விஷத்தை நீக்க அதை உப்பு கலந்த நீரில் போட்டு 1 அல்லது 2 மணி நேரம் ஊறவைத்து கழுவிய பிறகு உபயோகிக்கவும். 

கன்னம் சதை பிடிக்க, udal edai athikarikka tamil, udal edai athigamaga, tips in tamil, edai Kooda, kannam perukka, kannam kundaga tamil tips, kannam uppa tamil tips, kannam alagu pera, kannam kundavathu eppadi, enna seiya vendum, udambu balam pera, recipe for cheek development, chubby cheek secret, Healthy Foods, Tamil Cooking recipes, iyarkai samayal, Sathana samayal in tamil

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'ஒட்டிப்போன கன்னம் சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
ஒட்டிப்போன கன்னம் சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி
Tamil Fire
5 of 5
நோஞ்சான் குழந்தைகள், கன்னம் வற்றிப்போன தோற்றம் உடையவர்கள் கொழு கொழுவென்று சதை பிடிக்க - கொழு கொழு கஞ்சி குழந்தைகள் உடம்பு தேறாமல் ஒல்லிய...
URL: HTML link code: BB (forum) link code:

  Blogger Comment
  Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News