ஆண்மை பலம் கூட்ட, குழந்தை பிறக்க உதவும் துரியன் பழம் (இயற்க்கை பழ உணவு) | Tamil247.info

ஆண்மை பலம் கூட்ட, குழந்தை பிறக்க உதவும் துரியன் பழம் (இயற்க்கை பழ உணவு)

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

துரியன் பழம்....

உலகில் எண்ணற்ற வகையான பழங்கள் உள்ளன. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் விளையும் ஒரு பழத்திற்காக முன்பதிவு செய்து மாதக்கணக்கில் காத்திருப்பது வினோதமானது. அந்தப் பழம் துரியன் பழம்தான்!. பல்வேறு மருத்துவக் குணங்களையும், உள்ளூர் வெளியூர் வெளிநாட்டு மக்களிடம் அமோக வரவேற்பையும் பெற்றுள்ள துரியன் பழத்திற்கு, சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.
ஆண்மை பலம் கூட்ட, குழந்தை பிறக்க - துரியன் பழம் (இயற்க்கை உணவு), aanmai peruga, aanmai kuraivu maruthuvam tamil, sperm count increase, aanmai kurai, durian fruit details in tamil, kulanthai pirakka sathu niraindha unavu durian pazham

துரியன் பழத்தின் மூலம் கிடைக்கும் பலன்கள்: 


  • பெண்களின் "ஈஸ்ட்ரோஜென்" என்ற ஹார்மோன் சுரப்பியை இப்பழங்கள் ஊக்குவிப்பதால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளதாக நம்பப்படுகிறது.
  • ஆண்மை குறைவு போக்கும் அற்புத சக்தி இதற்கு உண்டு.
  • இப்பழத்திற்குள் இருக்கும் இண்டோல் என்ற ரசாயனப் பொருள் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டோர் இப்பழத்தை உண்டால் உடல் சுகவீனம் நீங்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. அத்துடன் இப்பழத்திற்கு "அப்ரோடைசிக்' குணமுள்ளதால் வீரியத்தன்மையை உருவாக்குவதாக கருதப்படுகிறது. இப்பழம் பழுத்த பின்னர் அதிக நாட்களுக்கு வைக்க முடியாது.
  • மிதவெப்ப மண்டல பயிரான துரியன் பழங்கள் மட்டுமின்றி அந்த மரமும் மருத்துவக் குணம் வாய்ந்ததாகும். இதன் இலைகளின் சாறு காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. அதேபோல, மஞ்சள் காமாலை நோயையும் குணப்படுத்தும் சக்தி உடையது. மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இம்மரத்தின் இலைகளை வெந்நீரில் போட்டுக் குளிக்கலாம்.
  • இதன் இலைச்சாறு தோல் நோய்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இம்மரத்தின் பசுமையான இளம் தளிர்கள் மற்றும் தண்டுகள் சாலட் செய்வதற்கும் உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இப்பழத்திலுள்ள கொட்டைகளைப் பலாக்கொட்டைகளைப் போல வேக வைத்தும், வறுத்தும் சாப்பிடுகின்றனர்.
  • சாக்லேட், கேக், ஐஸ்கிரீம், பானங்கள் போன்றவை தயாரிப்பிலும் துரியன் பழம் பயன்படுகிறது.

துரியன் பழம் குறித்த அறிய தகவல்கள்: 


இதன் மேல் தோல் நமது பலா பழம் போல் முள்ளு முள்ளாக இருக்கும். ஆனால் அளவில் சிறியதாக இருக்கும். பழத்தின் கீழ் முனையில் சிறியதாக பிளந்தால் முழு பழத்தையும் திறந்துவிடலாம். அதை திறப்பவர்கள் கெட்டி கையுறை போட்டுக்கொள்வது நலம். ஏனென்றால் அதன் முற்கள் மிகவும் கூர்மையாக இருக்கும்.

சிறிய அளவிலான பலாப்பழத்தைப்போலத் தோற்றமளிக்கும் இப்பழங்களைப் பிரித்துப் பார்த்தால் உள்ளே அதிகபட்சமாக 7 சுளைகள் வரை காணப்படும். இந்தப் பழம் மரத்திலேயே பழுத்து கீழே விழும். பழம் பழுக்கும்போது அழுகிய முட்டையிலிருந்து வரும் துர்நாற்றத்தைப்போல அதன் மணம் இருக்கும். இதன் காரணமாகவே பெரும்பாலானோர் இப்பழத்தை விரும்புவதில்லை.

ஆங்கிலேயர் காலத்தில் நீலகிரியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பழ மரங்கள் "பர்லியார்' பகுதியில் காணப்படுகின்றன. "துரியோ ஜெபித்னஸ்' என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட துரியன் மரங்கள் உலகில் சுமத்ரா, போர்னியோ, தாய்லாந்து, பர்மா, வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் சிலி ஆகிய நாடுகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
 
"புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது' என்பது பழமொழி. ஆனால் மலேசிய நாட்டு வனத்துறையினர் வித்தியாசமான ஆராய்ச்சி ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். துரியன் பழம் பழுக்கும் காலங்களில் இதன் மரத்திற்கடியில் புலிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதை கண்டறிந்துள்ளனர். அதனால் இப்பழத்தை புலிகள் விரும்பி சாப்பிடுவதாக இருக்கலாம். அல்லது இப்பழத்தை சாப்பிடுவதற்காக இம்மரத்திற்கு வரும் பிற விலங்கினங்களை தங்களுக்கு இரையாக்கிக் கொள்வதற்காகவும் இம்மரங்களுக்கடியில் புலிகள் கூட்டம் இருக்கலாம் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

துரியன் பழங்களுக்குச் சீனாவில் அதிக கிராக்கி உள்ளது. அதேபோல, தமிழகத்தில் சென்னை பகுதிகளில் இப்பழத்திற்கு அதிக வரவேற்பு உள்ளது.

தாய்லாந்து நாட்டில் சந்தாபுரி என்ற இடத்தில் ஆண்டுதோறும் பழங்களுக்கான திருவிழா நடைபெறும். இதில் முக்கிய பழமாக துரியன் இடம் பெறும். சந்தாபுரியே துரியன் பழங்களின் தலைநகராக கருதப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் துரியன் பழ மரங்கள் பர்லியார் மற்றும் கல்லார் பழப்பண்ணைகளில் மட்டும் காணப்படுகிறது. இங்கு குறைந்த எண்ணிக்கையிலேயே துரியன் பழ மரங்கள் இருப்பதால் இப்பழங்களுக்காக முன்பதிவு செய்து கொள்கின்றனர். இம்மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தமிழக அரசின் தோட்டக்கலைத்துறையும் பதியன் மற்றும் ஒட்டு முறைகளின் மூலம் நாற்றுகளை உற்பத்தி செய்து வருகிறது.

இறக்குமதி செய்யப்படும் துரியன் பழங்களைவிட நீலகிரி மாவட்டத்தில் விளையும் துரியன் பழங்கள் வீரியம் கொண்டவையாக இருப்பதால் இதற்கான கிராக்கியும் அதிகரித்துள்ளது. வழக்கமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் துரியன் பழங்கள் ஒரு பழத்திற்கு ரூ.800 வரை விலை போகின்றன.

ஆனால் பர்லியார் பகுதியில் கிடைக்கும் பழங்கள் ஒரு பழத்திற்கு ரூ.2,000 வரை விற்பனையாகின்றன. இதுவே இப்பழத்திற்கு மக்கள் மத்தியிலுள்ள வரவேற்பை உணர்த்துவதற்கு சாட்சி! பல்வேறு மருத்துவக் குணங்களையும், உள்ளூர் வெளியூர் வெளிநாட்டு மக்களிடம் அமோக வரவேற்பையும் பெற்றுள்ள துரியன் பழத்திற்கு, சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்தத் துரியன் பழம் மலைகளின் அரசியான நீலகிரியிலும் விளைவது இம்மாவட்டத்திற்கு மேலும் பெருமையளிப்பதாகும்.

கடைசியாக ஒரு தகவல். இப்பழங்களிலிருந்து வெளியாகும் மணம் ஒவ்வாததால், சிங்கப்பூரில் இப்பழங்களை பொது இடங்களில் உண்பதற்குத் தடை விதித்துள்ளனர். இந்த நாத்ததிற்காகவே இதை பஸ், ரயில்களில் எடுத்துப்போக சிங்கையில் தடை.

இந்த பழங்கள் இரவில் மட்டும் தான் மரத்தில் இருந்து விழும் என்று. பகலில் விழுந்து யாரையும் காயப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக இயற்கையின் வரம்..

கொஞ்சம் அபரிதமான சர்க்கரை ருசியுடன் சுவையாக இருக்கும் இது சாப்பிடும் இரண்டாவது சுளையிலேயே இதன் ஈர்ப்பு விசை புரிந்துவிடும்.

ஆகஸ்டு மாதம் இந்த பழத்தை அறுவடை செய்வர். ஆண்மை குறைவு போக்கும் அற்புத சக்தி இதற்கு உண்டு. அதனால் இதன் விலையும் அதிகம்தான். மஞ்சள் காமாலை நோயையும் குணப்படுத்தும் சக்தி உடையது. சாக்லேட், கேக், ஐஸ்கிரீம், பானங்கள் போன்றவை தயாரிப்பிலும் துரியன் பழம் பயன்படுகிறது. 

பின் குறிப்பு:


இதை நிறைய சாப்பிட்டால் சிலருக்கு உடம்பு சூடு அதிகமாகிவிடும். தொண்டை கமறும். அடுத்த 2 நாட்களுக்கு கொஞ்சம் தூர நின்று பேச வேண்டியிருக்கும்.

சுளையை சாப்பிட்ட பிறகு அது இருந்த ஓட்டில் தண்ணீர் ஊற்றிக்குடித்தால் உஷ்ணம் மற்றும் வாய் நாற்றம் இருக்காது.

ஆண்மை பலம் கூட்ட, குழந்தை பிறக்க - துரியன் பழம் (இயற்க்கை உணவு), aanmai peruga, aanmai kuraivu maruthuvam tamil, sperm count increase, aanmai kurai, durian fruit details in tamil, kulanthai pirakka sathu niraindha unavu durian pazham
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'ஆண்மை பலம் கூட்ட, குழந்தை பிறக்க உதவும் துரியன் பழம் (இயற்க்கை பழ உணவு)' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
ஆண்மை பலம் கூட்ட, குழந்தை பிறக்க உதவும் துரியன் பழம் (இயற்க்கை பழ உணவு)
Tamil Fire
5 of 5
துரியன் பழம்.... உலகில் எண்ணற்ற வகையான பழங்கள் உள்ளன. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் விளையும் ஒரு பழத்திற்காக முன்பதிவு செய்து மாதக்கணக்கில் ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News