19 ஜூலை 2016

, ,

கல்லீரலில் பிரச்சனை இருக்கிறது என்பதை தெரிவிக்கும் அறிகுறிகள்..! (Kalleeral pirachanai arikurigal - Liver damage symptoms in tamil)

Kalleeral pirachanai arikurigal - Symptoms of Liver Disease, Udal nalam kurippugal, Udal nalam kappom, health tips in tamil, liver damage symptoms in tamil

Kalleeral pirachanai arikurigal - Liver damage symptoms in tamil  

கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்...


கல்லீரல் தான் மனித உடலிலேயே மிகப்பெரிய உறுப்பு.

உடலில் சேரும் டாக்ஸின்களை வெளியேற்றுவது மற்றும் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரப்பது கல்லீரலின் முக்கியமான செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்கது.

அத்தகைய கல்லீரலில் சிறு பிரச்சனை என்றாலும், அதனால் உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகள் பாதிக்கப்படும், பிரச்சனை முற்றினால், உயிரைக் கூட இழக்க நேரிடும்.

ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்கமாட்டோம்.
Kalleeral pirachanai arikurigal - Symptoms of Liver Disease, Udal nalam kurippugal, Udal nalam kappom, health tips in tamil, liver damage symptoms in tamil

கல்லீரலில் பிரச்சனை அறிகுறிகளை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கல்லீரலில் பிரச்சனை இருந்தால் எப்படி தெரிந்துகொள்வது?

கல்லீரலில் பிரச்சனை இருக்கிறது என்பதை தெரிவிக்கும் அறிகுறிகள்:

குமட்டல்

கல்லீரல் சரியாக இயங்காமல் இருப்பின், குமட்டலை சந்திக்கக்கூடும். எனவே உங்களுக்கு அவ்வப்போது குமட்டல் ஏற்பட்டால், உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

கால்களில் வீக்கம்

ஒருவருக்கு கல்லீரல் சரியாக செயல்படாமல் இருந்தால், கால்களில் லேசாக வீக்கம் அவ்வப்போது ஏற்படும். எனவே திடீரென்று கால்கள் வீங்கியிருந்தால், உடனே மருத்துவரை சந்திக்கவும்.

மஞ்சள் காமாலை

எப்போது ஒருவரின் சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதோ, அத்தகையவருக்கு மஞ்சள் காமாலை காரணமாக பித்தநீர் தேங்கியுள்ளது என்று அர்த்தம்.

வயிற்று உப்புசம் மற்றும் வலி

கல்லீரலில் கட்டிகளானது அவ்வளவு சீக்கிரம் வராது. ஆனால் கல்லீரலானது தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தால் தான், கல்லீரலில் கட்டிகள் உருவாகும். உங்கள் கல்லீரலில் கட்டிகள் இருந்தால், வலது பக்கத்தில் அடிவயிற்றிற்கு சற்று மேலே வலி எடுப்பதோடு, வயிறு உப்புசத்துடனும் இருக்கும்.

காய்ச்சல், வாந்தி, சோர்வு

கல்லீரலை வைரஸ் தாக்கினால் உருவாவது தான் ஹெபடைடிஸ் என்னும் கல்லீரல் அழற்சி. உங்களுக்கு கல்லீரல் அழற்சி இருந்தால், வாந்தி, சோர்வு, காய்ச்சல், மயக்கம், குளிர் போன்றவற்றை சந்திக்கக்கூடும்.

அடர் நிற சிறுநீர்

கல்லீரலில் பிரச்சனைகள் இருந்தால், உங்கள் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளிவரும். எனவே இந்த நிலையை நீங்கள் சந்தித்தால், தவறாமல் மருத்துவரை சந்தியுங்கள்.

தலைச்சுற்றல்

ஆல்கஹால் குடிப்பவராக இருந்தால், விரைவில் கல்லீரல் பாதிக்கப்படும். ஆல்கஹால் அதிகம் பருகி கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், தலைச்சுற்றல் மற்றும் குழப்பம் அடிக்கடி ஏற்படும்.

சோர்வு

நாள்பட்ட சோர்வு கூட கல்லீரல் பிரச்சனைக்கான அறிகுறியே. ஆகவே உங்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்பட்டால், மருத்துவரை சந்தித்து முறையான பரிசோதனையை மேற்கொண்டு, சரியான காரணத்தைக் கண்டறியுங்கள்.

கருவளையம் மற்றும் சோர்வான கண்கள்

கல்லீரல் சரியாக இயங்காலிட்டால், சருமத்தில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.

வாய் துர்நாற்றம்

கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்.

வாய் கசப்பு:
 கல்லீரலில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால், கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். அடித்தொண்டையில் கசப்பு தன்மையை உணர்தல்.Manidha udalileye kalleeral than mikapperiya uruppu.

Udal aarokkiyamaaga iruppatharkku palveru mukkiyamaana seyalpaadukalil eedupaduvathum ithuve. Athil udalil serum toxin galai veliyetruvathu matrum serimaanatthirku thevaiyaana pittha neerai surappathu kurippidatthakkathu.

Enave kalleeralil siru pirachanai enraalum, athanaal udalin palveru seyalpaadugal paadhikkappadum.

Athilum kalleeralil ulla pirachanai mutrinaal, uyiraik kooda ilakka neridum.

Enave kalleeralil pirachanai irunthal thenpadum arikurigalai ovvoruvarum therintu kolla vendiyatu avasiyam.

Kaalgalil veekkam

oruvarukku kalleeral sariyaaga seyalpadaamal irunthal, kaalkalil lesaaga veekkam avvappotu erppadum. Enave thideerenru kaalgal veengiyirunthal, udane marutthuvarai santhikkavum.

manjal kaamaalai

eppotu oruvarin sarumam matrum kangal manjal niratthil irukkiratho, atthagaiyavarukku manjal kaamaalai kaaranamaaga pitthaneer thenkiyullathu enru arttham.

Vayitru uppusam matrum vali

kalleeralil kattigalaanathu avvalavu seekkiram varaathu. aanaal kalleeralaanathu theeviramaaga paatikkappattirunthal than, kalleeralil kattikal uruvaagum. Ungal kalleeralil kattikal irunthal, valathu pakkatthil adivayitrirku satru mele vali eduppathodu, vayiru uppusatthudanum irukkum.

Vaanti, sorvu, kaaichal

kalleeralai virus thakkinaal uruvaavathu than hepatitis ennum kalleeral alarchi. Ungalukku kalleeral alarchi irunthal, vaanthi, sorvu, kaaichal, mayakkam, kulir ponravatrai santhikkakkoodum.

Talaichutral

Alcohol kudippavaraaga irunthal, viraivil kalleeral paathikkappadum. Alcohol athigam paruki kalleeral paathikkappattirunthal, thalaichutral matrum kulappam adikkadi erpadum.

kumattal

kalleeral sariyaaka iyangaamal iruppin, kumattalai santhikkakkudum. Enave unkalukku avvappotu kumattal erpatthal, udane marutthuvarai santiyunkal.

Adar nira siruneer

kalleeralil pirachanaigal irunthal, ungal siruneer adar manjal niratthil velivarum. Enave intha nilaiyai neengal sandhitthaal, thavaraamal marutthuvarai santhiyungal.

sorvu

naalpatta sorvu kooda kalleeral pirachanaikkaana arikuriye. aagave ungalukku adikkadi sorvu erpattal, marutthuvarai santhitthu muraiyaana parisothanaiyai merkondu, sariyaana kaaranatthaik kandariyunkal.

Kalleeral pirachanai arikurigal - Symptoms of Liver Disease, Udal nalam kurippugal, Udal nalam kappom, health tips in tamil, liver damage symptoms in tamilஎனதருமை நேயர்களே இந்த 'கல்லீரலில் பிரச்சனை இருக்கிறது என்பதை தெரிவிக்கும் அறிகுறிகள்..! (Kalleeral pirachanai arikurigal - Liver damage symptoms in tamil)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News