குதிரைவாலி ஊத்தாப்பம் - சிறுதானிய சமையல் - செய்முறை ('Kuthiraivali Uthappam' Siruthaniya samayal) | Tamil247.info

குதிரைவாலி ஊத்தாப்பம் - சிறுதானிய சமையல் - செய்முறை ('Kuthiraivali Uthappam' Siruthaniya samayal)

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

குதிரைவாலி ஊத்தாப்பம்..  (Kuthiraivali Uthappam || Barnyard Millet Uthappam seimurai | kuthiraivali samayal || Siruthaniya samayal in tamil || Siruthaniya recipes) 

Kuthiraivali Uthappam Barnyard Millet Uthappam seimurai Siruthaniya samayal recipes in tamil book PDF

செய்ய தேவையான பொருட்கள்:
 1. குதிரைவாலி (ஊற வைத்தது) - 3 டம்ளர்
 2. தோல் உளுந்து (ஊற வைத்தது) - 1 டம்ளர்
 3. வெந்தயம் (ஊற வைத்தது) - 1 ஸ்பூன்
 4. முளை கட்டிய பயறு - ஒரு கைப்பிடி
 5. காரட் - 2
 6. இஞ்சி - ஒரு துண்டு
 7. தக்காளி - 1
 8. ஆளி விதை ( பிளக்ஸ் சீட்) - சிறிதளவு
 9. தயிர் - ஒரு ஸ்பூன்
 10. கொத்தமல்லி தழை - தேவையான அளவு
 11. தேஙகாய் துருவியது - ஒரு மூடி
 12. இந்துப்பு - தேவையான அளவு
 13. எண்ணெய் - தேவையான அளவு
குதிரைவாலி ஊத்தாப்பம் செய்முறை:

முதலில் ஊற வைத்த குதிரைவாலி, வெந்தயம் இவற்றை மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துகொள்ள வேண்டும் பிறகு தோல் உளுந்தையும் மிக்ஸியில் போட்டு தனியாக அரைத்து எடுத்து அதை ஏற்க்கனவே அரைத்து வைத்துள்ள குதிரைவாலி மாவுடன் கலந்து அதனுடன் மேலும் தேவையான அளவு இந்துப்பு மற்றும் தயிர் ஆகியவற்றை சேர்த்து, மாவு புளிப்பதர்க்காக இரண்டு மணி நேரம் அப்படியே வைத்து விடலாம். (குதிரைவாலி ஊத்தாப்பம் செய்ய இரண்டு மணிநேரத்திற்கு முன்பாகவே மாவை தயார் செய்து வைத்துக்கொள்வது நன்று).

ஊத்தாப்பம் செய்து முடித்ததும் அதன் மீது வாசத்திற்கு ஆளி விதைகளை தூவவேண்டும் அதற்காக விதைகளை மிக்ஸியில் அரைத்து பொடியாக எடுத்து வைத்துகொள்ள வேண்டும்.

மாவு சிறிது புளித்ததும் அதில் பொடியாக நறுக்கிய காரட், தக்காளி, இஞ்சி மாற்றும் முளை கட்டிய பயறு போன்றவைகளை போட்டு கலந்த பிறகு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும் அதில் ஊத்தாப்ப மாவை ஊற்றி ஊத்தாப்பம் மீது அழகிர்க்கவும் சுவைக்காகவும் கொத்தமல்லி தழை, தக்காளி , காரட் போன்றவைகளை துண்டுகளாக நறுக்கி பிசாவின் மேலே இருப்பது போல தூவலாம். அடுப்பை சிம்மில் வைத்து ஊத்தாப்பம் வெந்துகொண்டிருக்கும் போது ஊத்தாப்ப கல்லை மூடியால் மூடி வைத்துவிடவும் சிறிது நேரம் கழித்து ஊத்தாப்பத்தை திருப்பி போட்டு வெந்ததும் அடுப்பிலிருந்து எடுத்து அதன் மீது ஆளி விதை பொடியை தூவவும். மனமும் சுவையும் நிறைந்த குதிரைவாலி ஊத்தாப்பம் ரெடி..

ஊத்தாப்பத்திற்கு  தொட்டுக்கொள்ள:
வெள்ளரிக்காய் சட்னி - செய்முறை (Vellarikkai Chutney - Vellarikka Recipe)..

by தென்றல் மதுசூதனன்..
குதிரைவாலி ஊத்தாப்பம், 'Kuthiraivali Uthappam', siruthaniya recipes in tamil language, siruthaniya unavu, kuthiraivali samayal, siruthaniya vagaigal, kuthiraivali uthappam video youtube
(Kuthiraivali Uthappam || Barnyard Millet Uthappam seimurai | kuthiraivali samayal || Siruthaniya samayal in tamil book PDF || kuthiraivali rice dosa || Siruthaniya recipes, siruthaniya recipes in tamil language, siruthaniya unavu, kuthiraivali samayal, siruthaniya vagaigal, kuthiraivali uthappam)
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'குதிரைவாலி ஊத்தாப்பம் - சிறுதானிய சமையல் - செய்முறை ('Kuthiraivali Uthappam' Siruthaniya samayal)' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
குதிரைவாலி ஊத்தாப்பம் - சிறுதானிய சமையல் - செய்முறை ('Kuthiraivali Uthappam' Siruthaniya samayal)
Tamil Fire
5 of 5
குதிரைவாலி ஊத்தாப்பம்..  (Kuthiraivali Uthappam || Barnyard Millet Uthappam seimurai | kuthiraivali samayal || Siruthaniya samayal in tamil...
URL: HTML link code: BB (forum) link code:

  Blogger Comment
  Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News