இனி IRCTC இணையதளத்தில் ஒரு டிக்கெட் முன்பதிவு செய்ய 35 நொடிகள் காத்திருக்க வேண்டும் - ஏஜெண்டுகளுக்கு IRCTC வைத்த ஆப்பு..!!! | Tamil247.info

இனி IRCTC இணையதளத்தில் ஒரு டிக்கெட் முன்பதிவு செய்ய 35 நொடிகள் காத்திருக்க வேண்டும் - ஏஜெண்டுகளுக்கு IRCTC வைத்த ஆப்பு..!!!

ரயிலில் பயணம் செய்யவேண்டிய பயணி முன்பதிவு செய்வதற்கு IRCTC இணையதளம் மூலமாக ஆன்லைனில் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவேண்டும். அவ்வாறு பதிவு செய்யும் பயணி ஒருவர், தன் குடும்பத்தினர் பற்றிய விவரங்களை பூர்த்தி செய்து, வங்கி பரிவர்த்தனையை முடித்து டிக்கெட் எடுக்க குறைந்தபட்சம் 35 நொடிகள் ஆகிவிடும்.

35 seconds compulsory wait to book tickets on IRCTC website to control agents illegal ticket booking, IRCTC new 35 seconds waiting to book train tickets, tatkal ticket, india news, irctc news in tamil, tamil news, seidhigal, seidhi, 35 nodi katthirukka vendum, munpadhivu, railway ticket booking scheme

ஆனால், சில ஏஜெண்டுகள், விசேஷ சாப்ட்வேர்களை முறைகேடாக பயன்படுத்தி, முன்கூட்டியே விவரங்களை பதிவு செய்து, அதிவேகமாக டிக்கெட்டுகளை எடுத்து விடுகிறார்கள். இதனால், உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே, தங்கள் இணையதளத்தை ஏஜெண்டுகள் துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்கவும், உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்கவும் IRCTC புதிய பாதுகாப்பு அம்சங்களை அதன் இணையதளத்தில் சேர்த்துள்ளது. இதன்படி, ஆன்லைனில் ஒரு டிக்கெட்டை எடுத்து முடிக்க குறைந்தபட்சம் 35 நொடிகள் ஆகிவிடும். அதற்கு முன்பாக யாரும் டிக்கெட் எடுத்துவிட முடியாது, அத்தகையவர்களுக்கு மட்டும் தான் டிக்கெட் கிடைக்கும்; பிறருக்கு டிக்கெட் கிடைக்காத வகையில், மாற்றத்தை செய்துள்ளது IRCTC..

35 நொடி என்பது குறைந்தபட்ச நேரம்தான். மற்றபடி, சம்பந்தப்பட்ட பயணிகளுடைய இணையதளத்தின் வேகம், விவரங்களை பூர்த்தி செய்யும் வேகம் ஆகியவற்றைப் பொறுத்து, முன்பதிவு செய்யும் நேரம் அதிகரிக்கவும் செய்யலாம். அதே சமயத்தில், ஒரே நேரத்தில் பலரும் அந்த இணையதளத்தை நாடுவதால், சில நேரங்களில் டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, 'தட்கல்' எனப்படும், அடுத்த நாள் பயணத்திற்காக, முந்தைய நாளில் டிக்கெட் எடுக்கும் போது, இந்த நிலை ஏற்படுகிறது.இதை தவிர்க்க ஒரு நொடிக்கு 250 டிக்கெட் வீதம் ஒரு நிமிடத்துக்கு 15 ஆயிரம் டிக்கெட் எடுக்கும்வகையில், IRCTC இணையதளத்தின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இணையதளத்தை யாரும் ஊடுருவி முடக்காத (Hack) வகையில் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, ஆன்லைனில் உறுதி செய்யப்பட்ட ‘தட்கல்’ டிக்கெட்டுகள் இனிமேல் எளிதாக கிடைக்கும்.

35 seconds compulsory wait to book tickets on IRCTC website to control agents illegal ticket booking, IRCTC new 35 seconds waiting to book train tickets, tatkal ticket, india news, irctc news in tamil, tamil news, seidhigal, seidhi, 35 nodi katthirukka vendum, munpadhivu, railway ticket booking scheme

இந்த 'இனி IRCTC இணையதளத்தில் ஒரு டிக்கெட் முன்பதிவு செய்ய 35 நொடிகள் காத்திருக்க வேண்டும் - ஏஜெண்டுகளுக்கு IRCTC வைத்த ஆப்பு..!!! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
இனி IRCTC இணையதளத்தில் ஒரு டிக்கெட் முன்பதிவு செய்ய 35 நொடிகள் காத்திருக்க வேண்டும் - ஏஜெண்டுகளுக்கு IRCTC வைத்த ஆப்பு..!!!
Tamil Fire
5 of 5
ரயிலில் பயணம் செய்யவேண்டிய பயணி முன்பதிவு செய்வதற்கு IRCTC இணையதளம் மூலமாக ஆன்லைனில் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவேண்டும். அவ்வாறு ப...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment