11 ஜனவரி 2016

, , ,

ஒரு கொய்யா இலையில் இவ்ளோ மருத்துவ பயன்களா..!!

Health Benefits Of Guava Leaves, Koyaa ilai maruthuva payangal, dengu kaycchalai tadukkum koyya ilai, iyarkai unavu, iyarkai unavu maruthuvam, iyarkai unavu ulagam, மருந்தாகும் கொய்யா இலை, mooligai maruthuvam, Health Benefits of Guava Leaf , young leaves of the guava plant are used in traditional medicine, Guava leaf medicinal values, koyya ilai maruthuva kunangal payangal iyarkai maruthuvam, natural medicine, guava leaves health benefits, mooligai


Health Benefits Of Guava Leaves, Koyaa ilai maruthuva payangal, dengu kaycchalai tadukkum koyya ilai, iyarkai unavu, iyarkai unavu maruthuvam, iyarkai unavu ulagam, மருந்தாகும் கொய்யா இலை, mooligai maruthuvam, Health Benefits of Guava Leaf , young leaves of the guava plant are used in traditional medicine, Guava leaf medicinal values, koyya ilai maruthuva kunangal payangal iyarkai maruthuvam, natural medicine, guava leaves health benefits, mooligai

Health Benefits Of Guava Leaves - Koyya ilai maruthuva payangal - கொய்யா இலை மூலம் நமக்கு கிடைக்கும் மருத்துவ பயன்கள்..!!!

தைராய்டு: கொய்யா இலை கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும்.

கொய்யாப் பழம் மலச்சிக்கலைப் போக்கும். கொய்யா இலை கஷாயம் வாந்தி-பேதியைத் தடுக்கும்.

உதிரப் போக்கு: கொய்யா இலைகளை கொதி நீரில் போட்டு கஷாயமாக்கிக் குடித்தால், உதிரப் போக்கு தடைபடும்.
 
கொய்யா  இலைகளை நன்கு கழுவி சுடுதண்ணீரில் கொதிக்கவிட்டு தேநீர் போன்று அருந்தினால் கொழுப்பைக் குறைக்கும், நீரிழிவை தடுக்கும், மேலும் வயிற்று  போக்கினால் அவதிபடு பவர்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்கும்.  கொய்யா இலைசாறில் வயிற்று போக்குக்கு பொதுவான காரணமாக  இருக்கக்கூடிய ஏரொஸ் பாக்டீரியா வளர்ச்சி தடுக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

வயிற்றுப்போக்கு: வயிற்றுப்போக்கு உள்ளவர்கள், 30 கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து, 1-2 டம்ளர் நீரில் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வர வயிற்றுப்போக்கிற்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இருமல்: கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன.

கொய்யா மரத்தின் இளம், புதுக் கிளைகளின் இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

ஈறு வீக்கம்: ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் கொய்யா இலையைக் காய்ச்சி கொப்பளிக்கலாம்.

பல் வலி: கொய்யா இலைகளை வாயில் போட்டு மென்றால், வயிற்றுப் புண், பல் வலி நீங்கும்.
பல் கூச்சம் சரியாக

வயிற்று வலி:  கடுமையான வயிற்று வலியால் அவஸ்தைப்பட்டு வந்தால், 8 கொய்யா இலையை, 1 1/2 லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி, தினமும் மூன்று முறை குடித்து வர, வயிற்று வர நீங்கும்.

காயம் ஆற: கொய்யா மரத்தின் குருத்து இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும்.
சிலருக்கு தோலில் உண்டாகும் காயம் எளிதில் ஆறாமல் இருக்க என்ன காரணம்..?

கொய்யா இலையை இளம் தளிர் இலைகளாக பார்த்து ஒரு கப் இலை எடுத்துக்கொள்ளுங்கள். இலைகளை நன்கு கழுகி  தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.  தேன் சேர்த்து கலந்தும் குடிக்கலாம்.
நீரிழிவு நோய்: ஜப்பானில் உள்ள யாகுல்ட் மத்திய நிறுவனம் நடத்திய கொய்யா இலை பற்றிய ஆய்வில் கொய்யா இலை தேனீர் ஆல்பா-glucosidease நொதி செயல்பாட்டை குறைத்து இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். Type 2 நீரிழிவு நோயாளிகள் 12 வாரங்கள் தொடர்ந்து கொய்யா இலையின் தேநீரை பருகினால் சர்க்கரையின் அளவில்  மாறுதல்கள் ஏற்படும்.

கொழுப்பு குறைய: கொய்யா இலையின் தேநீரை பருகுவதால் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடின் அளவுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஆராய்ச்சி ஒன்றில் தொடர்ந்து மூன்று மாதங்கள் கொய்யா இலை டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைந்து, நல்ல கொழுப்புக்களின் அளவு பராமரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. மேலும் கொய்யா இலை கல்லீரலுக்கான சிறந்த டானிக் எனலாம்.
இந்த முறையில் அரிசி சாதம் செய்து சாப்பிட்டால் உடல் எடை கூடாது..

தோல் பிரச்சினை: கொய்யா, தோல் அமைப்புமுறை மேம்படுத்துகிறது. தளர்வான தோல் சரிசெய்வதில் சந்தையில் கிடைக்கும் ஊட்டமளிக்கும் லோஷன்களை விட இது சிறந்தது. கொய்யாவில் உள்ள தாதுக்கள் மற்றும் சத்துக்கள் தோலின் நிறம் மற்றும் தோலின் சுருக்கத்தை சரிசெய்கிறது. 

முகம் பொலிவு பெற, கரும் புள்ளிகள் மறைய: கொய்யா இலைகளை மசித்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தொடர்ந்து முகம் கழுவி வந்தால் முகம் பொலிவு பெரும், கொய்யா இலைகளில் உள்ள பாக்டீரியா கொள்ளும் தன்மையால் கரும் புள்ளிகளை உண்டாக்கும் பாக்டீரியா அழிக்கப்பட்டு கரும் புள்ளிகள்(Acne and Black spots) மறையும்.

தலை முடி பிரச்சனைகளுக்கு:

பொடுகுத் தொல்லை: பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுபவர்கள், கொய்யா இலையை அரைத்து பொடி செய்து, நீரில் கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், அதில் உள்ள கசப்புத்தன்மையினால் பொடுகை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
பொடுகு தொல்லை போக்கும் 4 எளிய வீட்டு வைத்தியங்கள் ..

முடியை உறுதிபடுத்த: கொய்யா இலையை 20 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று முடி பலம் பெறும்.

நுனி முடி வெடிப்பு: முடி வெடிப்புக்களைத் தடுப்பதற்கு, கொய்யா இலையை அரைத்து பேஸ்ட் செய்து, கூந்தலில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.

பேன் தொல்லை: கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒரு முறை தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
தலையில் அரிப்பு: தலையில் ஏற்படும் அரிப்பிற்கு கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒருமுறை ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊற வைத்து அலச வேண்டும்.
தேங்காய் எண்ணெயின் 8 முக்கிய பயன்கள்..

செரிமானத்தை அதிகரிக்கும்: செரிமான பிரச்சனை இருந்தால், கொய்யா இலையின் டீயை குடித்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, செரிமானம் நடைபெறும். மேலும் கொய்யா இலை வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வயிற்றினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

விந்தணு உற்பத்தி: ஆண்கள் கொய்யா இலையை டீ போட்டு குடித்து வந்தால், விந்தணுவின் உற்பத்தி அதிகரிப்பதோடு, விந்தணுவின் தரமும் அதிகரிக்கும்.

குடி போதையை உடனே முறிக்க:  குடி போதையில் உள்ளவர்களுக்கு போதையை உடனே முறிக்க கொய்யா இலையை உண்ண கொடுத்தால் உடனே வெறி இறங்கும் என்பார்கள்.
இதை படிப்பவன் எவனும் நண்பன் குடித்துவிட்டு மீதி வைத்த சரக்கை குடிக்க மாட்டான்.

100 கிராம் கொய்யா இலையில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு:

 • புரதம் – 2.55 கிராம் 
 • வைட்டமின் B6 – 0.11 மி.கி (8%) 
 • கோலைன் – 7.6 மி.கி (2%) 
 • வைட்டமின் சி – 228.3 மி.கி (275%) 
 • கால்சியம் – 18 மி.கி (2%) 
 • இரும்பு – 0.26 மி.கி (2%) 
 • மெக்னீசியம் – 22 மி.கி (6%) 
 • மாங்கனீசு – 0.15 மி.கி (7%) 
 • பாஸ்பரஸ் – 40 மி.கி (6%) 
 • பொட்டாசியம் – 417 மி.கி (9%) 
 • சோடியம் – 2 மி.கி (0%) 
 • துத்தநாகம் – 0.23 மி.கி (2%)
References: 
http://vivasayam.org/2015/10/19/கொய்யா-இலையின்-மருத்துவ/
http://tamil.boldsky.com/beauty/hair-care/2015/pamper-your-hair-with-guava-leaves-009258.html
http://tamil.boldsky.com/health/wellness/2015/health-benefits-guava-leaves-008043.html
http://www.stylecraze.com/articles/benefits-of-guava-leaves-for-skin-hair-and-health/
http://www.viduthalai.in/home/viduthalai/medical/62827-2013-06-24-10-17-11.html
http://www.dinamani.com/health/2016/01/06/கொய்யா-இலை-இருக்க-கவலை-ஏன்/article3197081.ece


Health Benefits Of Guava Leaves, Koyaa ilai maruthuva payangal, dengu kaycchalai tadukkum koyya ilai, iyarkai unavu, iyarkai unavu maruthuvam, iyarkai unavu ulagam, மருந்தாகும் கொய்யா இலை, mooligai maruthuvam, Health Benefits of Guava Leaf , young leaves of the guava plant are used in traditional medicine, Guava leaf medicinal values, koyya ilai maruthuva kunangal payangal iyarkai maruthuvam, natural medicine, guava leaves health benefits, mooligaiஎனதருமை நேயர்களே இந்த 'ஒரு கொய்யா இலையில் இவ்ளோ மருத்துவ பயன்களா..!! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News