09 டிசம்பர் 2015

, ,

மழை நீரில் நனைந்த பொருட்களால் ஏற்ப்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ள 9 ஆலோசனைகள்..

9 Rules for Electrical Safety After a Flood, mazhai neer vadindha piragu erppadum minsara vibathai thavirkka min vaariyam vazhangiya 9 kurippugal, safety tips in tamil, Electric safety, Home appliances electric shock awareness post in tamil, மழை நீரில் நனைந்த பொருட்களால் ஏற்ப்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ள 9 ஆலோசனைகள்..

மழை நீரில் நனைந்த பொருட்களால் ஏற்ப்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க மின்வாரியம் கொடுத்துள்ள 9 குறிப்புகள்: (9 Rules for Electrical Safety After a Flood)

Rules for Electrical Safety After a Flood, mazhai neer vadindha piragu erppadum minsara vibathai thavirkka min vaariyam vazhangiya 9 kurippugal, safety tips in tamil, Electric safety, Home appliances electric shock awareness post in tamil
மழைநீர் வடிந்த பிறகு மின்சாரம் வழங்கப்பட்ட பகுதிகளில் மின்விபத்துக்களைத் தவிர்க்க மின் நுகர்வோர்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டியது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

மழை வெள்ளத்தில் மூழ்கிய இருசக்கர வாகனத்தை எப்படி ஸ்டார்ட் செய்வது?

Electrical Safety குறித்த அந்த 9 ஆலோசனைகள்:


1. ஈரமான மின் அளவிகள் உள்ள பலகைகள், ஸ்விட்சுகள் மற்றும் மின்ஒயர்களை தொடக்கூடாது.

2. நீரில் நனைந்த மின் ஒயர்கள் செல்லும் ஒயரிங்கிள் மின்கசிவு இருந்தால், ஈரமான சுவர்களை தொட வேண்டாம். சுவரில் ஈரம் இருப்பின் உடனடியாக மெயின் சுவிட்சை ஆப் செய்து, எலக்டீரிசியனை வரவழைத்து முழுவதுமாக சரி பார்க்க வேண்டும்.

3. மழைநீரில் நனைந்த மின் உபகரணங்கள் அதாவது தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம், கணினி மற்றும் இதர மின்சாதனங்களை முழுவதும் உலர்ந்துள்ளதா என்று உறுதி செய்த பின்பு அருகில் உள்ள எலக்டீரிசியனை வரவழைத்து முழுவதுமாக பரிசோதித்த பிறகு பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

மழை வெள்ளம் வடிந்த இடங்களில் மீண்டும் வீடுகளுக்குள் புகுவதற்கு முன் கவனிக்க வேண்டிய 10 குறிப்புகள் 

4. தண்ணீர் வடிந்த பிறகு மின் ஒயர்கள் செல்லும் மின் பாதைகளை எலக்டீரிசியனை வரவழைத்து முழுவதுமாக பரிசோதிக்க வேண்டும்.

5. மின்கம்பங்கள், பில்லர் பெட்டிகள், தெருவிளக்கு மின்கம்பங்கள் ஆகியவற்றை தொடக்கூடாது.

6. மின்கம்பி அல்லது ஒயர்களின் மீது ஈரத்துணி உலர்த்த பயன்படுத்த வேண்டாம்.

7. மின் கம்பங்களில் துணிகளையோ, கம்பிகளையோ அல்லது வளர்ப்பு பிராணிகளை கட்ட வேண்டாம்.

8. மின்கம்பிகள் அல்லது ஏதேனும் மின்கடத்திகள் அறுந்து கிடந்ததை கவனித்தால் உடனடியாக அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

9. மின்மாற்றிகள் மற்றும் பில்லர் பெட்டிகளில் மின்பொறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மின் விபத்துகளைத் தவிர்க்க மின்வாரிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலில் சேற்றுப்புண் வராமல் இருக்க - 12 ரூபாயில் கிடைக்கும் கிருமிநாசினி - பொட்டாசியம் பெர்மாங்கனேட் 
mazhai neer vadindha piragu erppadum minsara vibathai thavirkka min vaariyam vazhangiya 9 kurippugal, safety tips in tamil, Electric safety, Home appliances electric shock awareness post in tamil, min vibatthu thadukka alosanaigal.எனதருமை நேயர்களே இந்த 'மழை நீரில் நனைந்த பொருட்களால் ஏற்ப்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ள 9 ஆலோசனைகள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News