உங்கள் கழிவறையில் வீசும் துர்நாற்றத்தை நீக்கவும், கழிவறையை அதிக செலவில்லாமல் சுத்தம் செய்யவும் சில எளிய வழிகள்..!! | Tamil247.info

உங்கள் கழிவறையில் வீசும் துர்நாற்றத்தை நீக்கவும், கழிவறையை அதிக செலவில்லாமல் சுத்தம் செய்யவும் சில எளிய வழிகள்..!!

கழிவறையில் வீசும் துர்நாற்றத்தை நீக்கவும், கழிவறையை அதிக செலவில்லாமல் சுத்தம் செய்யவும் சில எளிய வழிகள்..!! ( Toilet smell removal tips in tamil)


Natural Ways To Get Rid Of Bathroom Odours  How to Remove Toilet Odors Naturally, kalivarai natram poga eliya valigal, remove toilet smell tips, general tips in tamil, lifehacks in tamil, toilet smells really bad, smelly toilet problem, sutham sugam tharum, டாய்லெட் நாற்றம், கழிவறைபொதுவாக டாய்லெட் நாற்றமும் அழுக்கும் போக நம்மில் பலர் ஆசிட் போன்ற கெமிகல் பொருட்களைக்கொண்டு சுத்தம் செய்வது வழக்கம். அனால் அதனிலிருந்து வரும் உடலுபாதைகள் அதிகம். இதற்க்கு பதிலாக ஒரு சில எளிய வழிகளின் ஊடாக கழிவறையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துகொள்ள முடியும்.  அவைகள் என்னென்ன என விரிவாக தெரிந்துகொள்வோம்.

சோப்பு தூள்:


நல்ல நறுமணமிக்க சோப்பு தூளை நீரில் கலந்து, அதனைக் கொண்டு கழிவறையை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கழுவினால், கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம். இதையே செலவில்லாமல் செய்ய, சோப்பு போட்டு துணியை ஊறவைத்த பிறகு மீந்துள்ள சோப்பு நீரால் கழிவறையை சுத்தம் செய்யலாம்.

எலுமிச்சை சாறு:


எலுமிச்சை சாறு கழிவறை துர்நாற்றத்தைப் போக்க உதவும் பொருட்களில் ஒன்று எலுமிச்சை சாறு. இந்த எலுமிச்சை சாற்றினை தினமும் இரவில் படுக்கும் முன் கழிவறையின் தரை மற்றும் சின்க்களில் தெளித்து விட்டு, சிறிது நேரம் கழித்து, நீரை ஊற்றுங்கள். இதனால் கழிவறையில் உள்ள துர்நாற்றம் நீங்கும்.

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடாவை ஒரு பக்கெட் நீரில் கலந்து, வாரத்திற்கு இரண்டு முறை கழிவறையை சுத்தம் செய்யுங்கள். இதன் மூலமும் கழிவறை நாற்றத்தைத் தடுக்கலாம்.

வினிகர்:

கருப்பு அல்லது ஆப்பிள் சீடர் வினிகரைக் கொண்டு கழிவறையை சுத்தம் செய்யலாம். இதனால் கழிவறையில் உள்ள துர்நாற்றம் மட்டுமின்றி, அழுக்குகளும் முழுமையாக நீங்கும், செலவும் அதிகம் ஆகாது.

சன்னல் காற்றோட்டம்:

கழிவறையில் உள்ள சன்னல்களை மூடி வைக்காமல் திறந்து வைத்து சுத்தமான காற்று உள்ளே வருமாறு வைக்கவேண்டும், இதனால் கழிவறையில் உள்ள துர்நாற்றம் குறையும். Exhaust Fan வைப்பதும் அசுத்த காற்றை வெளியேற்றி சுத்தமான காற்று எளிதில் உள்ளே வர வழிசெய்யும்.

மெழுகுவர்த்தி or தீக்குச்சி:

நீங்கள் செல்வதற்கு முன் வேருயாரேனும் சென்று வந்த நாற்றம் போக ஒரு மெழுகுவர்த்தியையோ அல்லது தீக்குச்சியையோ பற்றவைத்து கழிவறைக்குள் எடுத்துசென்றால் துர்நாற்றம் குறையும்.

கழிவறைக்குள் தாவரங்கள் வளர்க்கலாம்:

உங்கள் கழிவறை பெரியதாக இருந்தால் வீட்டினுள் வளரக்கூடிய ஒரு சில தாவரங்களை கழிவறைக்குள் வளர்க்கலாம் இதனால் கழிவறையிலுள்ள காற்று சுத்தமடைந்து துர்நாற்றம் குறையும்.

நறுமண எண்ணை:

நல்ல நறுமணமிக்க எண்ணையும் கழிவறை துர்நாற்றத்தை நீக்க உதவும். அதற்கு அந்த எண்ணெயை இரவில் படுக்கும் முன், உங்கள் கழி வறையின் மூலைகளில் தெளித்து விட வேண்டும்.


Natural Ways To Get Rid Of Bathroom Odours  How to Remove Toilet Odors Naturally, kalivarai natram poga eliya valigal, remove toilet smell tips, general tips in tamil, lifehacks in tamil, toilet smells really bad, smelly toilet problem, sutham sugam tharum, டாய்லெட் நாற்றம், கழிவறை

இந்த 'உங்கள் கழிவறையில் வீசும் துர்நாற்றத்தை நீக்கவும், கழிவறையை அதிக செலவில்லாமல் சுத்தம் செய்யவும் சில எளிய வழிகள்..!!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
உங்கள் கழிவறையில் வீசும் துர்நாற்றத்தை நீக்கவும், கழிவறையை அதிக செலவில்லாமல் சுத்தம் செய்யவும் சில எளிய வழிகள்..!!
Tamil Fire
5 of 5
கழிவறையில் வீசும் துர்நாற்றத்தை நீக்கவும், கழிவறையை அதிக செலவில்லாமல் சுத்தம் செய்யவும் சில எளிய வழிகள்..!! ( Toilet smell removal tips in ...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment