சிறுநீரக கற்களை அகற்ற, அவை மீண்டும் வராமல் பாதுகாக்க நவீன சிகிச்சை முறைகள் | Tamil247.info
Loading...

சிறுநீரக கற்களை அகற்ற, அவை மீண்டும் வராமல் பாதுகாக்க நவீன சிகிச்சை முறைகள்

சிறுநீரக கற்களை அகற்ற மற்றும் கற்கள் மீண்டும் வராமல் பாதுகாக்க நவீன சிகிச்சை முறைகள் (Siruneega karkkalai agattra mattrum siruneeraga karkkal meendum varaamal paadhugakka naveena sigichai muraigal)
சிகிச்சை பெற்று குணம் அடைந்தவர்கள், மீண்டும் சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுத்துக் கொள்ள அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதன் மூலம் அதிக அளவு சிறுநீர் வெளியேறி உருவாகும் கற்கள்கூட நீரில் கரைந்து வெளியேறிவிடும். 

சிறுநீரக கற்கள் எதனால் ஆனவை? 


கால்சியம், மக்னீசியம் ஆகியவற்றின் ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால் இந்தக் கற்கள் உருவாகக்கூடும். பல்வேறு காரணங்களால் உப்பு திரண்டு சிறுநீர்ப் பாதையிலோ  அல்லது  சிறுநீரகங்களிலோ சிறிய, பெரிய கற்கள் உருவாகக்கூடும்.
siruneeraga karkkal vadivam, kidney stone shape and size picture

 kidney stones image shape size

சிறுநீரகத்தில் கற்கள் அல்லது சிறுநீரக பாதையில் கல் அடைப்பு வந்துவிட்டால் எவ்வாறு அறிந்துகொள்ளலாம்?


சிறுநீரகத்தில் கற்கள் வந்துவிட்டால்: சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று ஏற்படும்.  காய்ச்சல், வயிற்றின் கீழ்ப் பகுதியில் வலி ஆகியவை இருக்கும். கீழ் சிறுநீர்ப் பாதையை நோய்த் தொற்று பாதிக்கும் போது அடிக்கடி சிறுநீர் அவசரமாக கழிக்கும் உணர்வு ஏற்படும். அப்போது எரிச்சல், அடிவயிற்றில் வலி தோன்றும். இந்த அறிகுறிகள் மூலம் சிறுநீரக் கல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.
siruneer paadhai kal, siruneer kuzhai, anatomy, vazhi adaippu, block in kidney, urinary track pain, pain in kidney damage

சிறுநீரக பாதையில் கல் அடைப்பு வந்துவிட்டால்: சிறுநீரகக் கற்கள் சிறுநீரக பாதை அடைப்பை ஏற்படுத்தும்போது சிறுநீரக நீர் வீக்கம் உண்டாகி வயிற்றில் கட்டியாக உணரக்கூடும். அறிகுறி காட்டாத, நாள்பட்ட சிறுநீரகக் கற்கள் இருந்தால் அல்லது தனியொரு சிறுநீரகத்தில் அடைப்பு உண்டாகும்போது சிறுநீரின்மை தோன்றும்.

சிறுநீரக கற்களின் அளவும் தானாக வெளியேறும் தன்மையும்:

சிறுநீரக கற்கள் தானாகவே வெளியேறுமா?   


  • சிறுநீர்க் குழாயின் கீழ்ப்பகுதியில் காணப்படும் 4 மில்லி மீட்டர் அளவினும் சிறிய கற்கள் 90 சதவீதம் தானாகவே கீழிறங்கி வெளியேறி விடுகின்றன. 
  • 6 மில்லி மீட்டர் அளவைவிடப் பெரிய  கற்களில் 20 சதவீதம் மட்டுமே அவ்வாறு வெளியேற முடிகிறது.

சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?


குடிநீர்தான் சிறந்த இயற்க்கை சிகிச்சை: சிறுநீரகக் கற்கள் பாதிப்பு அறிகுறிகள் உள்ளோர் மருத்துவரின் ஆலோசனைப்படி, முதல் கட்டமாக 3 முதல் 4 லிட்டர் தண்ணீரை தினமும் குடிப்பது மிகவும் அவசியம். இதன் மூலம் சிறுநீர் அதிகம் வெளியேறி சிறுநீரகக் கற்களும் வெளியேறக்கூடும். வாழைத் தண்டு, மாற்று மருந்துகள் சிறுநீர்ப் பெருக்கியாக மட்டுமே செயல்படுகின்றன. எனினும் வலி அதிகமாக இருந்தால் வலி நிவாரண மருந்துகளை நோயாளிக்கு அளிப்பது அவசியம்.

சிறுநீரக கற்களை அகற்ற நவீன சிகிச்சை முறை:

அண்மைக் காலமாக சிறுநீரகச் சிகிச்சையில் துளைவழி கல் உடைத்தல் சிகிச்சை முக்கியமாகக் கையாளப்படுகிறது. சிறுநீர்க் குழாயின் கீழ்ப்பகுதியில் உள்ள கற்களை, சிறுநீர்தாரை, சிறுநீர்ப்பை வழியாக சிறுநீர்க் குழாயில் வலைக்கூடையை உள்ளே செலுத்தி அல்லது சிறுநீர்க் குழாய்க்குள் உள்நோக்கி செலுத்தி, கிடுக்கிகள் மூலம் குழாயில் உள்ள கற்களை வெளியே எடுப்பதே நவீன சிகிச்சை முறையாகும்.

சிறுநீரக கல்லை உடைத்து வெளியேற்றும் லேசர் சிகிச்சை முறை:  

லேசர் சிகிச்சை மூலம் சிறுநீர்ப் பாதையில் அடைப்பு இல்லாவிட்டால், கல் நொறுக்கி சாதனங்கள் மூலம் அதிர்வலைகளை ஒருமுனைப்படுத்தி உட்செலுத்துவதன் மூலம், சிறுநீரகங்களுக்கோ, குழுவுள்ள திசுக்களுக்கோ வேறு எந்த உறுப்புகளுக்குமோ பாதிப்பற்ற முறையில் கற்களை மட்டும் அதிர்வலைகள் (லேசர்) தாக்கிப் பொடியாக்கி, அவற்றை சிறுநீரில் கரைத்து வெளியேற்றும். உடலில் உருவான கற்களை அகற்றி அல்லது வெளியாகும் கற்களைப் பரிசோதிப்பதன் மூலம் தேவையான தடுப்பு நடவடிக்கைகளைச் செய்து கொள்ள முடியும்.

சிகிச்சை பெற்று குணம் அடைந்தவர்கள், மீண்டும் சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுத்துக் கொள்ள அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதன் மூலம் அதிக அளவு சிறுநீர் வெளியேறி உருவாகும் கற்கள்கூட நீரில் கரைந்து வெளியேறிவிடும். அதிலும் குறிப்பாக கோடைக் காலத்தில் உடலுக்குத் தேவையான நீரைக் குடிப்பதன் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
siruneega karkkalai agattra mattrum siruneeraga karkkal meendum varaamal paadhugakka naveena sigichai muraigal, Siruneeragam, siruneeraga kal, karkkal, uppu, kidney stone, how to remove kidney stone naturally, water is good to remove kidney stone, natural treatments in tamil, iyarkkai vaithiyam muraigal, siruneer paadhai kal, siruneer kuzhai, vazhi adaippu, block in kidney, urinary track pain, pain in kidney, water treatment in medicine, simple cure, Home treatment and cure methods to remove kidney stone without medication.

Loading...

எனதருமை நேயர்களே இந்த ' சிறுநீரக கற்களை அகற்ற, அவை மீண்டும் வராமல் பாதுகாக்க நவீன சிகிச்சை முறைகள்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
சிறுநீரக கற்களை அகற்ற, அவை மீண்டும் வராமல் பாதுகாக்க நவீன சிகிச்சை முறைகள்
Tamil Fire
5 of 5
சிறுநீரக கற்களை அகற்ற மற்றும் கற்கள் மீண்டும் வராமல் பாதுகாக்க நவீன சிகிச்சை முறைகள் (Siruneega karkkalai agattra mattrum siruneeraga karkka...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment