Veettai pooti vittu veliyoor sellum mun kavanikka vendiyavaigal - விடுமுறை நாட்களிலோ அல்லது என்தேனும் சுப காரியங்களுக்கோ குடும்பத்துடன் வெளியூர் செல்லும் போது வீட்டை பூட்டிவிட்டு செல்லுவோம். நாம் வீட்டில் இல்லாத போது வீட்டை திருடர்களிடமிருந்தும், வேறு ஏதேனும் விபத்து நேராமலும் பாதுகாக்க என்ன செய்யலாம்..
1. தினமும் காலையிலோ அல்லது மலையிலோ உங்கள் வீடு தேடி வரும் செய்தித்தாள்களை வெளியூரிலிருந்து திரும்பி வரும் வரை போட வேண்டாமென பேப்பர் போடுபவரிடம் சொல்லிவிடுங்கள்.
2. பால்காரரிடம் திரும்பி வரும் வரை பால் போட வேண்டாம் என சொல்லிவிடுங்கள்.
3. ஜன்னல் கதவுகளை மூடி உள்பக்கமாக தாழிடுகள்.
4. விலை உயர்ந்த நகைகளை பேங்க் லாக்கரில் பாதுகாப்பாக வைத்துவிடுங்கள்.
5. அருகாமையில் வசிப்பவர்களிடம் தாங்கள் ஊருக்கு போகும் விஷயத்தையும் திரும்பி வர எவ்வளவு நாள் பிடிக்கும் என்பதையும் கூறுங்கள்.
6. தபால் ஏதும் வந்தால் பக்கத்துவீட்டுக்காரரிடம் வாங்கி வைக்க சொல்லுங்கள்.
7. வெளியில் ஏணி வைத்திருந்தால் அதை ஒரு மறைவான அறையினுள் வைத்து பூட்டுங்கள்.
8. மின்சாரத்தின் மெயின் சுவிட்சை அனைத்து விட்டு வெளியூருக்கு செல்லுங்கள்.
9. சமையல் எரிவாயு சிலிண்டரில் உள்ள ரெகுலேட்டரை ஆப் செய்துள்ளோமா என சரி பார்த்துகொள்ளுங்கள்.
10. வாசர் கதவு மற்றும் உள்பக்க அறைகளின் கதைவை பூட்டிய பிறகு சரியாக பூட்டபட்டுள்ளதா என சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
11. வீட்டின் வாயிலில் ஒன்று அல்லது இரண்டு ஜோடி செருப்பை போட்டு வையுங்கள்.
12. வெளி கதவில் வீடு பூட்டியிருப்பது தெரியாதவகையில் ஒரு ஸ்க்ரீன் போட்டு மறைத்து வைப்பது நல்லது.
vettai padhugappaaga vaithirukka, thirudu pogamal padhugakka vazhigal, thirudan payam, vettai potti vittu veliyoor sellum mun kavanikka vendiya sila yosanaigal, nalla yosanai, tips for traveling in tamil, thiruttu bayam, poottu, thazhppal, nagai bank locker, thiruvizha sella nerndhaal, pottiya kadhavu, 12 tips to save your house from theft, loss, gold theift, burglar , Tamil tips, pathukappu
எனதருமை நேயர்களே இந்த 'வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்வதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.
இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
Follow us on: Facebook, Google+
லேபிள்கள்: Awareness, General Tips