26 செப்டம்பர் 2015

, ,

துணிகளில் ஏற்ப்படும் கரைகளை நீக்கும் வழிகள் சில

இங்க் கரை, வியர்வை கரை, எண்ணை கரை, ரத்த கரை, சுவிங்கம் கரை, பென்சில் கரை, கோந்து கரை இப்படி பலவித கரைகளை நீக்கும் வழிகள், பயனுள்ள குறிப்புகள், payanulla kurippugal, karai pokkum vazhigal, ink karai, blood stain, viyarvai karai, pencil karai, oil karai, bubble chewing gum karai poga tips in tamil, cloths cleaning tips in tamil


நமக்கு தெரிந்தோ தெரியாமலோ நாம் உடுத்தும் துணிகளில் கரை பட்டுவிடுகிறது. இங்க் கரை, வியர்வை கரை, எண்ணை கரை, ரத்த கரை, சுவிங்கம் கரை, பென்சில் கரை, கோந்து கரை இப்படி பலவித கரைகளை நீக்கும் வழிகள் சிலவற்றை பயனுள்ள குறிப்புகள் அடங்கிய புத்தகங்களிலிருந்து எடுத்து உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.  (Cloth stain removal tips in tamil)

payanulla kurippugal, karai pokkum vazhigal, ink karai, blood stain, viyarvai karai, pencil karai, oil karai, bubble chewing gum karai poga tips in tamil, cloths cleaning tips in tamil

இரும்பு துரு கரை போக:

துணிகளில் இரும்பு துரு கரை வந்துவிட்டால் கரை போக எலுமிச்சை சாற்றையும் உப்பையும் போட்டு தேய்த்து துவைக்கலாம்.

இங்க் கரை போக:

பொதுவாக பள்ளி செல்லும் பிள்ளைகள் கடைசி நாளில் ஒருவருக்கொருவர் இங்கை சட்டைகளில் அடித்து கொண்டாடுவது வழக்கம். அப்படி இங்க் கரை பட்ட துணிகளில் இருந்து இங்க் கரையை எடுக்க கரை பட்ட இடத்தில் எலுமிச்சை சாற்றை தேய்த்து சிறிது நிமிடம் கழித்து துவைக்கலாம்.

துணிகளில் படும் ரத்த கரை போக:

துணிகளில் ரத்த கரை பட்டால் கரை பட்ட இடத்தில் உப்பு போட்டு கரைத்த சுடு நீரை அந்த இடத்தில் விட்டு துவைக்கவும்.

வியர்வை கரை போக:

ஒரு கப் சுடுநீரில் 2 டேபிள் ஸ்பூன் உப்பை கலந்து வியர்வை கரைகள் மீது கரை நீங்கும் வரை தடவி வைக்கவும். பிறகு துணிகளை எப்போதும் போல் துவைக்கவும்.

எண்ணை கரை பட்டால் கரை போக:

துணிகளி எண்ணை கரை பட்டால் பட்ட இடத்தில் பெட்ரோல் அல்லது அல்கஹால் தடவி பிறகு சோப்பினால் துவைத்தால் கரை போய்விடும்.

பழக்கரை போக:

பழங்கள் மற்றும் ஐஸ் கிரீம் கரை பட்டால்,  கரை போக அந்த இடத்தில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து விட்டு சிறிது நேரம் ஊற வைத்து பிறகு கசக்கி தண்ணீரில் துவைக்கவும்.

பென்சில் கரை போக:

குழந்தைகள் துணிகளில் பென்சில் அல்லது கலர் பென்சில் கரை பட்டுவிட்டால் துணிகளை துவைப்பதற்கு முன் பென்சில் அழைக்கும் எரேசர் கொண்டு அழித்துவிட்டு துணிகளை துவைக்கலாம்.

கோந்து கரை பட்டால்:

துணிகளில் கோந்து கரை பட்டால் பட்ட இடத்தை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு துவைக்கவும்.

துணிகளில் சுவிங்கம் ஒட்டிகொண்டால்:


சிறுவர்கள் சுவிங்கத்தை விரும்பி சாப்பிட்டுவார்கள், சாப்பிட்ட பப்ல் கம் அவர்களின் துணிகல் மீது ஒட்டிக்கொண்டு விடும். அப்படி ஒட்டிகொண்டால் வெறும் கையால் சுரண்டி எடுக்க முயற்சி செய்தால் கண்டிப்பாக முற்றிலும் எடுக்க முடியாது..

  • Tip One: முதலில் சுவிங்கம் ஒட்டியுள்ள இடத்தின் மீது ஒரு கார்ட்போர்ட் அட்டையை வைத்து அதை அப்படியே திருப்பி போட்டு கம் ஒட்டி இருக்கும் இடத்திற்கு அருகில் துணி மீது மீடியம் ஹீட் உள்ள அயன் பாக்ஸ் வைத்து தேக்க வேண்டும், பிறகு மெது மெதுவாக கம் உள்ள இடத்தின் மீது தேய்க்க வேண்டும், அதிக சூட்டில் அயன் செய்தால் கம் அதிகமாக இளகி பிறகு எடாகுடமாகிவிடும் ஜாக்கிரதை. இப்படி செய்வதால் துணின் ஒட்டியுள்ள சுவிங்கம் அட்டையில் ஒட்டிக்கொண்டுவிடும். துண்களில் இருந்து எளிதில் பிரித்து எடுத்து விடலாம்.
  • Tips Two: கம் உள்ள இடத்தில் ஐஸ் கட்டியை கொண்டு கம் கெட்டியாக உடையும் அளவிற்கு மாறும் வரை அதன் மீது தேய்க்க வேண்டும். சுவிங்கம் கெட்டியான பிறகு ஒரு கத்தியை வைத்து ஒட்டியுள்ள சுவிங்கத்தை சுரண்டி எடுத்துவிடலாம்.
 மேலும் படிக்க: பயனுள்ள குறிப்புகள்.. 
இங்க் கரை, வியர்வை கரை, எண்ணை கரை, ரத்த கரை, சுவிங்கம் கரை, பென்சில் கரை, கோந்து கரை இப்படி பலவித கரைகளை நீக்கும் வழிகள், பயனுள்ள குறிப்புகள், payanulla kurippugal, karai pokkum vazhigal, ink karai, blood strain, viyarvai karai, pencil karai, oil karai, bubble chewing gum karai poga tips in tamil, cloths cleaning tips in tamil  
Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'துணிகளில் ஏற்ப்படும் கரைகளை நீக்கும் வழிகள் சில' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90