பருக்கள் வராமல் தடுக்கவும், பருவினால் ஏற்ப்பட்ட வடுவைப் போக்கவும் வழி உள்ளதா? | Tamil247.info

பருக்கள் வராமல் தடுக்கவும், பருவினால் ஏற்ப்பட்ட வடுவைப் போக்கவும் வழி உள்ளதா?

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Parukkal varaamal thadukka, Muga paruvaal erppadum vaduvai pokka vazhi:


முகத்தில் பருக்கள் வருவதை விட, அவை விட்டுச் செல்லும் வடுக்கள்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பருக்கள் வந்ததால் முகத்தில் இருக்கும்  வடுக்களை நிச்சயமாக போக்க முடியும்.
Parukkal varaamal thadukka, Muga paruvaal erppadum vaduvai pokka vazhi, muga paru, mugatthil karuppu thazhumbu, Acne, pimples, excessive pimples, Teenage Acne, ways to handle pimples, health tips in tamil, Natural treatments in tamil, paru thollai neenga vazhi,paru thazhumbu

பருவினால் ஏன் வடுக்கள்(தழும்புகள்) ஏற்படுகின்றன?


வடுக்கள் ஏன் ஏற்படுகின்றன  என்றால், முகப்பரு வந்ததும் அதனை நகத்தால் கீறுகிறார்கள். நகம் பட்டாலே வடு விழுந்து விடும். அதனை உடனடியாக போக்க முடியாது. சிறிது காலம் பிடிக்கும்.

பரு வந்தால் எப்படி கையாள்வது?
சிலருக்கு பருக்கள் வந்து முகத்தில் சிறிய பள்ளங்கள் ஏற்பட்டிருக்கும். சிலரது முகத்தைப் பார்த்தால் தேங்காய் சிறட்டை போல் இருக்கும்!

முகப்பரு வந்தால் அதனை நீக்குவதற்கு முன்பு, ஐஸ் கட்டிகளால் ஒத்தடம் கொடுத்த பிறகு அதில் கை வைப்பது நல்லது. இதனால் பருக்களின் வழியாக இரத்தம் வெளியாவது தவிர்க்கப்படுகிறது. பொதுவாக பருக்கள் வந்தால் அது முற்றிய நிலையில் அதில் இருக்கும் வெள்ளையான திரவத்தை எடுத்து விடுவது மிகவும் முக்கியம். அதிலும் மற்ற இடங்களில் அவை படாமல் எடுக்க வேண்டியதும் அவசியமாகிறது.

பருக்கல் எவ்வாறு பரவுகின்றன?


மேலும், பருவை நீக்குவது என்பதை கவனமாக செய்ய வேண்டும். பருவை கைகளால் கிள்ளி எடுத்து விடுகிறோம். அதில் இருந்து வெள்ளையான திரவம் வெளியான பிறகு இரத்தம் வரும். அதனை துடைத்துப் போட்டு விட்டு அப்படியே விட்டுவிடக் கூடாது. அப்படி விட்டு விட்டால் தான் பருக்கள் பரவுகிறது.

பருக்களை நீக்கியதும் என்ன செய்யவேண்டும்?


பருக்கள் வந்தால் அதனை நீக்கியதும் உடனடியாக அதனை சுத்தப்படுத்தி விட்டு அதில் ஏதாவது ஒரு பேஸ் பேக்கை(Face pack) போட வேண்டும். அப்படி போடா விட்டால், பருவில் ஏற்பட்ட துளைக்குகள் தூசு, துகள்கள் போய் பெரிய பிரச்சினையாகி விடும்.

பருவை மட்டும் நீக்கி விட்டாலும், உள்ளுக்குள் இருந்து சீழ் போன்ற ஒன்று வந்து கொண்டே இருக்கும். அதனை எவ்வளவுதான் எடுக்க முடியும். ஒரு வேளை அது சருமத்திற்கு அடியிலேயே தங்கி விட்டாலும் பிரச்சினையாகிவிடும். அதிகமாக எடுத்தாலும் பரு இருந்த இடத்தில் வடு ஏற்பட்டு விடும். எனவே பருவை அழகுக் கலை நிபுணரிடம் சென்று நீக்கிக் கொள்வதை விட, அதிகமாக பரு இருப்பவர்கள் ஒரு மருத்துவரிடம் சொல்வதுதான் நல்லது.

முகப்பரு வந்தவர்கள் அதிலும், அதிகமாக முகப்பருவினால் பாதிக்கப்படுபவர்கள் தங்களது முகத்தை நல்ல முறையில் பராமக்க வேண்டும். பருக்கள் வருபவர்கள் எந்த விதமான க்ரிம்களையும் பயன்படுத்தக் கூடாது. சிலரது முகத்தில் விரலைக் கூட வைக்க முடியாது.
அந்த அளவிற்கு வலி எடுக்கும். அவர்கள் அழகுக் கலை நிபுணரிடம் செல்வதை விட, ஒரு தோல் மருத்துவடம் செல்வதுதான் நல்லது.

அழகுக் கலை நிபுணரால் எல்லாமே செய்ய முடியாது.
எனவே, அவர்களுக்கு அடிப்படையில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை மருத்துவர் முலம் அறிந்து கொண்டு அதற்கு முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

பருக்களினால் ஏற்பட்ட வடு நிச்சயமாக போகும். அதற்கு ஒரு நீண்ட சிகிச்சை உள்ளது.
Parukkal varaamal thadukka, Muga paruvaal erppadum vaduvai pokka vazhi, muga paru, mugatthil karuppu thazhumbu, Acne, pimples, excessive pimples, Teenage Acne, ways to handle pimples, health tips in tamil, Natural treatments in tamil, paru thollai neenga vazhi,paru thazhumbu
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'பருக்கள் வராமல் தடுக்கவும், பருவினால் ஏற்ப்பட்ட வடுவைப் போக்கவும் வழி உள்ளதா?' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
பருக்கள் வராமல் தடுக்கவும், பருவினால் ஏற்ப்பட்ட வடுவைப் போக்கவும் வழி உள்ளதா?
Tamil Fire
5 of 5
Parukkal varaamal thadukka, Muga paruvaal erppadum vaduvai pokka vazhi: மு கத்தில் பருக்கள் வருவதை விட, அவை விட்டுச் செல்லும் வடுக்கள்தான...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News