05 ஜூலை 2015

, ,

உப்பும்.. நமது தமிழர் கலாச்சாரமும்.

Salt with tamil culture and history, uppu culture, uppu thagalvalgal,tamil culture and traditions, interesting details about salt in tamil


உப்பு என்றால் தமிழில் சுவை என்று பொருள் படும்,  இதில் இருந்துதான் இனிப்பு,  கசுப்பு,  துவர்ப்பு போன்ற சுவைகளுக்கு இவ்வாறு பெயர் வந்தது.

உப்பு விளையும் களத்திற்கு "அளம்" என்று பெயர். பண்டை காலத்தில் வேலை செய்தோருக்கு மாற்றாக "சம்பா" (நெல் ) வும் உப்பையும் (அளத்தில் விளைவது ) கொடுத்ததால்,  அது பின்னாளில் "சம்பளம்" என்று பெயர் ஆகி விட்டது. ஆங்கிலத்தில் "salt" என்பது "Salary" ஆகிவிட்டதாக கூருகிறார்கள்.
Salt with tamil culture and history, uppu culture, uppu thagalvalgal, tamil traditions


தமிழக கலாச்சாரத்தில்,  உப்பு என்பது உறவின் உறவின் தொடர்ச்சிக்கு உள்ள குறியீடாக கருதுகிறார்கள். அதனால் தான் திருமண மற்றும் வீட்டு சுபகாரியங்கள் நிகழ்சியில்,  உறவினருக்கு உணவு வைப்பதர்க்கு முன்,  இலையில் உப்பை வைக்கிறார்கள்,  உறவு விட்டு போக கூடாது என்று. அதைபோல் ஒருவர் இறந்து போனால் அவர்களுக்கு படைக்கும் உணவில் "உப்பை" சேர்க்காமல் படைக்கும் பழக்கம் இன்றும் தமிழகத்தில் உள்ளது.

அதனால் தான் என்னமோ, ஒருவரை கொலை செய்யும் போது கூட இனிப்பில் விஷத்தை கலந்து கொடுத்து கொன்று விடிகிறார்கள். விவேக் படத்தில் பாட்டி ஒன்று தாத்தாவுக்கு பாயசம் கொடுத்து சாக அடித்த காட்சி நினைவுக்கு வருகிறது

புது பெண் தன் கணவன் வீட்டுக்கு போகும் போது ஓலை கூடையில் உப்பை எடுத்து கொண்டு வீட்டில் நுழைகிறாள். அது போல புது மனை புகு விழாவில் உப்பையும்,  அரிசியும் அன்பளிப்பாக உறவினர்கள் .கொடுத்து இருந்துருகிறார்கள். இப்பொழுது அது போல கொடுத்தால் உப்பையும் அரிசியும் நம் தலையில் கொட்டி விடுவார்கள் .

"உப்பு பெறாத வேலை" அதாவது பயன் பெறாத வேலை,  உணர்சியற்றவனை சாப்பாட்டில் உப்பு போட்டுதான் சாப்பிடுறியா?" அப்புறம் "உப்பிட்டவனை உள்ளவரை நினை"..

மக்களுக்கு அயோடின் பற்றாக்குறை இருந்த பொது அனைத்து மக்களுக்கும் அயோடின் சென்றடைய உப்பையே பயன்படுத்துகிறது அரசு, உப்புடன் அயோடினை கலந்து விற்பனை செய்யபடுகிறது.

இப்படி தமிழ் மக்களின் கலாச்சாரத்தோடு உள்ள உப்பை,  இன்று நம் தமிழக அரசாங்கம் "அம்மா உப்பு" ஆக கொடுத்து வருகின்றது. இது மக்களிடம் ஒரு உறவை ஏற்படுத்தும் என்று நினைகிரார்களோ என்னமோ. 2016 ரில் தான் தெரியும்.

உப்பு... சமிபத்தில் உப்பை பற்றி நான் படித்த தகவல்..

தகவல்கள்: பண்பாட்டு அசைவுகள் - தொ.பரமசிவம்

Uppu endraal tamilil suvai enru porul padum, ithil irunthuthaan inippu, kasappu, thuvarppu ponra suvaigalukku ivvaaru peyar vanthathu.

Uppu vilaiyum kalatthirku "alam " enru peyar. Pandai kaalatthil velai seythorukku maatraaka "sampaa " (nel) vum uppaiyum (alatthil vilaivathu) kodutthathaal, athu pinnaalil "sampalam " enru peyar aaki viddathu. aankilatthil "salt " enpathu "Salary " aakividdataaka koorugiraarkal.

Tamilaga kalaachaaratthil, uppu enpathu uravin thodarcchikku ulla kuriyidaaka karuthukiraarkal. Athanaal thaan thirumana matrum viddu subakaariyankal nikalchiyil, uravinarukku unavu vaippatharkku mun, ilaiyil uppai vaikkiraargal, uravu vittu poga koodaathu enru. Athaipol oruvar iranthu ponaal avarkalukku padaikkum unavil "uppai " serkkaamal padaikkum palakkam inrum tamilakatthil ullathu.


Atanaal thaan ennamo, oruvarai kolai seyyum pothu kooda inippil visatthhai kalanthu kodutthu konru vidigiraarkal. Vivek padatthil paatti onru thaatthaavukku paayasam kodutthu saaga adittha kaadhi ninaivukku varukirathu

puthu pen tan kanavan veettukku pogum pothu olai koodaiyil uppai edutthu kondu veetil nulaigiraal. Athu pola puthu manai puku vilaavil uppaiyum, arisiyum anpalippaaga uravinargal.Kodutthu irunthirukiraarkal. Ippoluthu athu pola kodutthhaal uppaiyum arisiyum nam thalaiyil kotti viduvaarkal.

 "Uppu peraatha velai " athaavathu payan peraatha velai, unarchiyatravanai saappaattil uppu pottutaan saappiduriyaa? " Appuram "uppittavanai ullavarai ninai "..


makkalukku iodine patrraakkurai irundha podhu anaitthu makkalukkum iodine sendradaiya uppaiye payanbaduthugiradhu arasu, uppudan iodineai kalandu virppanai seiyyapadugiradhu.

Ippadi tamil makkalin kalaachaaratthodu ulla uppai, inru nam tamilaga arasaangam "ammaa uppu " aaga kodutthu varuginrathu. Ithu makkalidam oru uravai erpadutthum enru ninaikiraarkalo ennamo. 2016 il thaan theriyum.

Uppu... samipatthil naan padittha thakaval uppai patriyathu..

Tagavalgal: Panpaaddu asaivukal - tho.Paramasivamஎனதருமை நேயர்களே இந்த 'உப்பும்.. நமது தமிழர் கலாச்சாரமும்.' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News